Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் முனசிங்க திட்டம் அமலாக்கப் படுகிறதா..?

Featured Replies

ஜூன் 26, 2011

Font size:

சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் யாழ் குடா நாடு சிங்கள இராணுவத்தின் பிடிக்குள் சென்ற பிறகு கொழும்பு அரசின் ஆட்சிப் பிரதிநிதியாகச் சரத் முனசிங்க என்ற தளபதி நியமிக்கப்ட்டார். ஆட்சிப் பொறுப்புக்ளை ஏற்ற சில காலத்திற்க்குப் பிறகு இவர் ஒரு புதிய இன ஒருங்கிணைப்புத் திட்டத்தை அமலாக்கத் தொடங்கினார்.

உண்மையில் இந்தச் திட்டத்திற்கு வித்திட்டவர் அதிபர் சந்திரிக்கா என்பது காலம் கடந்த பிறகு தெரியவந்தது. சந்திரிக்கா தனது இராணுவத் தளபதிக்கு வழங்கிய திட்டம் பின்வருமாறு. யாழ் குடாவில் நிலைகொண்டுள்ள 40,000 படையினரில் பாதிப் பங்கினராவது தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்ய வேண்டும்.

இராணுவம் ஆக்கிரமிக்கும் நாடுகளில் இப்படியான திருமணங்கள் நடப்பது வழமை. யப்பானை ஆட்சி செய்த அமெரிக்கப் படையினர் அந்த நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்தார்கள். அமெரிக்க இராணுவம் நிலைகொண்டுள்ள ஒகிநாவா (okinawa) தீவுகளில் இப்படியான உறவுகள் காணப்படுகின்றன.

திருமணம் செய்யும் வாக்குறுதியை வழங்கி விட்டு ஏமாற்றும் படையினரும் ஏராளம். இவர்கள் விட்டுச் சென்ற குடும்பங்கள் யப்பானில் அமெரேசியன்கள் (amerasians) என்ற பெயரில் வாழ்கிறார்கள். இப்படியான உறவுகள் தாமக ஏற்பட்டன, அமெரிக்க அரசு ஊக்கம் அளிக்கவில்லை .

ஆனால் சந்திரிக்கா அரசு படையினருக்கு இதைப் பணிப்புரையாக வழங்கியது. அது அமலாக்கத் தோல்வியைத் சந்தித்தது. சில திருமணங்கள் நடந்தன என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும். உலகத் தமிழர்கள் நடத்திய பிரசாரம் காரணமாக சரத் முனசிங்க இவ்வாறு கூறும் நிரப்பந்தம் ஏற்பட்டது.

‘நாங்கள் உங்கள் பெண்களைத் திருமணம் செய்வதற்கு வரவில்லை. இதைவிடப் பெறுமதியான வேறு பல வேலைகள் எமக்கு உண்டு. கிடப்பில் போடப்பட்ட சந்திரிக்கா திட்டம் ராஜபக்ச ஆட்சியில் புத்துயிர் பெற்றுள்ளது. ஆளுநர் சந்திரசிறியும் தளபதி மகிந்த ஹத்துறசிங்கவும் அமலாக்கத்திற்குப் பொறுப்பேற்றுள்ளனர்.

ஒரு இனத்தின் அடையாளத்தைச் சிதைப்பதற்கு இதைப் போன்ற நாசகாரத் திட்டங்கள் உதவுகின்றன. வங்காள தேசத்தை ஆட்சி செய்த பாக்கிஸ்தான் படைகள் பாலியல் வலலுறவு மூலம் இன அழிப்பை மேற்கொண்டன. யாழ் மக்களுக்கு ஆபத்து புதிய வடிவம் எடுத்துள்ளது.

http://www.sangathie.com/news/13723/58//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.