Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினரால் கைதுசெய்யப்பட்டோர் விபரம் பொலிஸாரிடம் இல்லை – ஊடகப் பேச்சாளர்

Featured Replies

படையினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்போர் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ளோரின் விபரங்கள் தம்மிடம் இல்லை என்று இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.கைதுசெய்யப்பட்டுத் தடுப்பிலுள்ளவர்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பையடுத்து ஏராளமானோர் வவுனியா, கொழும்பு, பூசா பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்குச் சென்று தமது உறவுகள் பற்றிய விபரங்களைக் கோரியுள்ளனர்.

இவ்வாறு சென்றவர்களில் 7 சதவீதமானோர் மட்டுமே தமது உறவுகள் தொடர்பான விபரங்களைப் பெற முடிந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஆவணப்படம்

சுமார் 1,300க்கும் அதிகமானவர்கள் வவுனியா, கொழும்பு, பூசா பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு வந்து தமது உறவுகள் பற்றிய விபரங்களைத் தேடியதாகவும், 250க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்களும் தமக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுப்பிலுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் பற்றியே இவர்களில் பெரும்பாலோனோர் விசாரித்துள்ளனர். அந்த விபரங்கள் எம்மிடம் இல்லை” என்றார், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜெயக்கொடி.

சிலர் காணாமல்போனோர் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவில் விசாரித்திருப்பதாகவும் தெரியவருகிறது.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பலரையும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தடுத்து வைத்து விசாரித்து வருகிறது.

போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் விபரங்கள் தம்மிடமில்லை என்று அது இப்போது கூறியிருக்கிறது.

'குழந்தையுடன் காத்திருக்கும் தாய் - அப்பா வருவாரா?'

மேலும், தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அவர்கள் பற்றிய விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், எந்தவொரு தனி நபருக்கோ அமைப்புக்களுக்கோ இந்த விபரங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

போர்க்காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானவர்கள் காணாமல்போயிருப்பதாக அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முறைப்பாடு தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு காணாமல்போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு தொடர்ச்சியாக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் கிளிநொச்சியிலும் காணாமல்போனவர்களை மீட்டுத் தருமாறு கோரி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இலங்கையில் போர் ஆரம்பித்த காலத்திலிருந்து வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்தும், கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய சில பாகங்களிலிருந்தும் இவ்வாறு காணாமல்போன பலரும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற விபரம் தெரியாமல் பல பத்து வருடங்களாக அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.

செம்மணிப் பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் உள்ளிட்ட பல சம்பவங்களில் உயிரழந்தவர்களின் விபரங்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படாததால், இவர்களது உறவினர்களுக்கு அவர்கள் தொடர்பான விபரம் இன்னமும் தெரியாமலே இருந்து வருகின்றது.

காணாமல்போனதாகக் கூறப்படும் பலரும் இவ்வாறு பல்வேறு சம்பங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றபோதிலும், அவை உறுதிப்படுத்தப்படாததால், தமது உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாமலே பலரும் இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.

Thanks : www.jaffnatoday.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.