Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'யூரோ'வை கைவிடுகிறது ஜெர்மனி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2009 உலகபொருளாதார வீழ்சியில் இருந்து மீண்டு தன்னை நிலை நிறுத்திய நாடு ஜெர்மனி அவர்களுடைய பொருளாதார அடிப்படை என்பது மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் லாவகரமானது.

யூரோவை ஜெர்மனி கைவிடுவது ஜெர்மனியை பொறுத்தவரை தற்காலிக லாபமாக இருக்குமே தவிர நீண்ட தொலைநோக்கில் பாரிய நஸ்டத்தையே கொடுக்கும் யூரோவை அறிமுகபடுத்துவதில் முன்னின்று உழைத்த நாடு ஜெர்மனி. அவர்களுடைய உற்பத்திக்கு ஐரோப்பிய அனைத்து நாட்டு சந்தைகளும் திறந்த சந்தைகள் ஆகின்றன என்பதன் அடித்தள சிந்தனையே அதற்கு காரணம். ஆனால் பிற ஐரோப்பிய நாடுகளின் சரிவுகளை தாங்க வேண்டி வந்தமை எதிர்பாரத விபத்து.

கிறீசை தமது உல்லாச பிரயாண இடமாக பாவிக்கலாம் என்றுதான் ஐரோப்பிய யூனியன் எடைபோட்டது ஆனால் கிறீஸ்ற்குள் இருந்த விடயங்களை அலசவில்லை. ஸ்பெயின் ஐரோப்பியர்களின் மரக்கறி தேவையை பூர்த்தியாக்கும் என எண்ணினார்கள் பூரண உற்பத்தி இல்லாமை பாரிய சரிவை கொடுக்கிறது. சீனா ஆப்பிரிக்க சந்தைகளை எந்த அடிபாடும் இன்றி லவகமாக கைபற்றி வருகிறது அத்திவாரத்தில் இருந்து சந்தைகளை சீனா கட்டுகிறது................ பொதுவாக இந்த வெள்ளைகாரர்களின் குணமே அடுத்தவனிடம் அடித்துபறிப்பது. ஆப்பிரிக்காவில் மாறி மாறி கொள்ளை அடித்தார்களே தவிர அங்கே பெருகிவரும் மக்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சந்தைகளை உருவாக்கவில்லை. பிறேசில் தென் அமெரிக்க நாட்டு சந்தைகளை கைபற்றி வருகிறது திரைமறைவில் சீனா டைரக்ஸன் வேலை செய்கிறது. அருகிருந்தும் அமெரிக்கா அடாவடிதனமான பேச்சுகளையே அப்பப்ப பேசுகிறதே தவிர எந்த தொலை நோக்கும் இல்லை. தற்போதைய முதலீடுகளே பின்னைய நாட்களின் லாபங்கள் என்பதை சீனா நன்கறிந்து செயலாற்றுகிறது. இவர்கள் இன்னமும் அடிதடி எண்ணத்திலேயே உலாவருகிறார்கள் ஜெர்மனி இதற்கு விதிவிலக்காக இருப்பதற்கு காரணம் கிட்லருடைய பாரிய வீழ்சியும் அதில் இருந்து படித்த பாடங்களும். ஸ்பெயினில் போர்த்துகல்லல் முதலீடுசெய்து உணவு உற்பத்தியை எப்போதோ தொடங்கியிருப்பின் அந்த நாடுகள் இப்போது ஏற்றுமதியை தொடங்கியுpக்குமே?

ஐரோப்பிய பொருளாதாரத்தை வைச்சு பின்னீட்டீங்கள் போங்கோ...............

உலகின் மூன்றில் ஒரு பகுதி பொருளாதாரம் ஐரோப்பாவில் உள்ளது. வரும்காலங்களில் நாலில் ஒன்றாக மாறி, பின்னர் ஐந்தில் ஒன்றாக மாறும் நிலை வந்தால் மட்டுமே யூரோவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

அந்த நிலை வரலாம். காரணம் ஆசிய நாடுகளின் வளர்ச்சி. இந்த நாடுகளுடன் உருசியாவும் பிரேசிலும் தேய்ந்துவரும் அமெரிக்க / ஐரோப்பிய இடங்களை பிடித்து வருகின்றன.

மேலும் ஜி நாடுகளில் ஒன்றான இத்தாலியும் பில்லியன் யூரோ உதவி கேட்டுள்ளது. அதுவும் இன்னும் கூடுதலாக பின்னர் கேட்கும் என்கிறார்கள். மேலும் அயர்லாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல் நாடுகளும் உதவுகள் கேட்கும். அதேவேளை ஓய்வூதிய கொடுப்பனவுகள் ஒரு பெரும் தலையிடியாக மாறிவருகின்றன.

'ஐரோப்பாவை தாக்குவேன்' என பின்லாடன் பாணியில் கடாபியும் கூறியுள்ளார். இது நடந்தால், ஐரோப்பா மேலும் பின்னடைவை சந்திக்கும்.

- ஐரோப்பிய யூனியனில் கிரேக்க நாடு சனத்தொகை அண்ணளவாக 2.5%

- கொடுக்கப்பட்ட அல்லது உறுதியளிக்கப்பட்ட கடன் தொகை 330 பில்லியன்கள் யூரோ (330 x 10 இல் 9 அடுக்கு)

இந்த இரண்டையும் வைத்து பார்க்கும் பொழுது யூரோ பெரியளவில் பாதிக்கப்படாது என கூறப்படுகின்றது.

ஆனால் மேற்கொண்டு வரும் நெருக்கடிகளை தனியார் (வங்கிகள்) உதவியும் தேவை என நிதி அமைச்சர்கள் கூறியமை நெருக்கடியை, வங்கிகள் நெருக்கடியை கூட்டியுள்ளது.

ஜேர்மனிய, பிரெஞ்சு வங்கிகளே அதிகம் கடன் கொடுத்து பின்னர் அதை பெறமுடியாத நிலை வரும் என்றால் அவை மேற்கொண்டு போர்த்துக்கல், ஸ்பெயின் நாடுகளுக்கும் கடன் கொடுக்க அஞ்சும்.

அதேவேளை கூடுதலான வங்கிகள் தமது அறவிடமுடியாக்கடனை பாதுகாக்க காப்புறுதி கொண்டவை (credit swap) , இவை பெரும்பாலும் அமெரிக்க வங்கிகளால் செய்யப்பட்டவை. இதனால் அவையும் பாதிக்கப்படும். இது உலக அளவில் பதிப்பை ஏற்படுத்தலாம்.

மூலம்: S.&P. Warns Bank Plan Would Cause Greek Default

http://www.nytimes.com/2011/07/05/business/global/05iht-euro05.html?_r=1&hp

உலக நாடுகள் மற்றும் நிறுவனங்களின் நிதி நிலைமையை அறிந்து அவைகளின் கடன் செலுத்தும் திறனை கூறும் நிறுவனம் மூடி (Moody).

இது இன்றி போர்த்துக்கல் நாட்டின் சுட்டியை குறைத்து. இன்னுமொரு அளவு குறைக்கப்படும் பட்சத்தில் போர்த்துக்கல்லின் பொருளாதார நிலைமை பாதகமான நிலையில் உள்ளதாகவே கருதப்படும்.

இந்த குறைப்புக்கு போர்த்துக்கலின் பொருளாதார மந்த வளர்ச்சி, அது தனது இரண்டாவது பண உதவியை எதிர்பார்க்கும் நிலைமை என்பன காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

Moody's cuts Portugal to junk

Ratings agency Moody's has downgraded Portugal's government debt, citing the growing risk the country will need a second rescue package and concerns it will not meet its debt reduction targets.

Moody's Investors Service cut its rating on Portugal's debt on Tuesday by one notch to Baa2 from Baa1.

It says that “a further downgrade could be triggered by a significant slippage in the execution of the government's fiscal consolidation program, a further downward revision of the country's economic growth prospects or an increased risk that further support requires private sector participation.”

http://www.theglobeandmail.com/report-on-business/international-news/moodys-cuts-portugal-to-junk/article2087310/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.