Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடக்காத திருமணத்திற்கு சீதனம் பேசப்படுகிறது

Featured Replies

நடக்காத திருமணத்திற்கு சீதனம் பேசப்படுகிறது

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-06-30 15:04:37| யாழ்ப்பாணம்]

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சாத்தியமாகுமா? இவ்வாறு ஒரு மாநாடு கூட்டப்பட்டால், மாநாட்டைக் கூடியவர்களே மகா புத்திசாலிகள் என்று பெயர் எடுப்பர். ஏனெனில், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரச தரப்பும் தமிழர் தரப்பும் பொருத்தமில்லாத பேச்சுக்களையும், பொருத்தமில்லாத சிந்தனைகளையுமே வெளிப்படுத்தி வருகின்றன. இனப்பிரச்சினைக்கான தீர்வு எதுவாக இருக்கவேண்டும் என முன்மொழியும் தமிழர் தரப்புக்கள், தம்பாட்டில் தங்களுக்குத் தெரிந்த வற்றிலிருந்து கருத்துக் கூறுகின்றனர். ஒரு தரப்பு சொல்கிறது பதின்மூன்றாவது திருத்தச் சட்டமூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று. இன்னொரு தரப்புச் சொல்கின்றது பதின் மூன்றாவது திருத்தச் சட்டமூலத்திற்கும் அப்பால் சென்று தீர்வு காண வேண்டும் என்று.

மற்றொரு தரப்புக் கூறுகின்றது தமிழர்களின் தேசியம், சுய நிர்ணயம், மரபுவழித் தாயகம் இப்படி. ஆக, இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது மொழிச் சிறப்புமிக்க கருத்தியலாக இருக்கின்றதே தவிர, யதார்த்தம் உணரப்படுவதாக இல்லை.

இவை யாவும் தமிழர் தரப்பின் கட்சி நிலைமை, சுயநிலைமை, மனநிலைமை என்பன சார்ந்தவை. மறுபக்கத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் பெரும்பான்மை என்ன கூறுகின்றது என நோக்கினால் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அவசியமே இல்லை என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்பு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது என்கிறது. மற்றொரு தரப்பு யுத்தம் முடிந்துவிட்டது. எல்லாமே இந்த நாட்டின் பிரஜைகள். எனவே சிங்களவர், தமிழர் என்ற பேதம் இனித் தேவையில்லை. எல்லா இனமும் ஒற்றுமைப்பட்டு விட்டதால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு தேவையில்லை. இப்படி அங்கு கூறப்படுகின்றது.

உண்மையில் இவ் இரு தரப்பும் நடக்காத திருமணத்திற்கு சீதனம் பேசுகின்றன. இவ்வாறு பேசுவதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருவது போன்ற மாயையை சர்வதேச சமூகத்தில் ஏற்படுத்துவது. இதனை சிங்களத் தரப்புச் செய்ய, தமிழர் தரப்போ தங்களின் அரசியல் பிழைப்புக்காக அவையும் சேர்ந்து கதை விடுகின்றன. இதுவே நிதர்சனம்.

உண்மையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் எண்ணம் இலங்கை அரசிடம் துண்டறக் கிடையாது. இந்த உண்மையைக் கூறுவதை ஆளும் தரப்பு மறைப்புச் செய்தாலும் தமிழர் தரப்பு ஏன்தான் அதை மறைத்து வருகிறதோ தெரியவில்லை.

என்ன செய்வது நடக்காத திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் பொழுதுபோக்குகளும் தேவை என்ற அடிப்படையில் சனங்கள் இவற்றை சகித்துக் கொள்கின்றன. அவ்வளவுதான்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=20522

... தர மாட்டார்கள்! ஏமாற்றுகிறார்கள்! வீணடிக்கும் செயல்! .... எதுவோ நாம் பேசியே ஆக வேண்டும்!!!! எல்லாவற்றையும் தற்போது சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. ... அதற்கு மேல் தமிழ் பேசும் ஓநாய்களும், நரிகளும் கவ்விக் கொண்டு செல்வதை தடுக்கவாயினும் ...

... அது அங்கு தமிழர்களாக உள்ளவர்கள் செய்யட்டும்!! .. அவர்களை உடைப்பதை/சிதைப்பதை விட்டு ... அவர்கள் செய்ய முடியாததை புலத்தில் செய்வோம்!!! ... அநாவசியமாக நாமும் செய்ய வேண்டியவற்றை செய்யாமல் ... அங்கு பிழை பிடிப்பதில் அர்த்தமில்லை????????!!!!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறப்பான பதில்!!!

நல்ல பதில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.