Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு சர்வதேசம் என்றைக்குமே தலையிடிதான் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு சர்வதேசம் என்றைக்குமே தலையிடிதான்

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான மூன்று தசாப்த காலப் போர் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்துள்ளன. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் இலங்கைக்கு என்றைக்குமே பிரச்சினை இருக்கப் போகிறது என்று இலங்கை அரசு நம்புகிறது. இதனால்தான் சர்வதேச புலி ஆதரவாளர்களின் வலையமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக் கையில் மும்முரமாக இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச விடுதலைப்புலிகளின் வலையமைப்பைச் சிதைப்பதற்கு முன்னாள் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை துருப்புச் சீட்டாக இலங்கை அரசு பயன்படுத்தி வருகிறது. வடக்கு, கிழக்குப் புனரமைப்பு அபிவிருத்தி நிறுவனம் என்ற பெயரின் கீழ் சட்ட ரீதியாக ஓர் அமைப்பை பதிவு செய்து அதற்குக் காணிகள் மற்றும் அன்பு இல்லம் போன்ற கட்டங்களை அமைத்துக் கே.பியிடம் கொடுத்துள்ளது இலங்கை அரசு. முன்னாள் போராளிகளின் தாய், தந்தை, சகோதரர்களற்ற போராளிகளையும் அவரிடம் கையளித்துள்ளது.

அரச தரப்புச் சாட்சியாக கே.பி. மாற்றப்படுவாரா?

இவ்வாறு ஓர் அமைப்பாகச் செயற்பட்டு வரும் கே.பி. குறித்து சண்டேலீடர் பத்திரிகைக்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறுகையில், தேவை ஏற்படின் கே.பி. அரச தரப்புச் சாட்சியாக மாற்றப்படுவார். அதன் மூலம் விடுதலைப்புலிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் மேற்கொள்ளும் செயற்பாடுகள் குறித்த சாட்சியாக அவரை மாற்றும் எனத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணி திரளுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சகல தேசப்பற் றுள்ள மக்களையும் கேட்டுள்ளார். நாடு பெற்றுக் கொண்டுள்ள வெற்றியைக் காட்டிக் கொடுத்துப் பயங்கரவாதம் தலை தூக்குவதற்கு உறுதுணை புரிவோருக்கு எதிராகவும் நாட்டைப் பாதுகாப் பதற்கும் மக்கள் மீண்டும் அணிதிரள வேண்டும் எனவும் அவர் நாட்டு மக்களைக் கேட்டுள்ளார். நாட்டின் இறைமையையும் மக்களையும் பாதுகாப்பதற்காக 30 வருட காலத்துக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரை மறந்து செயற்பட்டால் மீட்கப்பட்ட நாடு எம்மிடமிருந்து கை நழுவிப் போய்விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதிகள் எமது நாட்டைப் பிளவுபடுத்தி அதனைத் துண்டாட முயற்சி செய்தனர். தற்போது சர்வதேசத்துக்கூடாக அதனை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

பிரபாகரனுக்கு எதிராகப் போராடிய படையின ருக்கு எதிரான வீடியோக் காட்சிகளைத் தயாரித்துச் சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளனர். படையினர் வெற்றி இதன்மூலம் மலினப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேசமெங்கும் எமது நாடு அபகீர்த்திக்கு உள்ளாகும் வகையில் ஒரு தரப்பினர் செயற்படு கின்றனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சர்வதேச அமைப்பாளர்களைக் கைது செய்வதில் நாட்டம்

சர்வதேசத்தில் இயங்கும் விடுதலைப்புலி ஆதரவாளர்களைக் கைது செய்வதற்காக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட் டுள்ளது. மேற்கெண்டுவரும் செயற்பாடுகளால் இனிமேல் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் இலங்கைத் தமிழர்கள் இலங்கை அரசால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கப் போகிறது. அதாவது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் விசேட இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரால் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நடவடிக்கையில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் பல ஈழத்தமிழர்கள் இலங்கை வரும்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்படலாம் என நம்பப் படுகிறது. இதில் பல அப்பாவி ஈழத்தமிழர்கள் கைது செய்யப்படுவது என்பது தவிர்க்க முடியாத தாகிப் போய்விடும்.இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதி யில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று வெளிநாடுகளில் நீண்டகாலமாக ஈழத்தமிழர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் போர் முடிவடைந்த காலப்பகுதியில் தமது பிறந்த ஊரைப் பார்க்க வருவது தவிர்க்க முடியாததே.

இந்த நேரத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று கருதி அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல அப்பாவித் தமிழ் மக்களைக் கைது செய்யப் போகிறது இலங்கை அரசு. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு வருவது குறைவடைந்து காணப்படுகின்றது. அதாவது லண்டன், நோர்வே, கனடா போன்ற நாடுகளில் இருந்தே இலங்கைக்கு வரும் ஈழத்தமிழர்களின் வருகை குறைவடைந்து காணப்படுகின்றது.

வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கத் திட்டம்

புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலி களின் ஆதரவாளர்களின் வலையமைப்பைச் சிதைப் பதற்கு இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை யில் விடுதலைப்புலிகள் அமைப்பின் சொத்துக்கள் மற்றும் நிதியைக் கைப்பற்றுவதற்கு ஏதுவான வகை யில் நடைமுறையிலுள்ள சட்டத் திருத்தங்களுக்கு அரசு உத்தேசித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் இலங்கை மத்திய வங்கியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு சட்ட மூலத்துக்கான நகல்திட்டமொன்று தயாரித்து முடிக் கப்பட்டுள்ளது. இதனை மத்திய வங்கியின் தகவல் வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கு உரித்தான வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குவதற்கு நிதி சேகரிப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் பிரஸ்தாப சட்டத் திருத்தங்கள் துணை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு ஏதுவான முறையில் நாணயப் பரிவத் தனைச் சட்டம், அந்நிய செலாவணிக் கொடுக்கல் வாங்கல்கள் சட்டம், பயங்கரவாதத்துக்கான நிதியளிப்புத் தடைச் சட்டம் என்பவற்றில் திருத்தங் களைக் கொண்டு வரும் வகையான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. தற்போதைக்கு உத்தேச திருத்தச் சட்ட மூலம் சட்டமா அதிபரின் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருப்ப தாகவும் பிரஸ்தாப தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இலங்கை அரசு மீது வந்து குவிந்துள்ள நிலையில், சர்வதேசத்தில் விடுதலைப்புலிகளின் வலையமைப்பைச் சிதைப் பது என்பது எளிதான காரியமாக இருக்க முடியாது.

அரசு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைய மைப்பைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அப்பாவி ஈழத் தமிழர்கள் தண்டிக்கப்படுவார்களாக இருந்தால் அந்தக் குற்றமும் இலங்கை அரசு மீதே வந்து விழும். பயத்தால் இலங்கை அரசு தனது நகர்வை சர்வதேசத்தில் ஒரு துளியளவு கூட மேற்கொள்ள முடியாத சூழலில் கே.பி. ஊடாக இந்த நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

நெருக்கடி தரும் அரசியல் நகர்வு

சர்வதேசத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்படும் அரசியல் நகர்வுகள் இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்ட யுத்தத்தைவிட இலங்கை அரசுக் குப் பாரதூரமாக இருப்பதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன. போரை விட அரசியல் நகர்வு என்பது எதனையும் உடனடியாகச் செய்து விட முடியாத நகர்வாகும். விடுதலைப் புலிகளின் போராட்டம் தோல்வி கண்ட நிலையில் அரசியல் நகர்வில் உலகப் பரப்பில் இலங்கை அரசை விட விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் களின் அரசியல் நகர்வு மேலோங்கி இருக்கிறது.

உலக நாடுகள் ஒன்றிணைந்து விடுதலைப்புலி களுடனான இறுதிக் கட்டப் போரில் ஈடுபட்டன. அதனால் விடுதலைப் புலிகளின் போராட்டம் தோல்வி கண்டது. ஆனால் புலம்பெயர் தமிழீழ அரசி யல் நகர்வில் உலக நாடுகள் புலம்பெயர் தமிழீழ அரசின் பக்கம் நிற்பதால் இலங்கை அரசு சர்வதே சப் பரப்பில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடி யாத அளவில் அரசியல் நகர்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியல் வெளி தமிழருக்கு மறுப்பு

பேரினவாத அரசின் இராணுவ ஆளுமைக்குள் உள்ள தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக் கோரிக்கையை வலிமை யாக முன்னெடுக்கக் கூட அரசியல் வெளி முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரச பொறிமுறையின் ஊடாகத் தமிழின அழிப்புக்கும் போர் மீறல்களுக்கும் நீதி கிடைக்கப் போவதில்லை. அரசியல் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. எனவே இது விட யத்தில் அனைத்துலக சமூகத்தின் பொறுப்பும் செயல்வலுமிக்க முடிவுகளும் முக்கியமானவை. தமிழ் மக்களைப் பொறுத்தவரை நிபுணர்குழு அறிக்கையும் அது தோற்றுவித்துள்ள பரந்துபட்ட கவனக் குவிப்பும் இன்றைய காலச்சூழலில் நிகழ்ந்துள்ள காத்திரமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான நிகழ்வாகும்.

புலம்பெயர்ந்தோர் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சர்வதேசம்

ருவாண்டாவில் நடந்தேறிய இன அழிப்புக்குப் பொறுப்பானவர்கள் மற்றும் பொஸ் னியா உட்பட்ட முன்னாள் யூகோஸ்லாவிய நாடுகளில் நடந்தேறிய இன அழிப்புப் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் 15 ஆண்டுகள் கடந்த பின்னர் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றமை இலங்கை விவகாரத்திலும் நீண்ட கால அடிப்படையில் சாத்தியப்படக் கூடியது என்ற நம்பிக்கையைத் தரக்கூடியது. இதற்கு அனைத்துலக மனித உரிமை அமைப் புக்களின் அழுத்தத்துடன் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் தொடர் அழுத்தங்களும் அரசியல் மூலோபாயத் திட்டமிடலுடனான இடைவிடாத செயற்பாடுகளும் நடைபெறுகின்றன. இலங்கை அரசைப் பயமுறுத்தும் சக்தி இருக்கின்ற போதுதான் தமிழர்களின் தீர்வு குறித்துப் பேச சிங்கள அரசு முன் வருகின்றது.

இப்பொழுது இலங்கை அரசை அச்சுறுத்தும் சக்தியாகப் புலம்பெயர்ந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் உள்ளனர். இதில் அரசு அக்கறை கொண்டு செயற்படும் நிலையில் ஈழத் தமிழர் களின் பிரச்சினையில் இருந்து அரசு நழுவிவிட முடியாது.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கோரிக்கை களைச் சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே என்றைக்குமே சர்வதேசம் இலங்கை அரசுக்குத் தலையிடியாக இருக்கப் போகின்றது.எனவேதான் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களின் வலைய மைப்பை அழிக்க இலங்கை அரசு தீவிரமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம்தான் இலங்கையில் தமிழர் சக்தியை அழித்துத் தமிழர் தீர்வைப் பற்றிப் பேச முடியாத அளவுக்கு மக்களை அடக்கி வைத்தி ருக்க முடியும் என நினைக்கிறது. புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர் களின் வலையமைப்பைச் சிதைப்பது என்பது ஈழத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற் கொண்ட போரை விடக் கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி - உதயனிணையம்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கோரிக்கை களைச் சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே என்றைக்குமே சர்வதேசம் இலங்கை அரசுக்குத் தலையிடியாக இருக்கப் போகின்றது.

இந்தச் சர்வதேச தலையிடி எப்போதும் இருக்கக் கூடியதாக, பார்த்துக் கொள்ள வேண்டியது எங்கள் அனைவரதும் தலையாய கடமையாகும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.