Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவில் போலி பெற்றோல் :ஆயிரக்கணக்கான வாகனங்கள் பழுது

Featured Replies

அரசாங்கத்தினால் கடந்த மாதம் இறக்குமதி செய்யப்பட்ட 20 ஆயிரம் மெட்ரிக் தொன் லீற்றர் எரிபொருள் பெற்றோல் அல்ல என்றும் அது வேறு வகையான திரவம் என்றும் பரிசோதனையின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த திரவம் பாவனையில் விடப்பட்டமையினால் ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் பழுதடைந்துள்ளன என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுர குமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

பெற்றோல் போன்ற இந்த திரவத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பம்பிகளும் பழுதடைந்துள்ளன. இத்தகைய பாதிப்புக்கு முழுக் காரணம் அரசாங்கமேயாகும். எனவே பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் நட்ட ஈட்டினை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலேயே அக் கட்சியின் எம்.பி அனுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில், எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு கேள்வி அறிவித்தல் முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. அதுவும் எமது நாட்டின் வரையறையின் பிரகாரம் மேற்படி கேள்வி அறிவித்தலானது 25 நாட்களை உள்ளடக்கி யதாகும்.

இவ்வாறு கடந்த மே மாதம் கேள்வி அறிவித்தலின் படி விண்ணப்பித்திருந்த இந்திய நிறுவனம் ஒன்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டு அது நிராகக்கப்பட்டது. பின்னர் பிறிதொரு கேள்வி அறிவித்தலின் மூலம் விண்ணப்பித்த நிறுவனம் ஒன்றுக்கு ஜூன் மாதம் 16 ஆம் திகதி பெற்றோல் தருவதற்கு இணங்கியது. எனினும் 11 ஆம் திகதி எரிபொருள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்த காரணத்தால் 16 ஆம் திகதிக்கு இணங்கப்பட்ட நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகக்கப்பட்டது.

இதனையடுத்து அவசரப்பட்ட அரசாங்கம் ஐக்கிய அரபு இராஜ்யத்துக்கு சொந்தமான சிங்கப்பூல் உள்ள இனொக் எனப்படும் துணை நிறுவனத்திடமிருந்து 20 ஆயிரம் மெட்றிக் தொன் லீட்டர் பெற்றோலை இறக்குமதி செய்தது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படுவதற்கு கேள்வி அறிவித்தல் கோரப்படவில்லை. மேலும் இந்த பெற்றோல் கொலன்னாவை களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டு பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் அது பெற்றோல் அல்ல என்பதும் பெற்றோலை போன்று வேறொரு திரவம் என்றும் கண்டறியப்பட்டது. எபொருள் விநியோகத்திற்கு முன்பதாக அது கப்புகஸ்கந்தையில் சுத்திகரிப்பு செய்யப்படுவதே முறையாகும். ஆனாலும் பெற்றோல் அல்ல என்று தெரியப்பட்ட மேற்படி திரவம் கப்புகஸ்கந்தைக்கு அனுப்பப்படாமலேயே நேரடியாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதனை பாவனைக்குட்படுத்திய வாகன உமையாளர்கள் தற்போது பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டிகள், ஆயிரக்கணக்கான மோட்டார் வண்டிகள், ஆயிரக்கணக்கான கார்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது மேற்படி திரவம் விநியோகிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பம்பிகளும் பழுதடைந்துள்ளன. இவையனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.

உரிய நேரத்தில் கேள்வி அறிவித்தலை அறிவிக்காமை, விண்ணப்பிக்கப்பட்ட கேள்வி அறிவித்தலை நிராகத்தமை, கேள்வி அறிவித்தலே இல்லாது பெற்றோல் என்ற பெயரில் வேறு வகையான திரவத்தை இறக்குமதி செய்தமை, அது பெற்றோல் அல்ல என்பது அறிந்தும் அதனை விநியோகித்தமை மற்றும் கப்புகஸ்கந்தையில் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படாமை என பலதரப்பட்ட குற்றங்களை அரசு இழைத்துள்ளது.

இவ்வாறு சட்டத்துக்கு முரணான வகையிலும் கேள்வி அறிவித்தல் முறைமையை மீறிய வகையிலும் இறக்குமதி செய்தமைக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும்.

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு என்ற நிலைமையை தோற்றுவித்து இவ்வாறு அவசர அவசரமாக கேள்வி அறிவித்தலே இல்லாது அங்கத்துவம் இல்லாத ஒரு நிறுவனத்திடமிருந்து பெற்றோல் இறக்குமதி செய்ததில் எமக்கு பாரியதொரு சந்தேகம் எழுகின்றது.

இதன் பின்னணியில் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கும் தொடர்பிருக்கின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் மேற்படி நிலைமை தொடர்பில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற காரணங்கள் சிறுபிள்ளைத் தனமான வையாகும்.

பெற்றோலில் மழை நீர் கலந்திருப்பதாகவும் எபொருள் நிரப்பு நிலையங்களின் தாங்கிகள் சுத்திகரிக்கப் பட்டிருக்கவில்லை என்பதும் போலியான காரணங்களாகும்.

எனவே பாதிக்கப்பட்ட வாகனங்கள், வாகன உமையாளர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அரசு நட்ட ஈட்டினை வழங்க வேண்டும்.

அரசு இறக்குமதி செய்யப்பட்ட மேற்படி பெற்றோலில் 17 ஆயிரம் மெட்ரிக் தொன் லீட்டர் விநியோகிக்கப்பட்டு விட்டது. எஞ்சியுள்ளது 3000 மெட்க் தொன் லீட்டர் மட்டுமேயாகும் என்றார்.

http://akkinikkunchu.com/new/

சிங்கபூர் பயங்கரவாதி ரோஹானும், ஹெல உறுமைய பயங்கரவாதி சம்பிகவும், பயங்கரவாதி பசிலும் சேர்ந்து செய்த திருவிளையாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் இருந்து மழைத்தண்ணியை இறக்குமதி செய்து.... பெற்றோல் என்று விற்றிருக்கிறார்கள். :o:D:lol:

இன்று உலகச்சந்தையில் அண்ணளவாக 100 அமெரிக்க டாலராக இருக்கும் மசகு எண்ணெய் அடுத்த நாற்பது வருடங்களில் பல மடங்கு உயரும் என எதிர்வு கூறப்படுகின்றது. எனவே போலிபெற்றோல் இன்னும் அதிகமாகவே களைகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.