Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது எதிர்ப்பை மீறி பாராளுமன்ற தெரிவுக்குழுவை அரசு அமைத்தால் தீர்க்கமான முடிவு எடுப்போம்

Featured Replies

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பது தொடர்பில் எமது எதிர்ப்பினை நாம் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். இனப்பிரச்சினை தீர்வுக்கு தெரிவுக்குழு அமைக்கப்படுவதானது ஏமாற்று வித்தையென நாம் தெரிவித்துள்ளோம். இந்த நிலையில் அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையினை பாராளுமன்றத்தில் முன் வைக்குமானால் அது தொடர்பில் நாம் தீர்க்கமான முடிவுக்கு வருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைப்பதற்கான பிரேரணையினை எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் 31 உறுப்பினர்களை உள்ளடக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?, இந்தத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு இடம்பெறுமா என்று கேட்ட போதே மாவை சேனாதிராஜா எம்.பி. மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெவிக்கையில், இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படுவதானது ஏமாற்று வித்தையாகும். இதனை நாம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இதனையும் மீறி அரசாங்கம் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணயினை முன்வைக்குமானால் அதுகுறித்து நாம் ஆராய்வோம்.

பிரேரணை பாராளுமன்றத்தில் வருமுன்னர் கட்சித் தலைவர் கூட்டத்தில் இதுகுறித்து ஆராயப்படும். அவ்வேளையில் நாம் எமது கருத்தை அறிவிப்போம். தற்போது அவசரப்பட்டு கருத்துக் கூறுவதில் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

எனவே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் ஆராய்ந்து உரிய முடிவினை நாம் எடுப்போம் என்றார்.

http://akkinikkunchu.com/new/

கூட்டமைப்பு எந்த முடிவையும் எடுக்க முன்னராக சர்வதேசத்துடன் தமது நிலையை தெளிவுபடுத்தி, அவர்களின் ஆதரவை பெறுவதே முக்கியம். இல்லாவிடில் சிங்களம் 'தமிழர் தரப்பு அரசியல் தீர்வில் நாட்டமில்லாது உள்ளது' என தனது பிரச்சாரத்தில் வெல்ல இடம் கொடுத்தவர்கள் ஆகி விடுவோம்.

தெரிவுக் குழு அமைத்து நாட்டு மக்களை ஏமாற்றுவதை அனுமதிக்க முடியாது: கரு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வகையான தீர்வு வழங்கினாலும் அதற்கு ஐக் கிய தேசியக் கட்சி முழு அளவில் ஆதரவு வழங்கும். ஆனால் தெரிவுக் குழுக்களை அமைத்து நாட்டு மக்களையும் சர்வதேச நாடுகளையும் ஏமாற்ற முயற்சிப்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஐ. தே. க. வின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய தெரிவித்தார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உள்ளது. அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி குழுவின் தீர்வு திட்ட யோசனை உள்ளது. மேலும் அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளது. எனவே இனியும் தெரிவுக் குழு அமைப்பது என்பது போலி நாடகமாகவே அமைகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தொடர்ந்தும் கூறுகையில், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கட்டாய கடமையாகும். எனவே தமிழ் மக்களுக்கான தீர்வில் ஐ. தே.க. முழு அளவில் ஆதரவு வழங்கி செயற்படும். ஆனால் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையை பாதுகாத்துக் கொள்ள காலம் கடத்தாது தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும்.

ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுக்கள் போதாதென்று இன்னுமொரு பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைத்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பது என்பது இழுத்தடிப்பு வேலையாகும். அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. எனவே பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து தீர்வு தேட வேண்டிய அவசியம் கிடையாது.

தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்காக அரசாங்கம் முன் வைக்க விரும்பும் தீர்வுத் திட்டத்தை முதலில் வெளிப்படுத்த வேண்டும். அத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதால் அதற்கு தேவையான திருத்தங்களை ஏனைய அரசியல் கட்சிகளுடன் விவாதித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். இதை விட்டு விட்டு வெறும் பேச்சு வார்த்தைகளினால் காலத்தை கடத்துவதில் பயனில்லை என்றார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32500

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பார்வையாளர்களுடன் கூடிய பொறிவு குழு (பொறி வைத்து எலிகளை பிடிப்பது போல) ஒன்றினை வலியுறுத்துவதே தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சாலசிறந்தது ..அப்பத்தான் இவனுங்களை பற்றி அவனுங்களுக்கு தெரியும்... :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.