Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலிச்சான்றிதழுடன் சிறிலங்கா பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் ஊடுருவிய மர்மநபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ சனிக்கிழமை, 02 யூலை 2011, 02:09 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் போலியான பட்டச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து சிறிலங்காவின் மிக முக்கியமான பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தினுள் விரிவுரையாளராக ஊடுருவிய ஒருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இரத்மலான கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இவர் போலிச்சான்றிழ்கள் மூலம் விரிவுரையாளர் பதவியைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் இவரை நேற்று மொறட்டுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இந்தியாவின் இந்திராகாந்தி பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் போலிப் பட்டச்சான்றிதழ்களை சமர்ப்பித்தே இவர் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்துள்ளார்.

இவரது பட்டச்சான்றிதழ்களை ஆய்வு செய்த போதே அவை போலியானவை என்று தெரியவந்தது.

இவரது போலிச்சான்றிதழ்கள் அனைத்துலக காவல்துறைக்கு விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரை 12ம் நாள் வரை தடுப்புக்காவலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மிகமுக்கிமான பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தினுள் போலிப்பட்டச் சான்றிதழ் மூலம் ஒருவர் விரிவுரையாளர் பதவியைப் பெற்று ஊடுருவியது சிறிலங்கா பாதுகாப்புக் கட்டமைப்புகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நபர் யார், இவரது பின்னணி என்ன என்பது குறித்து தனியான விசாரணைகளை மேற்க்கொள்ளுமாறு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.com/view.php?20110702104187

  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு இங்கு வேலை செய்யும் சில பேரின் கம்பியூட்டர்களில் சில வேளைகளில் வேலை செய்ய வேண்டி இருக்கும்!

இவர்களது resume க்களில் பல பல்கலைக்கழகப் பட்டங்கள் இருக்கும்! ஆனால் அவர்கள் பல்கலைக் கழக வாசல்களை மிதித்தது கிடையாது!

இந்த ஊரில் சான்றிதழ்கள் பார்ப்பதில்லை. எனவே இவர்கள் வியாபாரம் பண்ணக் கூடியதாக உள்ளது!

எக்கேடாவது கெட்டுப் போகட்டும்!

எனது கவலையெல்லாம், உண்மையாகக் கஷ்டப் பட்டுப் படித்தவர்கள், இத்தகைய புல்லுருவிகளால் சந்தர்ப்பங்களை இழந்து விடுகின்றார்கள் என்பது தான்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் கண்டுபிடிப்பது இதெல்லாம் சிங்களவனுக்கு கை வந்த கலைதானே

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.