Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பில் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டு. அம்பிளாந்துறையில் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணி

மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறையில் எதிர்வரும் 20ம் திகதி தமிழ்த் தேசிய எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன அமைப்புக்கள் இணைந்து இந்த எழுச்சிப் பேரணியை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. எதிர்வரும் 20ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு அம்பிளாந்துறை பொது விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அணிதிரண்டு உணர்வு ரீதியாக தமது உரிமைக் குரலை உலகறியச் செய்ய வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் எதிர்வரும் 20ம் நாள் தமிழ் தேசிய எழுச்சிப்பேரணி

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மட்டக்களப்பு மாவட்ட, அம்பிலாந்துறைப் பகுதியில் எதிர்வரும் 20ம் நாள் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணியை நடாத்த மாவட்ட வெகுசன அமைப்புக்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

எதிர்வரும் 20ம் நாள் பிற்பகல் 3.00 மணிக்கு அம்பிளாந்துறை பொது விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அணிதிரண்டு உணர்வு ரீதியாக தமது உரிமைக் குரலை உலகறியச் செய்ய வேண்டுமென ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் தமிழ் மக்களின் குரல்வழையினை இனவாதிகள் நெருக்கமுற்படும் இந்த வேளையில் உலகிற்கு எமது எழுச்சியினையும், எமது நிலையினையும் தெரிவிக்கும் இறுதிச்சந்தர்ப்பம் இது என்பதும் இத்தகய நிலையிலேயே தமிழர் தாயகப்பிரதேசங்கள் எங்கும் தமிழ் மக்களின் உணர்வெழுச்சியையும், அவர்களின் உரிமைக்குரலையும் உலகின் காதுகளில் இறுதியாகவும், உறுதியாகவம் உரத்து கூறவேண்டிய தேவை ஏற்பட்டு;ள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: சங்கதி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னமே இது தொடர்பான செய்தி,

"மட்டக்களப்பில் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணி"

என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டிருப்ப்தை உணர்ந்து,தொடர்புபட்ட செய்திகளைத் தொகுத்து

ஒரே தலைப்பின் கீழ் வழங்குவது சிறப்பு என்பதால் ,,,

பின்வரும் செய்திகளை இங்கு இணைக்கிறேன்

மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு

இன்று மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாவட்ட வெகுசன ஒன்றியத்தின் கண்டனப் பேரணி நடைபெற்றுள்ளது. அதன்போது ~~எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் நிலையான இருப்புக்கும் நாங்களே முடிவெடுப்போம்|| என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிரகடனம் வருமாறு:-

சிறிங்கா அரசு எம்மீது வலிந்து போர்தொடுக்க கங்கணம் கட்டி நிற்கின்றது. சர்வதேசத்தின் மத்தியில் எமது இனத்துக்கு களங்கள் ஏற்படும் வகையில பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்கிறது. தற்போதைய அரசும் இனவெறிக் கூட்டமும் எமது உயிரினும் மேலான விடுதலையைப் பயங்கரவாதமாக்க முனைந்து செயற்படுகின்றது.

நாளுக்கு நாள் எமது உடன் பிறப்புக்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். மென்போக்குக் கொண்ட தமிழ் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், சாதாரண தொழிலாளிகள் தமிழினம் என்ற ஒரே காரணத்திற்காகக் கோழைத்தனமாகக் கொடூரமாகக் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

இன்றைய சமாதான சூழலை நன்கு பயன்படுத்தி சர்வதேசமெங்கும் தமிழினத்திற்கு எதிரான நாகரீகமற்ற கபடத்தனமான கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதுடன் எம்மினத்தைச் சீண்டிப்பார்க்கவும் முனைகிறது சிறிலங்கா அரசு.

சமாதான பேச்சுவார்த்தைக்கு அனுசரணை மட்டும் நோர்வே நாடு வழங்கினால் போதும்@ அதன் தலைநகரில் பேச்சுக்கள் நடைபெறக் கூடாது எனவும், சர்வதேச நாடுகளெல்லாம் எம்மினத்தின் உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ளக் கூடாது எனவும் பொய்ப் பிரசாரம் செய்கிறது சிறிலங்கா அரசு

எமது தமிழ்ப் பெண்கள், மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு நடு வீதிகளிலும், பாழ் கிணறுகளிலும் தூக்கி வீசப்படுகின்றார்கள். இன்றைய சமாதானச் சூழலில் புங்குடுதீவில் சகோதரி தர்சினிக்கு நடந்த அவலமும், மன்னாரில் பச்சிளம் குழந்தைகளுடன் பெற்றோரையும் சேர்த்து எரிக்கப்பட்ட கொடுமையையும் எண்ணிப் பார்க்கின்ற போது எம் நெஞ்சங்கள் வெடிக்கின்றது

நீண்ட காலமாக தமிழ் மாணவர்களுக்குக் கல்வி, தொழில் வாய்ப்புக்களில் பாராபட்சம் காட்டி வருவதே சிங்கள இனவாத அரசுகளின் இன வெறிப் போக்குகளாகும். இப்படியான பாராபட்சத்துக்கு சவாலுடன் முகம் கொடுத்து கல்வியில் வெற்றிகாணும் தமிழ் மாணவர் சமூகத்தை சிங்கள இன வெறியர்கள் பொறுக்க முடியாமல் நயவஞ்சமாகக் கொலை செய்து வருகின்றனர்.

கடந்த 2002 - பெப்ரவரி - 23ம் திகதி கைச்சாத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் இன்று வரை நிராயுதபாணிகளாக இராணுவக் கட்டுப்பாட்டுப் எமது தாயகப் பிரதேசத்திற்குள் அரசியல் பணியாற்றச் சென்ற 200ற்கும் மேற்பட்ட போராளிகளும் 500க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களும் சிங்கள இனவெறியர்களால் கொடூரமாகச் சுஉலுக்கி நிற்கின்றது. இந்நிலையில் தமிழர் தம் தாயகமெங்கும் நிழல் யுத்தமொன்றை சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு நடாத்தி வருகின்றது. சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நெஞ்சங்களை உலுக்கி நிற்கின்றது. இந்நிலையில் தமிழர் தம் தாயகமெங்கும் நிழல் யுத்தமொன்றை சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு நடாத்தி வருகின்றது.

வீரம் விளை நிலத்தின் வித்துக்களே!

எம் இனிய உறவுகளே!!

நாம் பொறுமை காத்தது போதும் பொங்கியெழுவோம்!!!|| சர்வதேச சமூகமே சிறிலங்கா பேரினவாத அரசின் கபட நடவடிக்கைகளை நன்கு விளங்கியும் நீ! மௌனம் சாதிப்பது ஏன்? நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் பேச்சுவார்த்தை உடன் நடைபெற அழுத்தம் கொடு! எமது விடுதலைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை அங்கீகரி.

இல்லையேல் காலம் காலமாக அழிந்து போய் அழிவின் விளிம்பில் நிற்கும் எம் இனம் தனது எதிர்கால வாழ்விற்கும் நிலையான இருப்புக்கும் தேசியத் தலைவரின் வழிப்படுத்தலில் பொங்கியெழுவதைத் தவிர்க்க முடியாது.

எமது தமிழீழத் தேசியத் தலைவரின் மேலான கவனத்திற்கு

இன்றைய கண்டன எழுச்சிப் பேரணி மூலம் மட்டக்களப்பு மாவட்ட வெகுசன ஒன்றியம் தங்களுக்குத் தயவாக விடுக்கும் அவசர வேண்டுகோள்!

மீண்டும் போரை எதிரி வலிந்து தொடங்க முனைகின்றான். இனியும் கைகட்டி வாய்பொத்தி பேசா மடந்தைகளாக பொறுத்துக் கொண்டிருந்தது போதும் போரைத் தொடங்க ஆணையிடுங்கள். ஒயாத அலையென புயலாகப் புறப்படும் பொங்கியெழும் மக்கள் படை.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

மக்கள் சார்பாக,

வெகுசன ஒன்றியம்,

மட்டக்களப்பு மாவட்டம்

தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களுடனான செய்திக்கு

http://www.battieezhanatham.com/weekly/mod...article&sid=114

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து மட்டக்களப்பில் பிரம்மாண்ட எழுச்சி நிகழ்வு

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா படைகளின் தமிழ் மக்கள் மீதான படுகொலையைக் கண்டித்து மாபெரும் கண்டன எழுச்சிப் பேரணியும் பொதுக்கூட்டமும் மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு அம்பிலாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் இந்த எழுச்சி நிகழ்வு நடைபெற்றது.

முன்னதாக அம்பிலாந்துறை சந்தியிலிருந்து சிறிலங்கா படையினரின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை நிறுத்தக்கோரி முழக்கங்கள் எழுப்பியும் கண்டன பதாகைகளை ஏந்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாக அம்பிலாந்துறை பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தனர்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் நிகழ்வுக்குத் தலைமை வகித்தார்.

பொதுச்சுடரினை கரும்புலி மேஐர் செந்தேவனின் தாயார் பாக்கியம் ஏற்றிவைத்தார்.

தமிழீழத் தேசியக் கொடியை இரண்டு மாவீரர்களின் தந்தையான தர்மலிங்கம் ஏற்றிவைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, கனகசபை பத்மநாதன், தங்கேஸ்வரி ஆகியோர் கண்டன உரைகளை நிகழ்த்தினர்.

சிறிலங்கா படையினரின் வன்செயல்களை கண்டிக்கும் மனு நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டது.

இந்த மனு மட்டக்களப்பு மாவட்ட கண்காணிப்புக்குழு அதிகாரி இன்யோன், நோர்வே தூதரகம், அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றுக்கு அனுப்புவதற்காக உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

இன்றைய எழுச்சி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனி, விடுதலைப் புலிகளின் தளபதிகள் நாகேஸ், பிரபா, வெல்லாவெளிக் கோட்ட தளபதி யோகரார், மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் மற்றும் தளபதிகள், போராளிகள் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர்

தகவல் மூலம்-புதினம்.கொம்

200601200244yc.jpg

200601200307yh.jpg

200601200286kp.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தை அமைக்கும் காலம் நெருங்கிவிட்டது!

தமிழீழத்தை அமைக்கும் காலம் நெருங்கிவிட்டது. எனவே தேசியத் தலைவர் அவர்களுடன் கைகோர்த்து நின்று நாம் அனைவரும் எமது உரிமையை வென்றெடுக்க வேண்டும். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். நேற்று அம்பிளாந்துறையில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி; பிரகடன நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நான்கு வருடங்களாகின்றன.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் நயவஞ்சகத்தனமான முறையில் ஆறு சுற்றுப் பேச்சுக்களை நடத்திய ரணில் விக்கிரமசிங்க எந்த ஒரு முன்னேற்றத்தையும் அல்லது பயனையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறான பேச்சுக்களைக் காட்டியே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு ரணில் தி;ட்டமிட்டார். எனினும் தமிழ் மக்கள் இதனை புரிந்து கொண்டு தேர்தலைப் புறக்கணித்தனர்.

இந்தத் தேர்தல் புறக்கணிப்பு மூலமே மகிந்த ஜனாதிபதியானார். ஒரு வகையில் அது தமிழ் மக்கள் கொடுத்த பிச்சை என்றுதான் கூற வேண்டும். இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 27 கட்சிகளுடன் மகிந்த ஒப்பந்தம் செய்திருந்தார். இதில் தமிழ் மக்களின் எந்த நலனும் உள்ளடக்கப்படவில்லை.

அதேவேளை கடந்த கால சிறிலங்காவின் ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும் போது மண்டைக்குள் எதுவும் இல்லாத ஜனாதிபதி என்றால் அது மகிந்த ராஜபக்சதான். ஏன் என்றால் நாங்கள் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்த போது ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மற்றும் திருமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் நாம் கண்டித்தோம். இந்தப் படுகொலையில் சிறிலங்கா இராணுவம் சம்பந்தப்பட்டதை சுட்டிக் காட்டினோம்.

ஆனால் தாம் இந்தியா சென்றிருந்த காலத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறினார். உங்கள் சகோதரரை படைத்துறை அமைச்சின் செயலாளராக நியமித்திருக்கின்றீர்களே அவருக்குத் தெரியாதா? எனக் கேட்டபோது அவரையும் கூட்டிச் சென்றதாகக் கூறினார். இவ்வாறு முப்படைகளின் தளபதியாக இருந்தவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறும் போது வேடிக்கையாகவிருக்கின்றது,

இதேவேளை சிறிலங்காவின் நாடாளுமன்றுக்குள்ளும் எங்கள் போராட்டம் தீவிரமடைந்திருக்கின்றது. நாடாளுமன்றை இயங்கச் செய்யாத ஒரு சூழல உருவாக்கியிருந்தோம். எங்களுடன் மலையகக் கட்சிகளும் கொழும்புத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலக முன்னணியும் இணைந்து இருக்கின்றது.

இந்தப் போராட்டத்தால் அடுத்தது என்ன?, என்ன நடக்கப் போகின்றது என்ற பீதியில் கொழும்பு கலங்கி நிற்கின்றது. ஜனாதிபதி நித்திரையில்லாமல் யோசித்துக் கொண்டிருக்கின்றார். சபாநாயகர் பின் கதவால் தான் வந்து அமர்வில் அமர்ந்து கொண்டார்.

இந்தச் சூழலிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளோடு சிறிலங்கா அரசு பேச்சுக்கு வராது புறக்கணித்தால் அவர்கள் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும்.

தற்காப்புப் பயிற்சி பெற்றவர்களாக, எல்லைப் படையாக, சண்டைப் படையணியாக தமிழினம் பலம் பெற்ற நிற்கின்றது. எமது தாயக தேசத்தில் எறிகணை, விமானக் குண்டு வீச்சுக்களை நடாத்த எதிரி நினைத்தால் பாரிய சேதங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டிவரும். நாம் எமது பலத்தை சிறிலங்கா அரசு மீது பயன்படுத்துவோம்.

எனவே இன்று தமிழீழத்தை அமைக்கின்ற காலம் நெருங்கி விட்டது. தேசியத் தலைவர் அவர்களுடன் கைகோர்த்து நின்று எமது உரிமையை வென்றெடுப்போம். அதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றார்.

தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களை வர விடாது தடுத்து படையினர் சோதனைக் கெடுபிடி

மட்டக்களப்பு மாவட்டத்தின் படையினர் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து விடுதலைப்புலிகளின் நிருவாகப் பகுதிகளுக்கு பொது மக்கள் வருவதற்கு நேற்று படையினர் பலத்த சோதனைக் கெடுபிடிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பிளாந்துறையில் நேற்று இடம்பெற்றத் தமிழ்த் தேசிய எழுச்சிப் பேரணியில் மக்கள் கலந்து கொள்ளாதவாறு இந்தக் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

பட்டிருப்பு, அம்பிளாந்துறை, மண்முனை, வவுணதீவு, செங்கலடிக் கறுத்தப்பாலம் ஆகிய நுழைவாயில்களிலூடாக மக்களை அனுமதிப்பதில் படையினர் பலத்த கெடுபிடிகளை மேற்கொண்டதுடன் அதிகளவான மக்களை திருப்பி அனுப்பிள்ளனர்.

தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பிளாந்துறை தமிழ் எழுச்சிப் பேரணியில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற தமிழ்த்தேசிய எழுச்சிப் பேரணி நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் அம்பிளாந்துறை விளையாட்டு மைதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதில் போரதீவுப் பற்று, பட்டிப்பளை, கரடியனாறு, வவுணதீவு ஆகிய பிரதேசங்களிலிருந்து பேரணியாக வந்த மக்கள் தேசியத் தலைவரின் உருவப்படங்களை தாங்கியிருந்தனர். அம்பிளாந்துறைச் சந்திலிருந்து கோசங்களை எழுப்பிய வண்ணம் மைதானத்தை வந்தடைந்தனர். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் அம்பிளாந்துறை பாடசாலையில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் நிகழ்வுகள் இடம் பெற்றது இதில் பொதுச்சுடரினை கரும்புலி மேஜர் செந்தேவனின் தாயான திருமதி.ந.பாக்கியம் ஏற்றி வைக்க தேசியக் கொடியினை இரு மாவீரர்களின் தந்தையான மா.தருமலிங்கம் ஏற்றி வைத்தார். பின்பு அகவணக்கத்தினை தொடர்ந்து தலைமையுரை இடம் பெற்றது.

அடுத்ததாக தமிழ்த்தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, ஜெயானந்தமூர்த்தி அவர்களின் உரையும் இடம்பெற்றது. பின்னர் களுத்துறைச் சிறைச்சாலையில் வாடிக் கொண்டிருக்கும் றொபட் அவர்களால் எழுதப்பட்ட கவிதை கவிஞர் மா.தணிகாசலத்தினால் வாசிக்கப்பட்டது.

பின்பு அரங்கச் செயற்பாட்டு குழுவினரால் எழுச்சிப் பாடலும், எழுச்சி கோசமும் இடம்பெற்று கண்டன பிரகடனமும் நிறைவேற்றப்பட்டது. இதன் பிரநிதியினை மாவட்ட போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் பிரதி நிதி டிக்ஜோன் என்பவரிடம் கையளிக்கப்பட்டதோடு நோர்வே தூதுவர் மற்றும், அமெரிக்க தூதுவர் ஆகியோருக்கும் பிரதிநிதிகள் அனுப்பட்டது.

இவ்வெழுச்சிப் பேரணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவட்ட தளபதி நாகேஸ், தளபதி பிரபா, மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்நிலவு, மாவட்ட தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் மனோகரன் உள்ளீட்ட பொறுப்பாளர்கள், போராளிகள், அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பிளாந்துறை தமிழ் எழுச்சிப் பேரணியில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற தமிழ்த்தேசிய எழுச்சிப் பேரணி நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் அம்பிளாந்துறை விளையாட்டு மைதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதில் போரதீவுப் பற்று, பட்டிப்பளை, கரடியனாறு, வவுணதீவு ஆகிய பிரதேசங்களிலிருந்து பேரணியாக வந்த மக்கள் தேசியத் தலைவரின் உருவப்படங்களை தாங்கியிருந்தனர். அம்பிளாந்துறைச் சந்திலிருந்து கோசங்களை எழுப்பிய வண்ணம் மைதானத்தை வந்தடைந்தனர். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோர் மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் அம்பிளாந்துறை பாடசாலையில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் நிகழ்வுகள் இடம் பெற்றது இதில் பொதுச்சுடரினை கரும்புலி மேஜர் செந்தேவனின் தாயான திருமதி.ந.பாக்கியம் ஏற்றி வைக்க தேசியக் கொடியினை இரு மாவீரர்களின் தந்தையான மா.தருமலிங்கம் ஏற்றி வைத்தார். பின்பு அகவணக்கத்தினை தொடர்ந்து தலைமையுரை இடம் பெற்றது.

அடுத்ததாக தமிழ்த்தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் த.கனகசபை, ஜெயானந்தமூர்த்தி அவர்களின் உரையும் இடம்பெற்றது. பின்னர் களுத்துறைச் சிறைச்சாலையில் வாடிக் கொண்டிருக்கும் றொபட் அவர்களால் எழுதப்பட்ட கவிதை கவிஞர் மா.தணிகாசலத்தினால் வாசிக்கப்பட்டது.

பின்பு அரங்கச் செயற்பாட்டு குழுவினரால் எழுச்சிப் பாடலும், எழுச்சி கோசமும் இடம்பெற்று கண்டன பிரகடனமும் நிறைவேற்றப்பட்டது. இதன் பிரநிதியினை மாவட்ட போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் பிரதி நிதி டிக்ஜோன் என்பவரிடம் கையளிக்கப்பட்டதோடு நோர்வே தூதுவர் மற்றும், அமெரிக்க தூதுவர் ஆகியோருக்கும் பிரதிநிதிகள் அனுப்பட்டது.

இவ்வெழுச்சிப் பேரணியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவட்ட தளபதி நாகேஸ், தளபதி பிரபா, மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்நிலவு, மாவட்ட தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் மனோகரன் உள்ளீட்ட பொறுப்பாளர்கள், போராளிகள், அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு

பல பயனுள்ள செய்திகளை உடனுக்குடன் இணைக்கும் மேகநாதன் உங்கள் சேவை தொடரட்டும்.

நன்றி :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.