Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் காவலர் என்ற அடையாளத்தை ஜெயிடம் ஒப்படைத்தார் கருணாநிதி!

Featured Replies

தமிழர்களின் காவலர் என்ற அடையாளத்தை ஜெயிடம் ஒப்படைத்தார் கருணாநிதி! - அவுட்லுக் சஞ்சிகை

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது காத்தரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாதிருந்த தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி தனது முதலமைச்சர் பதவியுடன், தமிழர்களின் காவலர் என்ற தனது அடையாளச் சின்னத்தையும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான  ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிவரும் அவுட்லுக் சஞ்கையின் இம்மாதப் பதிப்பில், ஈழத்தமிழ் மக்களை கருணாநிதி கைவிட்டுவிட்டார் என்ற பரவலான கருத்தை ஜெயலலிதா மூலதனமாக்கிக் கொண்டிருக்கிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

'தமிழ் மக்களின் காவலர் என தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க.வின் தலைவருமான கருணாநிதி சுயமாக வரித்துக் கொண்ட அடையாளமானது ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராட்டத்தை நடத்துகின்றவர்கள் மத்தியில் நீண்டகால அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. கருணாநிதி சொல்லில் மட்டுமே தமிழை நேசிக்கிறார் எனவும் செயலில் அல்ல என்ற விமர்சனங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு கருணாநிதி துரோகம் இழைத்துவிட்டதாகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த வேளையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவரை ஒரு சந்தர்ப்பவாதியாக வெளிப்படுத்தியுள்ளதுடன், அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை விற்றுவிட்டார் என்ற அதிருப்திகளையும் அச்சமயம் ஏற்படுத்தியிருந்தன. ஆனால், அவர் தனது முதலமைச்சர் பதவியை மட்டுமல்ல தமிழ் மக்களின் காவலர் என்ற தனது அடையாளச் சின்னத்தையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துள்ளார். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழ் மக்களின் காவலர் என்ற பட்டம் ஜெயலலிதாவின் கரங்களுக்கு மாறியுள்ளது.

கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் திரைப்பட இயக்குநர் சீமான் பல தடவைகள் கைது செய்யப்பட்டு, அவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன. ஜெயலலிதாவை காவல் தெய்வமாக அவர் வர்ணித்ததாக கூறப்படுகின்றது. அதேபோன்று, விடுதலைப் புலிகளுக்காகவும் உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களுக்காகவும் குருல் கொடுத்து வருகின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இலங்கையில் போரின் முடிவுக்கு வந்த பின்னர் அங்கு சென்றிருந்த தி.மு.க. தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழுவில் திருமாவளவனும் இடம்பெற்றிருந்தார்.

ஜெயலலிதாவின் அணுகுமுறையில் சில மாற்றங்கள் காணப்படுவதாகவும், உறுதியான தீர்மானங்களை அவர் மேற்கொண்டு வருவதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான ரவிக்குமார் கூறியுள்ளார். ஆனால், இந்தத் தீர்மானமானது வெறுமனே அடையாளத்தைப் பெற்றுக் கொள்வதற்கான பெறுமானமாக இருப்பதாக அவர் கருதுகின்றார்.

ஏனெனில், மாநில அரசுகள் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதே முக்கியமானதாகும் என அவர் கூறுகிறார். சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் பல கண்டித்ததைப் போன்று இந்தியா கண்டிக்கவில்லை. மத்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகின்றது. மத்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றம் ஏற்படாத வரை எதனையும் செய்ய முடியாது என ரவிகுமார் கூறியுள்ளார்.

1979ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய இயக்கத்தை நிறுவிய  பழ.நெடுமாறன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ் மக்களின் காவலர் எனத் தன்னைத்தானே அழைப்பதற்கு கருணாநிதிக்கு எந்த உரிமையும் கிடையாது என அவர் கூறியுள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக ஆறு தடவைகள் பதவி வகித்த கருணாநிதி தமிழ் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தியதைவிட அவர் தமிழ் மக்களுக்காக என்ன செய்துள்ளார் என நெடுமாறன் கேள்வி எழுப்புகின்றார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். அதன் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இத்தீர்மானங்கள் குறித்து வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தற்போது கருணாநிதி மீது நல்லெண்ணம் கொண்டவர்களாக இல்லை. அவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இத்தீர்மானமானது தமது உள வலுவை மேலோங்கச் செய்துள்ளதாக அவர்கள் ஜெயலலிதாவைப் பாராட்டுகின்றனர். அவருக்கு நன்றி தெரிவித்து புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் கடிதங்கள் அனுப்பியுள்ளன.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இராமேஸ்வரத்தில் பாரிய பேரணியை நடத்தப் போவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். பெரியார் திராவிடக் கழகமும், மனித நேய மக்கள் கட்சியும் தமிழர்களின் இரட்சகர் என்ற பட்டத்தை ஜெயலலிதாவுக்கு வழங்குவதில் ஆர்வமாக உள்ளனர். ஜெயலலிதாவின் நிர்வாகம் மற்றும் துணிச்சலான தீர்மானங்களுக்கு இதுவரை காலமும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படனவே ஒழிய, தமிழ் மக்களின் உரிமைகளுக்கான காவலராக அவர் பாராட்டப்பட்டிருக்கவில்லை.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருந்த போதிலும், சிலர் அதற்கு எதிராக கருத்துகளையும் முன்வைக்கின்றனர். கருணாநிதியிலும் பார்க்க மேலெழுந்து வர விரும்பும் ஜெயலலிதாவின் சர்வாதிகார போக்குகளால் ஏற்படும் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என ஒருவர் கூறுகிறார். தமிழ் மக்களின் பிரச்சினையானது சகல அரசியல் கட்சிகளுக்கும் பொதுவான விடயமாகும். தமிழ் மக்களின் விவகாரங்கள் தொடர்பில் கருணாநிதி உரிமை கோரும் விடயங்கள் குறித்து இடது மற்றும் தமிழ்த் தேசியவாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ் மக்களின் காவலர் என தன்னைத் தானே கூறுவதில் இருந்து விடுபடுவதற்கு கருணாநிதி எவருக்கும் ஒருபோதும் இடமளித்ததில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில், தமிழ் மக்களின் புதிய காவலராக ஜெயலலிதா உண்மையில் தோற்றம் பெற்றுள்ளரா? அல்லது கருணாநிதி மீது தமிழ் மக்கள் கோபத்துடன் இருக்கின்றார்கள் என்பதற்காக மட்டுமே ஜெயலலிதா இந்தப் புதிய அடையாளத்தைப் பெற்றிருக்கின்றாரா?

கருணாநிதி மீதான தமிழ் மக்களின் கோபத்தை ஜெயலலிதா தனக்கு மூலதனமாக்கி உள்ளதாக எழுத்தாளரும், பேராசிரியருமான கலாநிதி வெங்கடாசலபதி கூறுகிறார்' என அவுட்லுக் சஞ்சிகை தெரிவித்திருக்கிறது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={FCCD6CFF-06E0-48F7-8858-C7B5A59ECCEB}

  • தொடங்கியவர்

An Image Is Flipped

Jaya strikes at Karunanidhi’s proprietorship of the Tamil cause

The self-assigned label of “protector of Tamils” worn by M. Karunanidhi, former chief minister and DMK supremo, is no longer finding endorsement among those fighting for the Tamil cause. In fact, he is drawing criticism ranging from the mild—“he loves Tamil only in word, not in deed”—to the harsh—“he’s a betrayer of the Tamil cause”. His farcical fast against the genocide of Tamils during his term as chief minister—he’d said, “Let me become one of Sri Lanka President Rajapakse’s victims, it will be my sacrifice on behalf of all Tamils”—and such other actions have led to the perception that he’s an opportunist who clung to power while selling out the Tamil cause.

But has he ceded his “protector of Tamils” tag, along with chief ministership, to J. Jayalalitha. The latter piloted a resolution early this month seeking Indian economic sanctions to rein in Colombo, speedy rehabilitation of displaced Sri Lankan Tamils and bringing charges of war crimes against those who committed excesses during the endgame against the LTTE. For some, Karunanidhi has indeed been toppled from his ‘Tamil votary’ perch by Jayalalitha. Film director Seeman, arrested several times by the Karunanidhi government, including under sedition charges, is believed to have called Jayalalitha a “guardian deity”. Viduthalai Chiruthaigal Katchi (VCK) leader Thol Thirumavalavan, a vocal supporter of the LTTE and of Tamil movements across the world, is quoted as grudgingly giving credit to Jayalalitha for the resolution. Thirumavalavan has reason to be angry with Karunanidhi, for he lost his loyal constituency after having been part of a DMK-led delegation of MPs to Sri Lanka after the war.

D. Ravikumar, a former VCK MLA and Tamil writer, concedes that “there are some qualitative changes in Jayalalitha’s approach. The resolution is more assertive and concrete.” But he acknowledges that it has symbolic value only, since state governments do not dictate foreign policy. “What’s important is what the Centre does about the resolution,” he says. “Many nations have condemned what Sri Lanka did, but India hasn’t. There’s no change at the Centre, and without change there, nothing can be done.”

Pazha Nedumaran, who founded the Tamil National Movement in 1979, is an acerbic critic of the ex-CM. “Karunanidhi,” he says, “has no right to call himself the protector of Tamils.” Pointing out that Tamil is still not the official language in the government, Nedumaran asks, “He was CM six times. What did he do for Tamil?” He accuses Karunanidhi of organising the World Classical Tamil Conference in Coimbatore in May last year “to divert the attention of the Tamil people, because he knew they were angry with him for doing nothing in Sri Lanka.” Of Jayalalitha, he says, “She got the resolution passed unanimously in the Tamil Nadu assembly. She then met the prime minister and followed it up. The ball is in the Centre’s court. We’ll wait and see.”

The Tamil diaspora, which is disillusioned with Karunanidhi, is gushing in its praise of Jayalalitha. “Madam Jayalalitha’s initiative in this tough resolution in the assembly has lifted our morale. We will meet and thank her,” says Charles Antonidas of the London-based Global Tamil Forum. The Australasian Federation of Tamil Associations has written to Jayalalitha “bowing our heads in gratitude”. Even fringe Tamil groups have gone overboard praising Jayalalitha. “We will hold a massive rally in Rameswaram to thank her,” says Hindu Makkal Katchi leader Arjun Sampath. The Periyar DK and the Manithaneya Makkal Katchi are among the Tamil organisations keen on anointing Jayalalitha with the “savior of Tamils” title.

Dr A.R. Venkatachalapathy, a Tamil writer and professor at the Madras Institute of Development Studies, feels that disillusionment with Karunanidhi worsened with his flippant remarks. When the Sri Lankan army marched into an area where the LTTE had holed up using about one lakh non-combatants as a human shield, he had said, “After it rains, it continues to drizzle”, implying that in war, collateral damage is normal. He blotted his copybook further by rushing to Delhi to fight for cabinet berths for his kin in UPA-II, but never once went there to seek intervention for a cause he claimed was dear to him.

All the praise being heaped on Jayalalitha, who has so far been praised for her administration and bold decisions rather than as a champion of the Tamil cause, is however countered by some. “Her intervention is opportunistic and cynical,” says Geeta V., publisher, Tara Books. “She wants to be one up on Karunanidhi.” Afraid of the consequences of Jayalalitha going back to her dictatorial ways, another Tamil crusader says, “The Tamil cause is a free-for-all for political parties and their petty games.” Geeta puts things in perspective, saying Karunanidhi’s claims to championing the Tamil cause have been challenged by many, including the radical Left and Tamil nationalists. “He was never allowed to get away with proclaiming himself a leader of the Tamils.”

Such games of one-upmanship between Jayalalitha and Karunanidhi are legendary and so is their penchant for never giving the devil its due. So much so that when Jayalalitha presided over the resolution, DMK MLAs were absent in the assembly. They used a comment by the Leader of the Opposition, Vijayakanth of the DMDK—“The credit for eliminating the Tamil race in Sri Lanka goes to the DMK”—as a spur to walk out. Karunanidhi protested later in a letter to partymen that he was “unduly criticised” and that Jayalalitha had “deliberately” forgotten that DMK MPs had resigned to protest Sri Lankan action against Tamils and that he had made several appeals to the Centre on the issue. “People know who is enacting a farce on this,” he observed darkly.

So, has Jayalalitha really become the new guardian of Tamils or has she got the title only because Tamils are livid with Karunanidhi? Venkatachalapathy says, “She has capitalised on the perception that he has let down the Tamil cause.”

http://www.outlookindia.com/article.aspx?277442

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை இன்னொருவரிடம் ஒப்படைப்பதற்கு, அது முதலில் உங்களுடையதாக இருக்க வேண்டும்!

கருணாநிதி என்றைக்குமே தமிழினக் காவலனாக, நடந்து கொண்டது கிடையாது!

எனவே அதை இன்னொருவரிடம் ஒப்படைக்கும் உரிமை அவருக்குக் கிடையாது!!!

அவர் எங்க ஒப்படைத்தார். தமிழகமக்கள் பறித்து கொடுத்தார்கள்.

இவர் மானமிழந்து ஊழலில் மகளை சிறையில் அடைத்து தனது பெருமையை நாட்டி கொண்டார்.

தமிழுக்கு இழுக்கு திராவிடர் காலம் என்றால் அது கருநாநிதி காலம். அப்பட்டமான எட்டப்பன்,நயவஞ்சகர் காலம்.

கருநாநிதி குடும்பம் இந்திராகாந்தி குடும்பம் போல் கடசியை தனதாக்கி கொள்ளாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னது இவர் காவலன் என்று .............?

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.