Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரியங்கா-நளினி சந்திப்பின் ரகசியம் - மனம் திறக்கிறார் முருகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ்காந்தி படுகொலைக்குக் காரணமானவர்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்ட நளினி, அவரது கணவர் முருகன் என்கிற ஸ்ரீகரன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் இன்றுவரையில் சிறைக் கொட்டடியில் இருக்கிறார்கள்.

இதில், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் கைதிகளாகவும், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனைக் கைதிகளகவும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நளினி மட்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்களது விடுதலைக்காக மனித உரிமை ஆர்வலர்களும், ஈழ ஆதரவாளர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இந்தநிலையில்தான், 2008-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி வேலூர் சிறையில் அடைபட்டிருந்த நளினியை பிரியங்கா சந்தித்தார்.

பரபரப்போடு பேசப்பட்ட இந்த சந்திப்பிற்குப் பிறகு நளினி விடுதலையாவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், இந்த சந்திப்புக்குப் பிறகே இலங்கையில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்பட்டதாகவும் ஈழ ஆதரவாளர்களால் சொல்லப்பட்டது.

இந்நிலையில், பிரியங்கா சந்திப்பில் மறைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டோம். வேலூர் மத்திய சிறையில் இருக்கும் ராஜீவ் படுகொலை வழக்கின் தூக்கு தண்டனைக் கைதியும், நளினியின் கணவருமான முருகன் என்கிற ஸ்ரீகரனிடம் சில கேள்விகளை அனுப்பிவிட்டு விடைக்காகக் காத்திருந்தோம்.

நமக்கு வந்து சேர்ந்த முருகனின் பதில்கள் அதிர்ச்சியளிப்பவையாக இருந்தன. இதுவரை யாரிடமும் பேசாத முருகன், பிரியங்கா-நளினி சந்திப்பு குறித்து மூன்று ஆண்டு களுக்குப் பிறகு முதல்முறையாக ரிப்போர்ட்டர் இதழுக்காக மனம் திறந்திருக்கிறார். இனி முருகன்...

சிறை வாழ்க்கை எப்படி இருக்கிறது?

“சுடுமணலில் தூக்கிப் போட்ட புழு துடிப்பதுபோல மனிதனது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும், உடலையும் வெந்தணலில் வேகவைத்துத் துடிக்க வைக்கும் கட் டமைப்புதான் சிறை. இந்த சிறை வாழ்வில் எமது உள்ளமும், உடலும் உடைந்து போய்விடாது காப்பாற்ற இருபது வருட காலமாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்.’’

சிறையில் என்ன செய்கிறீர்கள்?

“வேதனைகள் என்னைப் பொசுக்கிவிட அவ்வப்போது தலையெடுக்கும்போதெல்லாம் பிரார்த்தனையும், தியானமும் செய்வேன். சிறையில் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, பி.சி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளையும் முடித்துவிட்டேன்.’’

உங்கள் மனைவி நளினியை கடைசியாக எப்போது சந்தித்துப் பேசினீர்கள்?

“கடந்த வருடம் ஜூன் மாதம். புழல் சிறைக்கு அவர் மாற்றப்பட்டதில் இருந்து அவரது உண்மை நிலை எனக்குத் தெரியவில்லை. நேரில் சந்திக்க எவ்வளவோ முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை. இருவருமே மனு மேல் மனு எழுதி அதிகாரிகளிடம் வேண்டுதல் விடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். கணவன், மனைவி ஒருவரை ஒரு வர் சந்தித்துப் பேசக் கூடாது என்று விரும்புபவர்கள்கூட இம்மண்ணில் இருக்கிறார்கள்.’’

உங்கள் விடுதலை சாத்தியமாகும் என்று நம்புகிறீர்களா?

“தெரியாது என்று சொல்லவே மிகவும் பயப்பட வேண்டியுள்ளது. என் குடும்பத்தார் அனைவரையும் இந்த ஒரு வார்த்தை கலங்கடித்துவிடும். என் பிள்ளையின் மனநிலையை இது மேலும் பாதிக்கும். அவரது கல்வியை பாதிக்கும். ஆனாலும், உண்மையை சொல்லத்தானே வேண்டும். கண்ணைக் கட்டி கொடுங்காட்டில் விடப்பட்டவர்கள் போல இருக்கிறோம். விடுதலைக்கான அதிகாரம் கொண்டவர்களின் மனதில் எங்கள் விஷயத்தில் நீதியும், மனிதாபிமானமும் எப்போது பிறக்கும் என்பது ஆ ண்டவனுக்கு மட்டுமே தெரியும்.’’

உங்கள் விடுதலைக்காக நடக்கும் முயற்சிகள் என்ன?

“நளினி நிலைமை வேறு. என் நிலைமை வேறு. இருவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டபோது, பெண் குழந்தைக்குத் தாய் அவசியம் என்று கூறி நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார்கள். அதன்பின்பு பத்து வருடமாக நளினி விடுதலைக்காகப் பாடுபடுகிறோம். ஆனால், என் மகள் பெற்றோர் இரு வரையும் பிரிந்து பெரும் உளவியல் பாதிப்போடுதான் வாழ்ந்து வருகிறாள். நளினி விடுதலையாகும் வரை என்னுடைய விடுதலை பற்றி யோசிக்க முடியாது. எனது மரண தண்டனை குறைப்புக்கான மனு ஜனாதிபதி அவர்களிடம் சுமார் 11 வருட காலமாக நிலுவையில் இருக்கிறது. எனது நிரபராதி நிரூபணங்களை எடுத்துக் காட்டி ‘என் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யும்படி அல்லது அது இயலாதபட்சத்தில் சாகடிக்கவாவது ஓர் உத்தரவு போடுங்கள்’ என ஒரு நினைவூட்டல் மனுவினை 2004-ம் ஆண்டே அனுப்பினேன்.’’

நளினி-பிரியங்கா சந்திப்பிற்குப் பிறகுதான் ஈழத்தில் பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டது என்கிறார்களே?

“இது ஒன்றும் எதேச்சையாகப் பேசப்படும் பேச்சு அல்ல. தமிழர் நலனையும், விடுதலையுணர்வையும் தமது பணம் மற்றும் பதவிப் பேராசைக்காக வியாபார முதலீடாக்கிய ஒரு சிலரால் பேசப்படும் பேச்சு இது. அவர்களை அடையாளம் காணுவதற்கு முன் உண்மை நிலையை அனைவரும் உணர வேண்டும்.

ஈழத்தில் இறுதியாக நடந்த சிங்கள அரசின் ராணுவ நடவடிக்கைகள் 2007-ம் ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஆண்டு இறுதிக்குள் புலிகளின் கட்டு ப்பாட்டில் இருந்த மேற்குப் பகுதி முழுவதையும் சிங்கள ராணுவம் கைப்பற்றிவிட்டது.

19.3.2008-ம் தேதிக்கு முன்பாகவே மன்னார் மாவட்டம் முழுவதையும் பிடித்து முல்லைத் தீவு மற்றும் கிளிநொச்சியை நோக்கி சிங்கள ராணுவம் முன்னேற ஆரம்பித்துவி ட்டது. 2000-ம் ஆண்டிற்குப் பிறகு சிங்கள ராணுவத்திற்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். சிங்கள அரசு பல நாடுகளின் கூட்டுடன் ஆரம்பித்த அந்த ராணுவ நடவடிக்கையில் சீனா, பாகிஸ்தானின் பங்கு அதிகமாக இருக்கக் கூடாது என்றும், இந்திய அரசினை ஓரம் கட்டி மற்ற நாடுகளுக்கு சிங்கள அரசு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது.

இந்தியாவின் பிராந்திய நலனுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ராணுவ பொருளாதார ரீதியாக அதிக வசதிகளைக் கொடு த்து வந்தது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு உயிர்ப்புடன் இருக்கும்வரை இந்திய அரசு ஈழத்தமிழர் பக்கம் சாய வாய்ப்பில்லை என்ற கணக்கில் இலங்கை அரசு இந் தியாவை நாசூக்காகப் புறக்கணித்து வந்தது.

உதவிகள் செய்தும் புறக்கணிக்கப்படுவதைப் பொறுக்க முடியாத இந்தியா, இலங்கை அரசை தனது கட்டுக்குள் கொண்டு வர தீர்மானம் செய்து நகர்த்திய ராஜதந்திர நகர் வுதான் நளினி-பிரியங்கா சந்திப்பு. ‘எமது நலனுக்கு எதிராக நீங்கள் போனால் உங்கள் எதிரிகளை(விடுதலைப் புலிகள்) ஆதரிக்க நாங்கள் தயங்க மாட்டோம். அதற்கு ராஜீவ்காந்தி கொலை வழக்கு உயிர்ப்புடன் இருப்பதுகூட தடையாக இருக்காது’ என்ற ஒரு செய்தியை இந்திய அரசு ராஜபக்ஷேவுக்கு அனுப்பத் தீர்மானம் செய்தது.

அதேநேரம் அதற்கான செயல் நிகழ்விற்கு வேறு காரணம் கூறக்கூடியதாக இருக்க வேண்டும். எதிர்பார்த்ததுபோல் சிங்கள அரசு தம் வழிக்கு வந்துவிட்டால் அப்படிக் காரணம் கூறி பின்வாங்கிவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதன்படியேதான் 19.3.2008-ம் ஆண்டு நளினியை பிரியங்கா வந்து சந்தித்தார்.

அது செய்தியாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். ‘அவர்கள் சொல்லும் வரை வெளியில் சொல்லக் கூடாது’ என அதிகாரி ஒருவர் நளினிக்கு திடமாக அறிவுறுத்தியிருந்தார். அதனையும் மீறி என் விருப்பத்திற்கு மாறாக அச்சந்திப்பு திட்டமிட்டு அம்பலப்படுத்தப்பட்டது. அப்போதுதான் நாம் நம்புபவர்கள்கூட நம்மை துரு ப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறார்கள். பலிகடாவாக்குகிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.

நளினி-பிரியங்கா சந்திப்பு நடைபெற்ற பின் நளினி விரைவில் விடுதலையாவார் என்ற நம்பிக்கை எல்லார் தரப்பிலும் ஏற்பட்டுவிட்டது. ஆனால், இந்த மூன்று வருட காலத்தில் அரசால் எமக்குப் பாதகமான அணுகுமுறைகள்தான் அநீதி என்று தெரிந்திருந்தும் ஏற்படுத்தப்பட்டன. ஓரளவு சிந்திக்கத் தெரிந்தவர்களுக்குக்கூட நான் மேற்சொன்னவை உண்மையென உணர்ந்து கொள்ளலாம்.’’

பிரியங்காவை நளினி சந்திக்காமலேயே இருந்திருக்கலாமே?

“உங்கள் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டிருக்கிறது. அப்படிக் கொல்லப்பட்டவரின் மகள் உங்களைச் சந்திக்க வரும்போது, அவரைச் சந்தித்து அவரது அப்பா கொலையில் உங்களுக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது. அதைப் பற்றி தெரியாது, அநியாயமாக பலிகடாவாக்கப்பட்டிருக்கிறோம் என்று சொல்வீர்களா அல்லது சந்திக்க முடியாது என்று சொல்வீர்களா?’’

அப்படியே பார்த்தாலும், நளினியை மட்டும் பிரியங்கா சந்திக்க விரும்பியதற்கான காரணம் என்ன?

“நளினிக்கு சோனியா காந்தியின் பரிந்துரையாக தண்டனை

குறைக்கப்பட்டபோது நளினி நன்றிக் கடிதம் எழுதினார். நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் பதில் கடிதம் வந்தது. அதோடு நமது விடுதலை தொடர்பாக நளினி அனுப்பிய மனுக்கள் அவருக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. அதனால் அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கலாம். பெண்கள் சிறையில் சிறைவாசிகளும், அதிகாரிகளும் மிகவும் குறைவு. அங்குள்ள கண்காணிப்பாளர் தவிர வேறு யாருக்கும் தெரியாது சந்திப்பினை நடத்தும் சாத்தியம் அங்கு இருந்தது. நளினியுடன் பிரியங்கா சந்தித்தபோது, அருகில் ஒருவர்கூட இல்லை’’ என்று முடித்துக் கொண்டார் முருகன்.

- குமுதம் ரிப்போட்டர்

பயங்கரவாதிகளுக்கு வெள்ளைப் பூச்சு அடிக்கும் இந்த ஆதாரமில்லாத செய்தி மீண்டும் மீண்டும் இணைக்கப்படுவதன் நோக்கம் தான் என்ன?

முருகனை விடுதலை செய்து வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு பேட்டி எடுத்துப் போடச் சொல்லுங்கோ - அப்ப மனம் திறந்து உண்மைகள் வரும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=88032&st=0&p=670489&hl=பிரியங்கா-நளினி&fromsearch=1&#entry670489

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.