Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசாங்கமே வெளிப்படுத்த வேண்டும்! -நிருபமா ராவ்

Featured Replies

போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த நிலைப்பாடு: சிறிலங்கா அரசாங்கமே வெளிப்படுத்த வேண்டும்! -

நிருபமா ராவ் கருத்து!!

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு முன்வைத்துள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த தனது நிலைப்பாடு என்ன என்பதை சிறிலங்கா அரசாங்கமே சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 13வது திருத்தச் சட்டமூலம் தொடர்பாகவும் சிறிலங்கா அரசாங்கமே இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று (04.07.11) உரையாற்றிய போதே இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் இக்கருத்துகளை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், கொழும்பைப் பாதுகாக்க இந்தியா முன்வருமா என இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே நிருபமா ராவ் இதனைத் தெரிவித்தார்.

புதுடில்லியில் சவுத் புளொக் எனப்படும் வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் விஷ்ணு பிரசாத் மற்றும் ஹர்ஷ் சிறிங்லா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். இச்சந்திப்பில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் அயல் நாடுகளான மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடனான உறவுகள் முக்கியமானவை. இந்நாடுகளுடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

ஆனால், எவ்வித மறைமுகமான வேலைத்திட்டம் எதனையும் அடிப்படையாகக் கொண்டு இதற்கான செயற்பாடுகளை இந்தியா மேற்கொள்ளவில்லை. இவ்விடயத்தில் ஊடகங்களின் பங்களிப்பும் அவசியம்' என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் நலன் விரும்பியாகவே இந்தியா இருப்பதாக குறிப்பிட்ட நிருபமா ராவ், இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடமைப்பு மற்றும் வடபகுதியில் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இச்சந்திப்பில் விளக்கியுள்ளார்.

அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த தனது நிலைப்பாடு என்ன என்பதை சிறிலங்கா அரசாங்கமே சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் கூறியிருப்பதானது இந்தியா தனது பொறுப்புணர்வில் இருந்து விலகிக் கொள்வதையே வெளிப்படுத்துவதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், இச்சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கான நேரடியான பதிலை நிருபமா ராவ் வழங்காது சுற்றிவளைத்து பதில் அளித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={5C27C12F-79DE-4959-A6C1-FFFAF876A553}

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், இலங்கையின் நலன் விரும்பியாகவே இந்தியா இருப்பதாக குறிப்பிட்ட நிருபமா ராவ், இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடமைப்பு மற்றும் வடபகுதியில் இந்தியா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இச்சந்திப்பில் விளக்கியுள்ளார்.

சங்கர் சிமெண்டல கட்டினால் சினிமா டைரக்டர் சங்கர் கோவிச்சக்க மாட்டாரா?

0002014F.gif0002014F.gif

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாம் இலங்கையின் கைகளிலேயே" பல்டி அடித்தது இந்தியா: ஓய்வு பெறும் வேளை வந்தததும் தனது வேடத்தைக் கலைத்தார் நிருபமாராவ்

[Tuesday, 2011-07-05 17:31:21]

இலங்கைக்கு எதிராக ஐ.நா.நிபுணர்கள் குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ள போர்க் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமது நிலைப்பாடு என்ன என்பதை இலங்கை அரசாங்கமே சர்வதேசத்துக்குத் வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் இந்தியா, 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும் இலங்கையே இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றது.

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் இந்தக் கருத்துகளை முன்வைத்தார்.

ஐ.நா.நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் போர்க் குற்றம் பற்றிய அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா.பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஏதாவது எடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையைப் பாதுகாக்க இந்தியா முன்வருமா என இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே நிருபமா ராவ் இதனைத் தெரிவித்தார்.

புதுடில்லியில் சவுத்புளொக் எனப்படும் வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைதீவுடனான இந்தியாவின் உறவுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இதில் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் விஷ்ணு பிரசாத் மற்றும் ஹர்ஷ் சிறிங்லா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் அண்டை நாடுகளான மாலைதீவு மற்றும் இலங்கையுடனான உறவுகள் முக்கியமானவை எனத் தெரிவித்த நிருபமா ராவ், அவற்றுடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். மறைமுக வேலைத்திட்டம் எதனையும் அடிப்படையாகக் கொண்டு இதற்கான செயற்பாடுகளை இந்தியா மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்த அவர், இவ்விடயத்தில் ஊடகங்களின் பங்களிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இலங்கையின் நலன்விரும்பியாகவே இந்தியா இருக்கின்றது எனவும் தெரிவித்த அவர், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடமைப்பு மற்றும் வடபகுதியில் இந்தியா மேற்கொள்ளும் திட்டங்களையும் விளக்கினார்.

அவர் மேலும் பதிலளிகையில்..

இலங்கையில் என்ன நடந்தாலும் தமிழக மக்கள் அதிகளவுக்கு கரிசனையையும் கவலையையும் கொண்டிருக்கின்றனர். அந்தக் கவலைகளை நிராகரித்துவிட முடியாது என்று நான் நினைக்கின்றேன்.

தமிழ் நாட்டு மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பது தொடர்பாக இந்திய அரசாங்கம் உணர்வற்றதாக இருக்க முடியாது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை, மாலைதீவைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே நிருபமா இதனைத் தெரிவித்திருக்கிறார். இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் நிருபமராவ் அளித்த பதில்களும் வருமாறு;

கேள்வி: தமிழக முதலமைச்சர் அண்மையில் இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிக்குமாறு கேட்டிருந்தார். அதற்கு இந்திய அரசாங்கத்தின் பதில் என்ன?

நிருபமா: இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது தொடர்பாக காலத்துக்காலம் தமிழக அரசும் தமிழ் நாட்டு மக்களும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் தமது கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

இவர்கள் தமிழ் பேசும் மக்கள். இலங்கையில் என்ன நடைபெற்றாலும் அதனைப் பற்றி அவர்கள் மிகவும் அக்கறையையும் கவலையையும் கொண்டவர்களாக உள்ளனர். இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தொடர்பாக அவர்கள் கரிசனை கொண்டுள்ளனர். இந்த விடயம் எப்போதும் அங்கு உள்ளது என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். அந்தக் கரிசனைகளை நீங்கள் நிராகரித்துவிட முடியாது. இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழ் நாடானது இந்தியாவின் ஒரு பகுதியாகும்.

தமிழ் நாட்டு மக்கள் என்ன கூறுகின்றார்கள் என்பது குறித்து உணர்வற்ற ரீதியில் நாங்கள் இருக்க முடியாது. அதனை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். இந்த விடயத்தில் நான் மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் உள்ளேன். நாங்கள் இலங்கையில் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பது பற்றி தமிழக அரசாங்கத்துக்கு கூறுவதற்கு அவர்களுடன் நாங்கள் தொடர்புகளை பேணி வருகின்றோம். அதேவேளை, இலங்கை அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பது பற்றியும் கூறுகின்றோம். பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கும் புனர்வாழ்வை பெற்றுக் கொள்வதற்கும் உதவியளித்தல் தொடர்பாக நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம். அத்துடன் சகல அபிவிருத்தி உதவிகள் மற்றும் உள்சார் கட்டமைப்புப் பணிகள் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை அரசாங்கமும் தமிழ்க் கட்சிகளும் அரசியல் இணக்கப்பாடு குறித்துப் பேசி வருகின்றன. ஆதலால் தமிழக மக்களுக்கும் தமிழக அரசாங்கத்திற்கும் அறிவிப்பதற்கும் அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வதுமே எமது அணுகுமுறையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். அதாவது இலங்கையில் நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது பற்றியும் கூறுவதற்கு முயற்சித்து வருகிறோம்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் விடயங்களை கையாள்வதற்கும் சிறப்பான ஆர்வத்துடன் செயற்படுவதற்கான வெளியுறவுகள் தொடர்பான பொறுப்பு மத்திய அரசாங்கத்தைச் சார்ந்ததாகும் என்பதை அழுத்தியுரைப்பது தொடர்பாகவும் தமிழகத்திற்கு கூறுவதற்கு முயற்சிக்கின்றோம்.

தமிழக அரசாங்கமும் அங்குள்ள அதிகாரிகளும் இலங்கையுடனான எமது உறவுகளின் உணர்வுபூர்வமான தன்மை குறித்து பிரக்ஞையுடன் இருக்கின்றனர். இந்த விவகாரங்களை கையாள்வதற்கு தன்னால் முடிந்தளவு சிறப்பான விதத்தில் இந்திய அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்கின்றனர். எப்போதும் இந்த விடயங்கள் காலத்துக்காலம் தெரிவிக்கப்படும் என்பதை புரிந்துகொள்வது அவசியமாகும். இந்த விடயம் நிறுத்தப்படாது என்பதை நீங்கள் அங்கீகரிப்பது அவசியமானதாகும்.

ஏனெனில் இது இயற்கையான தொன்றாகும். இந்தப் பக்கமும் தமிழ் மக்கள் உள்ளனர். சகலரும் தமிழ் பேசும் மக்களாகும். எப்போதுமே அவர்கள் தமது கருத்தின் அடிப்படையில் விடயங்களை வெளிப்படுத்துவார்கள். ஜனநாயகத்தில் இது உள்ளடங்கியிருக்கின்றது. உங்கள் நாட்டைப் போன்று இங்கும் அபிப்பிராயங்கள் சுதந்திரமாக வெளியிடப்படுகின்றன. ஆதலால் இவை யாவற்றையும் நாம் முன்னேற்றத்திற்கான நீண்டதொரு படிமுறையாக எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியமென நான் நினைக்கிறேன்.

கேள்வி: 13 ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன? இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்பது 13 + தேவைப்படுவதாக நீஙகள் கருதுகிறீர்களா?

நிருபமா: இந்த விவகாரத்தை எவ்வாறு தான் அணுகுவது என்பது தொடர்பான தீர்மானத்தை எடுப்பது இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவிடயம் என நான் நினைக்கிறேன். 13 ஆவது திருத்தம் அங்கு உள்ளது. மாகாணங்களுக்கு குறிப்பிட்ட அதிகாரங்களை எவ்வாறு நீங்கள் பகிர்ந்தளிக்கப் போகின்றீர்கள் என்று அங்குள்ள விடயமாகும்.

கேள்வி: உதவியளிப்பதில் இந்தியா சம்பந்தப்பட விரும்புகின்றதா?

நிருபமா: இந்தியா நட்பு நாடாக உள்ளது. அத்துடன் இலங்கையின் பங்காளியாகவும் உள்ளது. நிலையான சமாதானத்தை உருவாக்கவும் சிறுபான்மையினர் நாட்டின் அபிவிருத்தி தமது முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கான ஆற்றலில் பெற்றுக் கொள்வதற்கும் திரும்பவும் அதாவது மோதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் இயல்பு வாழ்வை மேற்கொள்வதற்கும் சரியான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கவேண்டுமென நண்பர் என்ற முறையில் நாங்கள் விரும்புகிறோம். இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது. அந்தப் பேச்சுவார்த்தையானது பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுகளை பெறுபேறாக்கிக் கொள்ளவேண்டுமென நாம் விரும்புகிறோம். நாட்டின் ஐக்கியம் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உண்மை மனதில் வைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கேள்வி: இலங்கையில் வீடமைப்புத் திட்டம் மற்றும் சம்பூர் திட்டங்கள் குறித்து?

நிருபமா: வீடமைப்புத் திட்டத்தை பொறுத்தவரை எமது ஆட்கள் களத்தில் உள்ளனர். காணி, விசாக்கள், நிர்மாணப் பொருட்களை கொண்டு செல்லுதல் போன்றவை தொடர்பாக சில விடயங்கள் இருந்தன. அவை யாவற்றுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. நிர்மாணப் பணி ஆரம்பமாகியுள்ளது. இந்த மாத இறுதிப்பகுதியில் முதலாவது 20 வீடுகள் தயாராகிவிடும். 50,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அவற்றில் 1000 வீடுகள் துரிதகதியில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மேலும் 5,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான பொறுப்பை இந்திய அரச துறை பொறுப்பேற்று உள்ளது. உள்ளூர் பணியாட்களைக் கொண்டு இவை நிர்மாணிக்கப்படவுள்ளன. பொறியியலாளர்கள் சிலரும் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் சிலரும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். உண்மையில் நிர்மாணப் பணியானது உள்ளூர் மக்களாலேயே மேற்கொள்ளப்படும். பயனாளிகளுக்கான திட்டத்தின் அடிப்படையில் 43,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும். ஆதலால் மக்கள் சொந்த வீடுகளை கொண்டிருப்பார்கள். வீடுகள் அழிக்கப்பட்ட அல்லது சேதமாக்கப் பட்டவர்களுக்கு இந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது.

கேள்வி: சம்பூர் திட்டம் தொடர்பாக இன்னரும் இணக்கப்பாட்டை எட்டவில்லையே?

நிருபமா: நாங்கள் இன்னரும் உடன்படிக்கையை எட்டவில்லை. இலங்கயின் சட்டமா அதிபர் இறுதி அங்கீகாரத்தை வழங்க வேண்டியுள்ளது. இலங்கை தரப்புடன் என்.ரி.பி.சி. உடன்பாட்டுக்கு வருவதற்கு சட்டமா அதிபர் தனது இறுதி அங்கீகாரத்தை வழங்க வேண்டியுள்ளது. அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம். ஆனால் அவர்கள் உறுதிமொழி அளித்துள்ளனர். அதனை செய்வதாக அவர்கள் எமக்கு உறுதியளித்துள்ளனர் என்றார்.(நன்றி: அக்கினிக் குஞ்சு)

http://www.seithy.com/breifNews.php?newsID=45983&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

சனல் நாலின் தாக்கம் இந்தியாவில் மெல்ல மெல்ல தலையெடுக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு சிங்கள இராணுவமே முன்னின்று உழைக்கின்றது ( வீடியோ எடுத்த சிப்பாய்கள், சனல் நாலு போய் என்று மறுப்பு ஒளிப்பதிவு எடுத்து பிரச்சாரம் செய்யும் பாதுகாப்பு அமைச்சு).

- http://www.yarl.com/forum3/index.php?showtopic=88233

- http://www.yarl.com/forum3/index.php?showtopic=88244

அதுவே நிருபாமா உட்பட இந்தியா கைவிரிக்கும் நிலைமையை உருவாக்கிவிடும்.

மேலும் நிருபாமா அமெரிக்க தூதுவராக செல்ல உள்ளார். அடுத்து மேனன், அவரும் வேறு ஏதாவது அலுவலை தேடிப்போகலாம்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு முன்வைத்துள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்த தனது நிலைப்பாடு என்ன என்பதை சிறிலங்கா அரசாங்கமே சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சிங்களத்தின் இன அழிப்பு நாடகங்களுக்குக் கதை, வசனம், டைரைக்ஷன் எல்லாம் இந்தியா தானுங்களே, நிருபமா ராவ் அவர்களே!

எனவே நீங்கள் தான் பதில் கூற வேண்டும்!

உங்கள் ராஜ தந்திர நடவடிக்கைகள் வெளி வரும் நாட்கள், நெருங்குகின்றன!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.