Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4க்கு எதிராக வன்னியில் “பலவந்தப்” பேரணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Saturday, July 9, 2011, 20:58சிறீலங்கா

இலங்கை அரசாங்கத்தின் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கின்ற சனல் 4 ஒளிப்படக் காட்சிக்கு எதிராக கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இராணுவத்தினர் பலவந்தமாகப் பொதுமக்களைக் கொண்டு பேரணி நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் ஜெயபுரம் 661 ஆவது இராணுவ படைத்தளத்திற்கு அருகில் நடைபெற்றுள்ளது.

ஜெயபுரம், கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, முழங்காவில் போன்ற பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்கு வெள்ளியன்று சென்ற இராணுவத்தினர், சனிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜெயபுரத்திற்கு வருகை தந்து விவசாயிகளுக்கான உபகரணங்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்போவதாகவும், அவற்றை வந்து பெற்றுச் செல்லுமாறும் அறிவித்திருந்தனர்.

மறுநாள் காலை இந்தப் பகுதிகளுக்கு பேரூந்துகளுடன் சென்ற படையினர் ஆண்கள் பெண்கள் என பொதுமக்களைப் பலவந்தமாக பேரூந்துகளில் ஜெயபுரத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளனர். ஜெயபுரம் இராணுவ முகாமில் சனல் 4க்கு எதிராக ஏற்கனவே தயாராக எழுதி வைக்கப்பட்டிருந்த பதாதைகள், சுலோக அட்டைகளை இவர்களது கையில் கொடுத்து எதிர்ப்பு ஊர்வலம் நடத்துமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும், பொலிசாரும் சூழ்ந்து நிற்க, சுலோக அட்டைகளையும் பெரிய சிங்கக் கொடிகளையும் ஏந்திய மக்களினால் சுமார் 300 மீற்றர் தொலைவுக்கு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.

முன்கூட்டியே அங்கு அழைத்து வரப்பட்டிருந்த செய்தியாளர்கள், இந்த எதிர்ப்பு ஊர்வலத்தை படங்கள் எடுத்ததுடன், வீடியோவும் எடுத்துள்ளனர்.தாங்கள் ஏமாற்றப்பட்டு அச்சுறுத்தப்பட்டே, ஊர்வலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் தமது சுயவிருப்பத்திற்கு மாறாகவே தாங்கள் கலந்து கொள்ள நேர்ந்ததாக ஊர்வலத்திற்குப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட பலரும் தெரிவித்துள்ளனர்.

போர்க்குற்றக் குற்றச்சாட்டினால் விழி பிதுங்கி நிற்கும் அரசாங்கத்தையும், இராணுவத்தினரையும் இத்தகைய கபடமான ஏமாற்று நாடகங்களின் மூலம் காப்பாற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய வன்னியில் உள்ள இராணுவ அதிகாரிகள் முழு மூச்சாக இறங்கியிருப்பதாக வன்னியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றார்கள்.

http://www.tamilthai.com/?p=21351

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் கனல் 4 ஒளிபரப்பி சிறிலங்காவின் முகத்தில் கரியைப்பூசட்டும்

சானல் 4 எதிர்ப்பு - 'இராணுவத்தின் ஏற்பாடு'

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் தமது குடும்பத்தினர் பலர் உயிர் இழந்துள்ள அதேவேளை, பலர் காணாமல் போயுள்ள நிலையில் அங்கு நடைபெற்ற உண்மைச் சம்பவங்களைப் பொய்யானது என கோஷமிடச் செய்வதற்கு தாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில் சண்டைகள் முடிந்துவிட்டது. இனியாவது நிம்மதியாக இருக்கலாம் என மீள் குடியேற்றத்தில் சொந்த ஊர்களுக்கு வந்துள்ள தங்களுக்கு இவ்வாறான நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டிருப்பதனால், அடுத்தடுத்து இனிமேல் என்ன நடக்கப் போகின்றதோ என்ற அச்சத்திலேயே தாங்கள் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110710_chanal4namal.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.