Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது இறுதி இலட்சியத்துக்கு இடைக்கால அரசியல் தீர்வு உதவுமா?

Featured Replies

ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷையின் இறுதி வடிவமான சுதந்திரத் தமிழ் ஈழ தனி அரசை அடைவதற்கு சமகாலத்தில் ஒரு இடைக்கால அரசியல் தீர்வு பல வகைகளில் அனுகூலமாக அமையும். இதற்கு கடந்த கால்நூற்றாண்டு நடந்த தமிழ்த் தேசியத்தின் ஆயுதப்போராட்ட வரலாற்றை காய்தல் உவத்தல் இன்றி ஒருமுறை பின்னோக்கி பார்ப்பது அவசியம்.

1987ல் உருவான இலங்கை இந்திய ஒப்பந்தந்தை ஒரு அரசியல் போக்காக அனுமதித்து தமிழ் தேசியத் தலைமையான புலிகள் ஆயுதப்போராட்டத்தையும் ஒரு சமாந்திரமாக நகர்த்தி இருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் 2009 மே ஆயுதப்போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவின் பின்பும் குறைந்த பட்சம் வட கிழக்கு இணைந்த தமிழ் மாகாண சபை எமது கைவசம் இருந்திருக்கும்.

ஒரு இறுதி இலக்கை முன்வைத்து நகரும் நாம் அந்த இலக்கு நோக்கிய பயணத்தில் வரக்கூடிய அல்லது அடையக்கூடிய இடங்களை எமக்கான கையிருப்பாக்கிக்கொண்டு தொடர்ந்து முன்னேறுவதே தற்போதை உலக அரசியல் சூழலில் புத்திசாலித்தனமான வழிமுறையாகும்.

மகிந்த அரசு போர்க்குற்றம் குறித்து சர்வதேச நெருக்கடிக்குள் உள்ளாகிவரும் சூழலில் போர்க்குற்றத்துக்கான தண்டனையை ஒரு இடைக்கால அரசியல் தீர்வாக மாற்றி அமைக்கக்கூடிய அரசியல் பொறிமுறை ஒன்றை புலம்பெயர் தமிழர்கள் உடன் செய்தாக வேண்டும்.

மேற்கு நாடுகள் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போர்க்குற்றத்தை ஒரு கருவியாக பாவிக்க முயல்வதையே ரணிலின் அமெரிக்க பயணம் எமக்கு சொல்லும் அரசியல் செய்தியாகும். இலங்கையில் ஓர் ஆட்சி மாற்றம் மேற்குல அரசுகளின் நிகழ்ச்சி நிரலில் உள்ளதே அன்றி தமிழருக்கான ஒரு அரசியல் தீர்வு அல்ல. அத்துடன் ரணில் தலைமையிலான அரசு ஒன்று இலங்கையில் உருவானால் புலம்பெயர்ந்த தமிழர் தரப்பின் அரசியல் அழுத்தங்கள் பெரிய அளவில் மேற்குலக அரசுகளினால் கவனிப்பை பெறமாட்டாது.

மேற்குல அரச விரோத மகிந்த அரசே நாம் பெறக்கூடிய இடைக்கால அரசியல் தீர்வுக்கு தகுந்த சிங்களத்தின் அரசியல் தலைமையாகும். இதை விளங்கிக்கொள்ள 2002ல் ரணில் அரசுடன் நாம் செய்து கொண்ட யுத்த நிறுத்த காலத்தில் மேற்குல நாடுகள் எவ்வாறு புலிகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அழுத்தத்தை பிரயோகித்தார்களென்பதை நாம் இங்கு நனவுடை தோய்ந்து பார்த்தல் தகும்.

முக்கியமாக நாடு கடந்த தமிழீழ அரசு இந்த விடயத்தில் ஒரு மென்போக்கை கடைப்பிடித்து பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் உலகத்தமிழர் பேரவை போன்ற அமைப்புகள் இலங்கை மீது போர்க்குற்றம் குறித்து உருவாகியுள்ள மேற்குலக அரசியல் அழுத்தத்தை போர்க்குற்றத்துக்கான தண்டனை வழங்கப்படமுன் இரு இடைக்கால அரசியல் தீர்வை இலங்கையில் ஏற்படுத்தல் வேண்டும்.

தமிழ்த்தேசிய இலக்கை அடையும் அஞ்சல் ஓட்டத்தில் இறுதிச்சுற்ற ஓடவேண்டியவர்களே நாடு கடந்த தமிழீழ அரசைச் சேர்ந்தவர்கள். 50 ஆயிரம் மாவீரர்களால் முதற் சுற்று ஓடி முடிக்கப்பட்ட போதும் இன்னும் இரண்டாம் சுற்று ஓடிமுடிக்கப்படாத நிலையில் இறுதிச்சுற்று ஓட வேண்டியவர்கள் தமது நேரம் வரும் வரை சற்று பொறுமை காக்க வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் காலம் முந்தி தீவிரமடையுமானால் நாம் பெறக்கூடிய இடைக்கால அரசியல் தீர்வு இன்னும் நீர்த்துப்போகலாம் அல்லது வராமலே போகலாம். கடைசியில் இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தும் தமிழர் தரப்பு இலகுகாத்த கிளிபோல் ஆகவேண்டிய நிலை ஏற்படும்.

புத்திமான் பலவான் என்பது எமது மூதோர் வாக்கு.

  • தொடங்கியவர்

'இலங்கை விஷத்தில் இந்திய கொள்கை மாற வேண்டும்'

http://www.yarl.com/forum3/index.php?showtopic=16701&st=0 இந்த இணைப்பையும் ஒருதரம் மீள் வாசிப்பு செய்தால் நான் மேல் எழுதியுள்ள விடயங்களை ஆழமாக புரிந்து கோள்ளலாம்.

இணைப்புக்கு நன்றி. காலத்துக்கு தேவையான கருத்துக்கள்.

ஆட்சியில் உள்ள மகிந்த கூட்டம் எந்த தீர்வையும் தர மறுத்து வருகின்றது. அதேவேளை எதிர்க்கட்சியினர் ' ஆதரவு ' தருவதாக கூறுவதும் அவதானமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

மகிந்த அரசு போர்க்குற்றம் குறித்து சர்வதேச நெருக்கடிக்குள் உள்ளாகிவரும் சூழலில் போர்க்குற்றத்துக்கான தண்டனையை ஒரு இடைக்கால அரசியல் தீர்வாக மாற்றி அமைக்கக்கூடிய அரசியல் பொறிமுறை ஒன்றை புலம்பெயர் தமிழர்கள் உடன் செய்தாக வேண்டும்.

தமிழர் தரப்பு 'போர்குற்ற விசாரணகைளை' தந்திரோபாயமாக நகர்த்தி முதலில் ஒரு அரசியல் தீர்வை, மேற்குலத்தின் 'கொழும்பில் அரசியல் மாற்றம்' என்ற அட்டவணைக்குள் பெறல் வேண்டும்.

அதன் பின்னர், மீண்டும் சரியான நேரம் வரும்பொழுது போர்குற்ற / இன அழிப்புக்களை முன்னெடுத்து இறுதித்தீர்வை நோக்கி நகரலாம்.

  • தொடங்கியவர்

இணைப்புக்கு நன்றி. காலத்துக்கு தேவையான கருத்துக்கள். .....

இந்த மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றாக வேண்டியமை காத்திரமான ஒரு இடைக்கால அரசியல் கிடைக்க பேருதவியாக இருக்கும். இந்த விடயத்தில் உலகத்தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசவையை சேர்ந்தவர்கள் மற்றும் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழ தமிழ் மக்கள் அமைபுகள் அனைவரும் ஓரே குரலில் உள்ளூராட்சி தேர்தலில் ஒரு அரசியல் அலையை உருவாக்க வெண்டும்.

தேர்தலின் பின் ஒரு பெரிய மாற்றத்தை இலங்கை அரசு முகம்கொடுக்கவுள்ளதை கவனத்தி கொள்ளக.

இந்த மாதம் 23ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றாக வேண்டியமை காத்திரமான ஒரு இடைக்கால அரசியல் கிடைக்க பேருதவியாக இருக்கும். இந்த விடயத்தில் உலகத்தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசவையை சேர்ந்தவர்கள் மற்றும் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழ தமிழ் மக்கள் அமைபுகள் அனைவரும் ஓரே குரலில் உள்ளூராட்சி தேர்தலில் ஒரு அரசியல் அலையை உருவாக்க வெண்டும்.

தேர்தலின் பின் ஒரு பெரிய மாற்றத்தை இலங்கை அரசு முகம்கொடுக்கவுள்ளதை கவனத்தி கொள்ளக.

இந்த தேர்தலில் கூட்டமைப்பு நிச்சயம் வென்று ஒரு பலமான மக்கள் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு பின்புல ஆதரவு தாயக மக்களுக்கு உண்டு.

அதேவேளை ஆறுமாத கால அவகாசம் தரப்பட்ட 'நல்லிணக்க ஆணைக்குழு' அறிக்கை (கார்த்திகை 15) சர்வதேச அணுகுமுறையில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமையலாம்.

குடாநாட்டில் TNA வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றது. -

09 ஜூலை 2011

சிவாஜிலிங்கத்தின் வாசஸ்தலத்தின் மீது கழிவொயில்கள் - குளோபல் தமிழ்ச்செய்தியாளர் :

உள்ளுராட்சித் தேர்தலுக்கான நாட்கள் அண்மித்து வருகின்ற வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்கின்றது. இன்று அதிகாலை வேளையில் வல்வெட்டித் துறைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான சிவாஜிலிங்கத்தின் வாசஸ்தலத்தின்மீது கழிவொயில்கள் உள்ளிட்ட கழிவுகள் ஊற்றப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 3

மணியளவில் இரண்டிற்கு மேற்பட்ட கயஸ் வாகனங்களில் வந்த நபர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முன்னதாக வலி மேற்கு பிரதேச சபைக்கான வேட்பாளரான ஐங்கரன் என்பவரது வீட்டின் மீதும் இதே போன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக ஐங்கரன் தொலைபேசி மூலமாகத் தனக்கு தகவல்களைத் தந்துகொண்டிருந்ததாகவும் உரையாடிக்கொண்டிருந்த வேளை வீட்டிற்கு வெளியே சத்தங்கள் கேட்டதாகவும் இதையடுத்து தாம் வீட்டிற்கு வெளியே வர முற்பட்ட வேளை பைகளில் நிரப்பி வந்த கழிவுகளை தாக்குதலாளிகள் வீட்டின்மீது வீசிவிட்டுத் தப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமார் அரை மணி நேரம் தாமதித்து அங்கு வந்ததாகவும் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றைச் செய்யுமாறு அவர் கூறியதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதையடுத்து காலை வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு ஒன்றைச் செய்ததாக அவர் தெரிவிக்கின்றார். வடமராட்சிப் பகுதியில் பரவலாக இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும் கணிசமான வேட்பாளர்கள் அச்சங் கலந்த நிலையில் இதுபற்றி வாய்மூடி மௌனமாகவே இருந்து வருகின்றனர்.

இதே வேளை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்காகப் போட்டியிடுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச் சந்திரனின் செயலாளரான

றமேஸ் என்பவரின் சுவரொட்டிகள் முற்றுமுழுதாகக் கிழித்தும் கழிவொயில்கள் ஊற்றப்பட்டும் நாசமாக்கப்பட்டிருப்பதாக றமேஸ் குற்றஞ்சாட்டுகின்றார்.

இரவு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அதிகாலை வேளைகளில் அவசர அவசரமாகக் கிழித்தும் கழிவொயில் ஊற்றப்பட்டதாகவும் அவர் கூறுகின்றர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இந்தத் தேர்தலில் அச்சுறுத்தி அடிபணிய வைப்பதன் மூலம் தாம் வெற்றியைப் பெற்றுக்கொள்ள அரசும் அரச ஆதரவு சக்திகளும் முற்படுவதாக கூட்டமைப்பு மீண்டும் பகிரங்கமாக் குற்றஞ்சாட்டியுள்ளது.

தேர்தல் வன்செயலாக இவை இருக்கின்ற போதும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டம் ஒழுங்கு நீதியில் மேற்கொள்ள எவருமே முன்வரவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனிடையே வலிகாமம் மேற்கு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மீதான அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதற்காக அப்பகுதிப் பொலிஸ் பொறுப்பதிகாரியை உடனடியாக இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை அடுத்து அதிகாலை வேளைகளில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதாகவும் தெரிய வருகின்றது.

இதையடுத்து அரசியல் தரப்பொன்றின் தலைமை கொழும்புத் தலைமையகத்தினூடாக எடுத்த நடவடிக்கைகளையடுத்தே குறித்த அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவதாக தற்போது

தகவல்கள் வெளியாகியுள்ளன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=88484

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.