Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதிர்காமம் சென்ற பெண்ணை இராணுவத்தினரே பலத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமம் சென்ற பெண்ணை இராணுவத்தினரே பலத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்!

சிறுத்தை கடித்து மரணமானதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட பெண்ணை சிங்கள இராணுவத்தினரே பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் படுகொலை செய்துள்ளனர்.

குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக அவரது உறவினர்களால் தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற பெண் ஒருவரை யால காட்டுப் பகுதியில் சிறுத்தைப் புலி கடித்துக்குதறியதில் அப்பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக முன்னர் செய்தி வெளியாகியிருந்தது.

ஆயினும் இவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் சிறுத்தையோ அல்லது ஏதாவது மிருகமோ தாக்கியதால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

குறித்தபெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும்உறவினர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த பகுதியில் பெண்ணி மரண ஓலம் கேட்டபோது அப்பகுதிக்கு பொதுமக்கள் சிலர்சென்றவேளையில் சீருடையில் இருந்த மூவர் அப்பகுதியில் இருந்து ஓடியதை அவதானத்துள்ளதாகவும்தெரிவிக்கின்றனர்.

இதேநேரம்உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சம்பவ இடத்துக்கு வந்த படையினரும் வன இலகா அதிகாரிகளும்எரிக்க முனைந்தபோதும் குறித்த பெண்ணின் உறவினர்களின் எதிர்ப்பினால் அதுகைவிடப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் யால வள்ளியம்மன் ஆற்றுப் பகுதியில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் இச்சம்பவத்தின் போது மட்டக்களப்பு தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சாந்தகுமாரி (வயது 33) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்திருந்தார்.

இவர் திருக்கோவில் கல்விவலயத்தில் இலிகிதராக கடமையாற்றுகின்றார் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

தற்போதுகதிர்காமம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணின் மரணம்தொடர்பில் பிரேத பரிசோதனைக்கு உறவினர்களினால் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/17355/57//d,article_full.aspx

கதிர்காமத்துக்குச் சென்ற வழியில் சிறுத்தை கடித்து பெண் உயிரிழப்பு!

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற பெண் ஒருவரை யால காட்டுப் பகுதியில் சிறுத்தைப் புலி கடித்துக்குதறியதில் அப்பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் யால வள்ளியம்மன் ஆற்றுப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது மட்டக்களப்பு தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை சாந்தகுமாரி என்ற 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கதிர்காமம் உற்சவத்தை அடுத்து நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான அடியார்கள் கதிர்காமத்திற்கு யாத்திரை செல்கின்றனர். விஷேடமாக வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து இம்முறை பெருந்திரளான அடியார்கள் கதிர்காமத்திற்கு யாத்திரையினை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற சாந்தகுமாரி நேற்று அதிகாலை யால காட்டுப் பகுதியில் வள்ளியம்மன் ஆற்றுப் பகுதியில் காலைக் கடன் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அப்பகுதிக்கு வந்த சிறுத்தையொன்று இப்பெண்ணை கடித்து இழுத்துச் சென்றுள்ளது.

சிறுத்தையினால் கடித்து இழுத்துச் செல்லப்பட்ட போது குறித்த பெண் கதறி அழுததுடன் சத்தமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏனைய யாத்திரிகர்கள் அந்த ஆற்றுப் பக்கமாக ஓடியுள்ளனர். அதனால் குறித்த பெண்ணை அவ்விடத்தில் சிறுத்தை விட்டு விட்டுச் சென்றுள்ளது.

பின்னர் யாத்திரிகர்கள் அவ்விடத்திற்குச் சென்று பார்த்த போது குறித்த பெண் இறந்து கிடந்துள்ளார். பெண்ணின் கழுத்தில் சிறுத்தை கடித்துள்ளமையினாலேயே குறித்த பெண் சம்பவ இடத்தில் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Edited by தமிழ் அரசு

இப்படியான செயல்கள் இன்னும் தொடரும் செய்யும், காரணம்:

போர்குற்ற குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவிவருவதும்,

அவர்களுக்கான தண்டனை மறுக்கப்பட்டு அரசால் பாதுகாக்கப்படுவதும்,

ஒட்டுமொத்த இராணுவம் தமிழர்களை தமது அடிமையாக என்னும் மனப்பான்மையும் அங்குள்ளதால்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மனித மிருகங்களாலேயே கொல்லப்பட்டார்!

Monday, July 11, 2011, 22:40

சிறீலங்கா

கதிர்காமத்திற்கு கால்நடையாக சென்ற போது காட்டு மிருகத்தின் தாக்குதலில் தமிழ் பெண் உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்ட போதிலும் அப்பெண் இராணுவ சீருடை அணிந்த சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த பெண்ணின் உடலில் காணப்படும் காயம் மிருகங்களின் தாக்குதலில் ஏற்பட்ட காயம்போல் காணப்படவில்லையென அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கதிர்காமம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள இந்த பெண்ணின் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக கூறும் உறவினர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த பெண்ணின் மரண ஓலம் கேட்டபோது அப்பகுதிக்கு பொதுமக்கள் சிலர் சென்றவேளையில் இராணுவ சீருடையில் இருந்த மூவர் அப்பகுதியில் இருந்து ஓடியதை தாம் கண்டதாக தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினரும் வன இலாகா அதிகாரிகளும் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சம்பவ இடத்தில் வைத்து எரிக்க முற்பட்டதாகவும், உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்தே சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தம்பிலுவில் வீசி வீதியை சேர்ந்த 33வயதுடைய கிருஸ்ணபிள்ளை சந்திரகுமாரி என்ற இந்த பெண் திருக்கோவில் கல்வி வலயத்தில் எழுதுவிளைஞராக கடமையாற்றி வருகிறார்.

தமது உறவினர்களுடன் கதிர்காமத்திற்கு கால்நடையாக சென்ற போதே நேற்று காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது

http://www.tamilthai.com/?p=21526

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட ரீதியில் இங்கு களத்தில் கும்மியடித்து கொண்டு இருக்காமல்.. இதை போன்ற செய்திகளை உலக தலைவர்கள் மற்றும் தமிழகத்தில் கொண்டு சேர்க்கவேணும் ... சும்மா இங்க ctrl+v ctrl+c செய்து கொண்டிருந்தால் mysql database store ஆகும் வேற ஏதாவது பயன் உண்டா என மாறி மாறி சொறிந்து கொள்ளவேணும்..

டிஸ்கி:

இமயம் தொலைக்காட்சிக்கு 2 ஸ்லாட்டு வாங்கி வைக்கோ தொல்லை படுவது.. இன்னும் சீமான் பத்திரிக்கையே தொடங்கவில்லை(?).ஜனநாய்கம் என உலக ஓட்டத்திற்கு வந்துவிட்ட பிறகு ஒன்று செய்ப்வரை ஊக்கிவிக்கணும் அல்லது நீங்களா காசு குடுத்து செய்யவேணும் <_< <_<

நன்றி புரட்சி.

மேலே உள்ள செய்தி உலக பெண் உரிமைகளுக்கு, மனித உரிமைகளுக்கு பாடுபடும் அமைப்புக்களுக்கு நிச்சயம் தேரியப்படுத்தப்படல் வேண்டும்.

பிறருக்கு அனுப்பக்கூடிய செய்திகளின் மூலம் ஆங்கிலத்திலும் இணைக்கப்பட்டால் அது இலகுவாக இருக்கும்.

அனைவரும் தமது முகநூலிலும் இவற்றை இணைத்து வேற்று மொழியினருக்கு இந்த படுகொலைகளை சொல்லவேண்டும்.

Relatives complain rape and murder of Tamil woman by SL Army at Kathirkaamam

[TamilNet, Monday, 11 July 2011, 10:57 GMT]

31-year-old mother of two children, Santhakumari Krishnapillai, from Thampiluvil, Batticaloa, who was on a pilgrimage to Kathirkaamam was raped and killed by Sri Lanka Army on Sunday early hours, according to a complaint made by the relatives of the woman. The incident took place near the riverside of Va’l’liyamman Temple at Kathirkaamam. The police came out with contradicting stories that the woman was killed either by a leopard or bear. Relatives who went to the spot noticed traces of rape. The body has been now taken to Tissamaharama hospital for autopsy.

Relatives of the woman found bite marks as well as cut injuries on her breast and semen stains on her dress.

A TNA parliamentarian of the Batticaloa district also said that according to his information the women had not been killed by wild animals but was raped and killed.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34161

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

:huh: கதிர்காம யாத்திரை செல்லும் நிலையிலா நாம் இருக்கிறோம்?? முள்ளிவாய்க்காலில் நடந்த பாலியல் பலாத்காரங்களும் அதன் பின்னரான படுகொலைகளும் எம் இனத்துப் பெண்கள் அறியாததா??

மிருகங்களைத் தேடிச் சென்றுவிட்டு பின் வருத்தப்படுவதில் எந்தப் பயனுமில்லை.

சரி, இனி என்ன செய்வது ?? முடிந்தளவிற்கு இந்த படுகொலையை உலகறியச் செய்யவேண்டியதுதான்.

அருந்ததி ராய், மற்றும் தெற்கின் பிரபல பெண் மனிதவுரிமையாளர் போன்றோருக்கு இதுபற்றி முறையிடலாம். ஏன். நவநீதம்பிள்ளைக்குக் கூட சொல்லிப் பார்க்கலாம்.

to : ngochr@ohchr.org

cc: Jo Becker <beckerj@hrw.org>,singhp@hrw.org,gangulm@hrw.org,neistaa@hrw.org

Attention Hon. UN HC Navanethem Pillay

United Nations High Commissioner for Human Rights

Subject: Sri Lanka : Add Santhakuma​ri Krishnapil​lai, a Mother of 2, to Sri Lanka's rape/killi​ng filed !

Dear Maradam,

There are nearly 90000 widows, 20000 children without Father and 14000 children without Mother. Among all Tamils, women are being raped, killed and threatened by Sri Lanka on a regular basis. Now add Ms. Santhakumari Krishnapillai, 31-year-old mother of two children to this list.

She is from Thampiluvil, Batticaloa, who was on a pilgrimage to Kathirkaamam was raped and killed by Sri Lanka Army on Sunday early hours. The authority tried to cover up, but relatives of the woman found bite marks as well as cut injuries on her breast and semen stains on her dress.

I kindly urge You to do more in your powers to protect hapless Tamils!

Thanks,,

தனிப்பட்ட ரீதியில் இங்கு களத்தில் கும்மியடித்து கொண்டு இருக்காமல்.. இதை போன்ற செய்திகளை உலக தலைவர்கள் மற்றும் தமிழகத்தில் கொண்டு சேர்க்கவேணும் ... சும்மா இங்க ctrl+v ctrl+c செய்து கொண்டிருந்தால் mysql database store ஆகும் வேற ஏதாவது பயன் உண்டா என மாறி மாறி சொறிந்து கொள்ளவேணும்..

டிஸ்கி:

இமயம் தொலைக்காட்சிக்கு 2 ஸ்லாட்டு வாங்கி வைக்கோ தொல்லை படுவது.. இன்னும் சீமான் பத்திரிக்கையே தொடங்கவில்லை(?).ஜனநாய்கம் என உலக ஓட்டத்திற்கு வந்துவிட்ட பிறகு ஒன்று செய்ப்வரை ஊக்கிவிக்கணும் அல்லது நீங்களா காசு குடுத்து செய்யவேணும் <_< <_<

தமிழகத் தலைவர்களுக்கு கொண்டு செல்லும் வேலையை தமிழகத்தில் இருக்கும் நீங்கள் செய்யலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காம பாதயாத்திரையின் போது 'மிருகத் தாக்குத'லில் உயிரிழந்த பெண் தொடர்பிலான மரணத்தில் சந்தேகம்

[Tuesday, 2011-07-12 08:59:51]

கதிர்காம பாதயாத்திரையின் போது காட்டு மிருகத்தின் தாக்குதலில் உயிரிழந்த பெண் தொடர்பிலான மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பிலான நீதியான விசாரணை நடாத்தப்பட்டு உண்மை நிலைமை வெளிப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தம்பிலுவில் வீசி வீதியைசேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான கிருஸ்ணபிள்ளை சந்திரகுமாரி என்பவர் யால வள்ளியம்ம ஆற்றுப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்க்கப்பட்டார்.

இது விலங்குகளின் தாக்குதலினால் ஏற்பட்ட மரணம் என தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவை விலங்குகளினால் ஏற்பட்ட தாக்குதல் இல்லையென உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழுத்துப்பகுதியில் கத்தி போன்ற கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டுள்ளதுடன் உள்ளாடைகளும் கிழிந்துள்ள நிலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பவம் இடம்பெற்ற நேரம் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் மூன்று சீருடை அணிந்தவர்களின் நடமாட்டம் இருந்ததாகவும் அதனை சிலர் கண்டு தெரிவித்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த பெண் கொலையுண்ட இடத்துக்கு வந்த படையினரும் வன இலகா அதிகாரிகளும் குறித்த சடலத்தை உடனடியாக கொண்டுசென்று எரிக்கநடவடிக்கைகள் எடுத்துள்ளதுடன் அது தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்புத்தெரிவிக்கவே அந்த முயற்சியும் கைவிடப்பட்டு சடலம் கதிர்காமம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து திஸ்ஸ மஹாராம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதேநேரம் சம்பவம் தொடர்பில் சாட்சியங்கள் வழங்கியோர் உறவினர்கள் படையினரால் வீடியோ பண்ணப்பட்டுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

எனவே இந்தச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இந்த விசாரணைகள் உண்மைத்தன்மையானதாக மேற்கொள்ளப்பட்டு அதன் உண்மைத்தன்மைகள் வெளிக்கொணரப்படுவதன் மூலமே பாதயாத்திரை செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46339&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.