Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையம் - உடன்படிக்கையில் கைச்சாத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையம் - உடன்படிக்கையில் கைச்சாத்து

[ புதன்கிழமை, 13 யூலை 2011, 08:36 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சமகால இந்திய ஆய்வு மையம் [Centre for Contemporary Indian Studies - CCIS] ஒன்று ஆரம்பிப்பதற்கான உடன்படிக்கையில் யூலை 12 அன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கல்விசார் ஓர் உறவின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள சமகால இந்திய ஆய்வு மையத்தை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்திய உயர் ஆணையாளர் ஆசோக் கே.காந்தா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் Kshanika Hirimburegama ஆகியோர் சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் முன்னிலையில் நேற்றைய தினம் கையொப்பமிட்டுள்ளனர்.

இப்புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், CCIS ஐ உருவாக்குவதற்காக 56.5 மில்லியன் ரூபாக்களும், ஏனைய கல்வி சார் ஆராய்ச்சி அபிவிருத்தி உதவிகள், நூலகம் அமைத்தல், தகவல் தொழினுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வள மையம் உருவாக்கல் போன்றவற்றிற்கான உதவிகளும் இந்தியாவால் வழங்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என உயர் ஆணையகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை தொடர்ந்தும் இயங்கச் செய்வதற்கான வள ஆக்கங்களும் ஆண்டு தோறும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் உள்ள இளையோர்களை முன்னுரிமைப்படுத்தித் திட்டங்களை மேற்கொள்வதே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தொலைநோக்கு என உடன்படிக்கையில் கைச்சாத்திடும் வைபவத்தில் உரையாற்றும் போது ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்படும் சமகால இந்திய ஆய்வு மையத்தின் ஊடாக சிறிலங்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த மக்கள் கல்வி மற்றும் கலாசார அனுபவங்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முடியும் எனவும் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் மிகப் பலமான கல்விசார் உறவிற்கு தற்போது உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள சமகால இந்திய ஆய்வு மையம் மேலும் வலுச்சேர்க்கும் என பேராசிரியர் Kshanika Hirimburegama நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

யூன் 2010 ல் சிறிலங்கா அதிபர் இந்தியாவிற்கான தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது இம்மையத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப முயற்சிகள் உருவாக்கப்பட்டதாக உயர் ஆணையாளர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கம் இடையிலான பரஸ்பர தொடர்பாடல்களுக்கும் மிக ஆழமான புரிந்துணர்வுக்கும் இம்மையம் பெரிதும் உறுதுணையாக விளங்கும் என்றும் காந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கொள்கை தயாரிப்பாளர்கள், வர்த்தகர்கள், கல்விமான்கள், மாணவர்கள் போன்றோர் சமகால இந்தியா தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு முதன்மையான கல்வி ஆராய்ச்சி மையமாக CCIS விளங்கும் எனவும் உயர் ஆணையாளர் தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110713104272

  • கருத்துக்கள உறவுகள்

இப்புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், CCIS ஐ உருவாக்குவதற்காக 56.5 மில்லியன் ரூபாக்களும், ஏனைய கல்வி சார் ஆராய்ச்சி அபிவிருத்தி உதவிகள், நூலகம் அமைத்தல், தகவல் தொழினுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வள மையம் உருவாக்கல் போன்றவற்றிற்கான உதவிகளும் இந்தியாவால் வழங்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என உயர் ஆணையகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MSN-Emoticon-valentine-chocolate-148.gif

ஆண்டவன் சொத்து ஆளுக்கொரு குத்து! ஆமா வீடு ஏதோ கட்டி தரபோறதா சொன்னிங்களே கட்டிங்களா? :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

சமகால அரச பயங்கரவாதத்தை, தமிழின படுகொலைகளை எப்படி முன்னெடுப்பது என்று தெற்காசியப் பயங்கரவாதிகள் கலந்தாலோசிக்க வசதியாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.