Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதப் போராட்டமும் அகிம்சைப் போராட்டமும் தோற்கவில்லை, சர்வதேசம் எம்மைத் திரும்பிப் பார்ப்பதே அவைகள் மூலம்தான்: சம்பந்தன் எம்.பி.கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டமும் அகிம்சைப் போராட்டமும் தோற்கவில்லை, சர்வதேசம் எம்மைத் திரும்பிப் பார்ப்பதே அவைகள் மூலம்தான்: சம்பந்தன் எம்.பி.கூறுகிறார்

[sunday, 2011-07-17 12:34:04]

தமிழ் மக்களின் அறவழி மற்றும் ஆயுதப்போராட்டங்களின் உண்மை நிலையை சர்வதேச சமூகம் உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் தான் ஐ.நா.வின் நிபுணர் குழுவின் அறிக்கையும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் அறிக்கைகளும் அமைந்துள்ளன.

அதனால்தான் சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணும்படி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நிலாவெளி அடம்போடை,ஆத்திமோட்டை,கன்னியா ஆகிய இடங்களில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டங்களில் இரா.சம்பந்தன்,யாழ்ப்பாணம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி,திருகோணமலை மாவட்ட முன்னைநாள் எம்.பி.க.துரைரெட்ணசிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.

சம்பந்தன் இங்கு தொடர்ந்து பேசுகையில்;

ஆயுதப்போராட்டம் உலக நாடுகளின் உதவியுடன் முடிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் தலைமை சிதைந்து விட்டதாக அரசாங்கம் எண்ணியது.ஆனால்,தந்தை செல்வாவின் தலைமையிலான 30 வருடகால அறவழிப்போராட்டமும் அதன்பின்னர் இடம்பெற்ற 30 வருட கால ஆயுதப்போராட்டமும் வீணாகிப் போனதாக கருதி விடக்கூடாது.இப்போராட்டங்களிலிருந்து தான் இலங்கைத் தமிழர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளின் உண்மைத்தன்மையை சர்வதேச சமூகம் உள்வாங்கிக்கொண்டது.அதனைத் தொடர்ந்தே தமிழ்மக்களின் நியாயமான உணர்வுகளை மதித்து சரியான தீர்வு ஒன்றை முன்வைக்கவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை சர்வதேச சமூகம் வற்புறுத்தி வருகின்றது.அதன் அடிப்படையில் அமைந்ததே ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையும் ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் அறிக்கைகளும் அமைந்துள்ளன.

யுத்தத்தின் பின்னரான பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாக வெற்றியீட்டிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான அரசியல் தீர்வு காணும்படி சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தித்தான் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்று அமெரிக்கா,இந்தியா உட்பட ஏனைய நாடுகளும் வற்புறுத்தி வருகின்றன.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த்தேசிய்கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி காணப்படும் அரசியல் தீர்வுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.ஆனால்,அரசாங்கமே வேறுவிதமாக செயல்படுகிறது.எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை ஒட்டிய பிரசாரத்திற்காக அமைச்சர்கள் எல்லாரும் யாழ்ப்பாணத்தில் நிற்கின்றார்கள்.யாழ்ப்பாணம் மாவட்ட மக்களை விலைக்கு வாங்கி விடலாமென்று கனவு காண்கின்றனர்.

வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் 1970 தேர்தலில் பிரிவினை பேசிய தமிழ்த்தலைவர்களை ஆதரிக்கவில்லை.1972 இல் புதிய அரசமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் அந்நிலையில் மாற்றம் ஏற்பட்டது.1977 தேர்தலில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக வந்த பின்னர் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்று அன்னை இந்திரா காந்தியிடம் வலியுறுத்தினார்.அன்றைய அரசாங்கம் அதனைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.இன்றைய அரசாங்கம் உலக நாடுகளின் கண்டனத்துக்கு இலக்காகி உள்ளது.இவ்வாறான கண்டனங்களைப் புறந்தள்ளிவிட முடியாத நிலைக்கு இலங்கை அரசாங்கம் ஆளாகியுள்ளது.ஐ.நா.வின் கண்டனங்களை எதிர்நோக்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காணவேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதில் தவறினால் அரசாங்கம் தப்பிப்பிழைப்பது மிகவும் கஷ்டமான காரியமாகும்.இந்தக் கட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தனது ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.இதற்கு தற்போது தேவைப்படுவது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மீது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தாம் வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் வலுப்படுத்துவதேயாகும் என்றும் வலியுறுத்தினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46639&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப்போராட்டம் உலக நாடுகளின் உதவியுடன் முடிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் தலைமை சிதைந்து விட்டதாக அரசாங்கம் எண்ணியது.ஆனால்,தந்தை செல்வாவின் தலைமையிலான 30 வருடகால அறவழிப்போராட்டமும் அதன்பின்னர் இடம்பெற்ற 30 வருட கால ஆயுதப்போராட்டமும் வீணாகிப் போனதாக கருதி விடக்கூடாது.இப்போராட்டங்களிலிருந்து தான் இலங்கைத் தமிழர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளின் உண்மைத்தன்மையை சர்வதேச சமூகம் உள்வாங்கிக்கொண்டது.அதனைத் தொடர்ந்தே தமிழ்மக்களின் நியாயமான உணர்வுகளை மதித்து சரியான தீர்வு ஒன்றை முன்வைக்கவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை சர்வதேச சமூகம் வற்புறுத்தி வருகின்றது.அதன் அடிப்படையில் அமைந்ததே ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையும் ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் அறிக்கைகளும் அமைந்துள்ளன.

சம்பந்தன் ஐயா என்ன இருந்தாலும் பழுத்த அனுபவமுள்ளவர்..! உண்மைகளைப் பேசியிருக்கிறார்..! :rolleyes:

சம்பந்தரின் தேர்தல் காலக் கருத்துக்களைப் பாராட்டலாம்.

அஹிம்சை அல்ல, ஆயுதப் போராட்டத்தின் காரணமாகவே சர்வதேசம் தமிழரின் பிரச்சினையை உள்வாங்கியதோடு மட்டுமல்ல புறக்கணிக்க முடியாத நிலையையும் அடைந்தது என்பதே உண்மை.

ஆனால், சம்பந்தர் தேர்தல் முடிந்ததும், "வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற்றுவது மாதிரி" தமிழின விரோதிகளான காட்டுமிராண்டிப் பயங்கரவாதிகளின் தமிழின அழிப்புக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ துணை போகக்கூடாது.

அகிம்சையோ ஆயுதப்போராட்டமோ, அவை சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு எதிரான எமது நியாயமான போராட்டங்களே.

சம்பந்தர் இவ்வாறு பேசியுள்ளார் என்பதை விட அங்குள்ள மக்களின் விருப்பத்தை / எதிர்பார்ப்பை பிரதிபலித்துள்ளார் என்பதே உண்மை. அதாவது மக்கள் தெளிவாகத்தான் உள்ளனர் என்பதே.

கூட்டமைப்பினர் அடுத்த கட்டத்திற்கு எமது அரசியல் போராட்டத்தை நகர்த்தவேண்டிய வரலாற்று கடமையையும் கொண்டுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப்போராட்டம் தான் ஈழத்தமிழரின் பிரச்சனையை உலகுக்கு உணர்த்தியது.

உங்கள் அகிம்சை போராட்டம் இந்தியாவுக்கே உணர்த்தமுடியவில்லை சம்பந்தன் அவர்களே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.