Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தின்போது குழப்பம் விளைவித்த பொலிசார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தின்போது குழப்பம் விளைவித்த பொலிசார்.

18 ஜூலை 2011

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சுன்னாகம் நகர்ப் பகுதியில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியையும் கழற்றிவித்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி. ஒலி பெருக்கி நிறுத்தப்பட்ட பின்னரும் 5 நிமிடங்கள் தனது உரையை தொடர்ந்த பின்பே நிறுத்தினார். நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மக்கள் அனைவரது உரையும் முடிந்த பின்னரே கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கதாகும் வலி தெற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவிலை அண்மித்த பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போதே பொலிசார் இந்தச் செயற்பாட்டைச் செய்துள்ளனர். வலி தெற்கு பிரதேச சபைக்கான பிரச்சாரக் கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் செயலாளர் பா.கஜதீபன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பி.களான செல்வராசா, ஜோகேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன், விநோதரலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, ஜனநாயகமக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோருடன்; வவுனியா மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இதற்கென சுன்னாகம் பொலிசாரிடம் உரிய அனுமதிகள் பெற்றிருந்தபோதும் சுன்னாகம் நகர்ப் பகுதியில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியை உடன் அகற்றுமாறு கூறி அகற்றி வைத்ததுடன் 10 மணி தாண்டி 5 நிமிடங்கள் ஆகுவதற்கிடையில் நிகழ்வின் மேடைக்கு வந்த பொலிசார் ஒலிபெருக்கியை நிறுத்த உத்தரவிட்டதுடன் மேடைக்கு அருகில் இருந்த ஒலிபெருக்கிப் பெட்டியையும் நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.;

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64294/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் தேர்த்தலில் மகிந்த வெல்ல வேண்டும் என கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.இதற்காக வடக்கில் 30 அமைச்சர்களுடன் பல கோடி பணமும் வாரி இறைக்கப்படுகிறது.வடக்கில் தேர்த்தலில் வெல்வதன் மூலம் வடக்கு மக்கள் தமக்கு ஆதரவு தந்துள்ளார்கள் என உலகுக்கு காட்ட மகிந்தவின் கூட்டம் பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள்.

தமிழினப் படுகொலை செய்த பயங்கரவாதிகளுக்கும், அவர்களின் கைக்கூலிகளுக்கும் தமிழர் நன்றி பாராட்ட வேண்டியதில்லை, ஏமாற்றுவதும் தவறில்லை.

வாங்குவதை எல்லாம் நன்றாக வாங்கி விட்டு வாக்கை மட்டும் போடவேண்டிய கூட்டமைப்புக்கு போட்டால் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.