Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமிங்கல வேட்டையில் சிறிலங்கா கடற்படை- புதிதாக கிளம்பும் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திமிங்கல வேட்டையில் சிறிலங்கா கடற்படை- புதிதாக கிளம்பும் சர்ச்சை

[ வியாழக்கிழமை, 21 யூலை 2011, 01:58 GMT ] [ தா.அருணாசலம் ]

மன்னார் தாழ்வுபாடு கீரி கடற்கரையில் கரையொதுங்கிய திமிங்கலத்தை சிறிலங்கா கடற்படையினரே கொன்றிருக்கலாம் என்று சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இறந்தநிலையில் கரையொதுங்கிய திமிங்கலத்தில் இருந்த ஆம்பர் எனப்படும் விலை உயர்ந்த பொருள் காணாமற் போயிருந்ததாலேயே இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

திமிங்கலத்தில் உள்ள ஆம்பர் எனப்படும் பொருள் சுமார் 100 மில்லியன் ரூபா வரை பெறுமதியானது என்று திருகோணமலை பிராந்திய கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் அதிகாரி நீல் மொன்ரகே தெரிவித்துள்ளார்.

கரையொதுங்கிய திமிங்கலத்தின் உடலை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிய சிறிலங்கா கடற்படை அதை உடனடியாக எரித்து விட்டதால் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் கடல் எல்லைக்குள் கண்டுபிடிக்கப்படும் அனைத்து வளங்களையும் கையாளும் அதிகாரம் கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கே உள்ளது.

ஆனால் அவர்களிடம் இருந்து அவசரமாக அந்த திமிங்கலத்தை பொறுப்பேற்ற சிறிலங்கா கடற்படையினர் அதை உடனடியாகவே எரித்து விட்டதாகவும் நீல் மொன்ரகே கூறியுள்ளார்.

ஆனால் அந்தத் திமிங்கலத்தினால் சுற்றாடலுக்கு மாசு ஏற்படும் ஆபத்து இருந்ததால் தான் அதை உடனடியாக எரித்ததாக சிறிலங்கா கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

கடற்படை மீதான குற்றச்சாட்டை அவர் நிராரித்த போதும், அந்தத் திமிங்கலத்தை ஆய்வு செய்ய தேசிய கடற்றொழில் ஆராய்ச்சி அபிவிருத்தி முகவரகம் விடுத்த வேண்டுகோளையும் சிறிலங்கா கடற்படை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20110721104325

  • கருத்துக்கள உறவுகள்

திமிங்கிலங்களை உலக அளவில், அழிவில் இருந்து பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் கூட சிங்களம், கையெழுத்து வைத்திருக்குமோ தெரியாது!

மனிதர்களுக்கே சிங்களத்தில் பாதுகாப்பு இல்லை, இதில திமிங்கிலம் வேற!

தமிழனிடம் இருந்து தங்கம்!

திமிங்கிலத்திடம் இருந்து 'ஆம்பர்'!

சீனாக்காரனிடம் இருந்து 'டொலர்'!

இந்தியாவிடம் இருந்து 'சர்வதேச பாதுகாப்பு கவசம்'!

புத்தனிடம் இருந்து??? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கரையொதுங்கிய திமிங்கலத்தின் உடலை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிய சிறிலங்கா கடற்படை அதை உடனடியாக எரித்து விட்டதால் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எரிப்பதற்க்கு சிங்களவரை கேட்டுத்தான். கடை எரித்தல், வீடு எரித்தல்,மனிதரை உயிரோடு எரித்தல், நெல் வயல்களை எரித்தல் என்று பெரும் அட்டவணையே போடலாம். இப்படி ஒரு இனம் உலகில் இவர்களுக்கு இணையாக உள்ளார்களா என்பது கேள்விக்குறி!!

  • கருத்துக்கள உறவுகள்

எரிப்பதற்க்கு சிங்களவரை கேட்டுத்தான். கடை எரித்தல், வீடு எரித்தல்,மனிதரை உயிரோடு எரித்தல், நெல் வயல்களை எரித்தல் என்று பெரும் அட்டவணையே போடலாம். இப்படி ஒரு இனம் உலகில் இவர்களுக்கு இணையாக உள்ளார்களா என்பது கேள்விக்குறி!!

நூலகங்களை எரித்தல், புத்தரின் சிலைகளையும், அரச மரங்களையும் தவிர, மற்ற எரிபற்று நிலை அடையக் கூடிய எல்லாவற்றையும் எரித்தல்! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.