Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொடங்குகிறது ஈருருளிப்பயணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jul 24, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / நிருபர் கயல்விழி

பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொடங்குகிறது ஈருருளிப்பயணம்.

ஐரோப்பாவின் இதயம் என வர்ணிக்கப்படும் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஈருருளிப்பயணம்.

சிறீலங்காவில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள், வன்முறைகள் தலைவிரித்தாடிய காலங்களைப் படிப்படியாக கூறிக்கொண்டு வரலாம். அந்தவகையில், கறுப்புயூலை நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

23ம் திகதி சனிக்கிழமை பி.பகல் ஸ்ராஸ்பூர்க் நகரத்தின் மத்திய பகுதியான பிளாஸ் கிளேபர் என்ற இடத்திலிருந்து, பாரீஸ் நகரம் நோக்கி, ஈருருளிப் பயணத்தை ஆறு பேர் மேற்கொண்டுள்ளனர்.

பி. பகல் 3மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வை ஆரம்பித்து வைக்க சில்ரிகைம் நகர மேயர் ரவால் நிசான் அவர்கள் வருகைதந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் ஈருருளிப் பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் எனவும் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, உறவினர்கள் வாழ்த்துரைக்க, கண்ணீர்த் திவலையுடன் ஆரம்பமானது சுமார் 500கி.மீ ஈருருளிப்பயணம்.

பி.பகல் 5.45மணிக்கு 40 கி.மீற்றர் தூரத்திலுள்ள சவேர்ன் என்ற இடத்தை சென்றடைந்த போது நகர மேயர் உடனடியாக வருகைதந்து பயணத்தை மேற்கொண்டுள்ளவர்களை வாழ்த்தி வரவேற்றார். மீண்டும் நாளை 24.07.2011பயணம் தொடரும்.

கடந்த மேமாதம் 18ம் திகதி அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றிருந்தது. அதன்போது, தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வுக்கான ஏற்பாடுகளை பிரஞ்சு அரசு மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி மனு கையளிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை பிரஞ்சு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள வேளையில், அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்தப்பயணம் அமைந்துள்ளது.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது. போர்க்குற்றம் புரிந்துள்ளது. இதில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது சிறீலங்கா அரசு. ஆனாலும் நீதி சாகாது. குற்றமிழைத்தவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் வரை, தமிழ் மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை, புலம் பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய நடைப்பயணங்கள், ஈருருளிப் பயணங்கள் தொடர்ந்தும் வீறு நடைபோட்டு தொடர்கின்றன.

வீழமாட்டோம். வீழ்ந்தாலும் மீண்டு எழுவோம். தொடர்கிறது நீதிக்கான போராட்டங்கள்.

ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரம் நோக்கித் தொடரும் ஈருருளிப் பயணத்தின் விபரங்களை caravane –tamoul என்ற face book.com ல் பார்க்கலாம்.

http://www.pathivu.com/news/17574/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Jul 25, 2011 / பகுதி: செய்தி / நிருபர் கயல்விழி

இரண்டாவது நாளில் பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொரும் ஈருருளிப்பயணம்.

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆறுபேரினுடைய ஈருருளிப்பயணம்.

24.07.2011ஞாயிற்றுக்கிழமை அன்று ஈருருளிப்பயணம் இரண்டாம் நாளில் மிகவும் ஆர்வத்துடன் சவேர்ன் என்ற இடத்திலிருந்து ஆரம்பமாகி பால்ஸ்பூர்க் என்ற இடத்தை சென்றடைந்த போது, ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராது அந் நகர மேயர் அவர்கள் வரவேற்றிருந்தார். அவர் தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு சரியானதொரு தீர்வு கிடைப்பதற்காக தன்னாலான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

அல்சாஸ்மாநிலப்பகுதியின் மலைப்பிரதேசத்தில் ஈருருளியில் பயணம் செய்வது சாதாரணவிடயமல்ல. ஆனாலும் மிகுந்த முகமலர்சியுடனும் தமிழ் மக்களுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டங்களை நாம் தொடரவேண்டும் என்ற மனத்துணிவுடனும் மீண்டும் ஆரம்பமானது பாரீஸ் நகரத்தை நோக்கிய ஈருருளிப்பயணம்.

இன்றுமட்டும் 94கி.மீற்றர் ஈருருளிப்பயணத்தை மேற்கொண்டு Nic-sur-seille என்ற இடத்தில் அந் நகர உதவி மேயர் அவர்களினால் வரவேற்கப்பட்டு, அந் நகர நகரசபைக்கு முன்னால் இன்றைய பயணத்தை நிறைவு செய்து மீண்டும் நாளை (25.07.2011) தொடரவுள்ளனர் தங்களது பயணத்தை.

ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரம் நோக்கித் தொடரும் ஈருருளிப் பயணத்தின் விபரங்களை caravane –tamoul என்ற face book.com ல் பார்க்கலாம்.

http://www.pathivu.com/news/17589/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Jul 27, 2011 / பகுதி: செய்தி / நிருபர் கயல்விழி

பிரான்ஸ் அரசிடம் நீதி கேட்டுத் தொரும் ஈருருளிப்பயணம். 250கி.மீற்றரைக் கடந்தது.

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆறுபேரினுடைய ஈருருளிப்பயணம்.

25.07.2011 திங்கட்கிழமை ஈருருளிப்பயணம் மூன்றாம் நாளில் மிகவும் ஆர்வத்துடன் தொடரப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஸ்ராஸ்பூர்க் நகரில் இருக்கும் DNA என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்ததுடன், அதேபோல தொடர்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் பத்திரிகையாளர்கள் வருகை தந்து செய்தி சேகரித்து செல்வதுடன் பயணத்தை மேற்கொண்டுள்ள ஆறு பேருக்கும் மிகுந்த உற்சாகத்தையும் வழங்கிவருகிறார்கள்.

மழையையும், காற்றையும் எதிர்த்து தொடரும் பயணத்தில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும். தங்களது மண்ணில் அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஒரு எண்ணமே உந்து சக்தியாகவும், உறுதுணையாகவும் இருக்கின்றது.

அன்பான உறவுகளே! எதிர்வரும் 30.07.2011அன்று சனிக்கிழமை பி.பகல் 2மணி தொடக்கம் 4மணிவரை பாரீஸ் நகரத்தில் உள்ள inஎயடனைந என்ற இடத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டுள்ள அறுவரில் ஒருவர் பிரஞ்சு நாட்டவர். தமிழ் மக்களின் இன்னல் கண்டு, தமிழ் மக்களுக்கு விடிவு வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் சுமந்து பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவ்வேளையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்று கூடுவது அவசியமானது.

ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரம் நோக்கித் தொடரும் ஈருருளிப் பயணத்தின் விபரங்களை caravane –tamoul என்ற face book.com ல் பார்க்கலாம்.

http://www.pathivu.com/news/17609/57/250/d,article_full.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Jul 28, 2011 / பகுதி: செய்தி / நிருபர் கயல்விழி

ஈருருளிப் பயணம்: நகர பிதாக்கள், பத்திரிகையாளர்களின் வரவேற்புடன் தொடர்கிறது.

கடந்த 23.07.2011அன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ஆறு பேரின் ஈருருளிப்ப்யணம் மிகவும் உற்சாகமாக தொடர்கிறது.

ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட இப்பயணம், சவேர்ன், பால்ஸ்பூர்க், சென் மியல், பால் துக், Givry-en-arogonne போன்ற மாநகரங்களினூடாகவும், எனைய நகரங்கள், கிராமங்களின் ஊடாகத் தொடர்ந்து செல்லும் பயணத்தில், நகர முதல்வர்கள், பத்திரிகையாளர்கள் முக்கியத்துவம் கொடுத்திருப்பதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியாக அறிந்ததுடன், தமிழ் மக்களுக்கு சரியான ஒரு தீர்வு அவர்கள் தனித்துவாழ்வது தான் என்பதை அவர்கள் தெரிவித்திருப்பதுடன், பிரான்சின் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிற்கு தாங்களும் இயன்றவரை அழுத்தம் கொடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

தாயக மக்களை நெஞ்சில் சுமந்து மலையிலும், மழையிலும், கடுங்காற்றிலும் பல கி.மீற்றர்களை ஈருருளியில் கடக்கும் எம் ஆறு உறவுகளுக்கும், நகரபிதாக்களின் வரவேற்பும், ஆறுதல் வார்த்தைகளும் அவர்களின் உடல் உபாதைகளுக்கு அரு மருந்தாக அமைந்திருப்பதாக ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்பான உறவுகளே! எதிர்வரும் 30.07.2011அன்று சனிக்கிழமை பி.பகல் 2மணி தொடக்கம் 4மணிவரை பாரீஸ் நகரத்தில் உள்ள invalides என்ற இடத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து உறவுகளையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.

ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரம் நோக்கித் தொடரும் ஈருருளிப் பயணத்தின் விபரங்களை caravane –tamoul என்ற face book.com ல் பார்க்கலாம்.

http://www.pathivu.com/news/17635/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.