Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினத்தை அழித்தவர்களை தோற்கடித்து தலைநிமிர்ந்து நிற்கும் தமிழினம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தை அழித்தவர்களை தோற்கடித்து தலைநிமிர்ந்து நிற்கும் தமிழினம்.

கொலைவெறியன் மகிந்த ராசபக்சே உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடாத்தி அதில் தமது ஆட்சி அதிகார பண அடியாள் பலத்தினை கொண்டு வெற்றி பெற்று உலகத்தினை ஏமாற்றலாம் என தப்புக்கணக்குப் போட்டு நடத்திய தேர்தல் நாடகத்தில் ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் அரசியல் வாதிகளின் தேர்தல்கால சித்துவிளையாட்டுக்களை அப்படியே தமிழர் தாயகப்பகுதியில் அரங்கேற்றி எப்படியும் வென்றுவிடலாம் என்று செய்த அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராக மாறியதை கண்டு சிங்களம் ஏமாற்றம் அடைந்துள்ளநிலையில் தமிழர் தரப்பு பெருமகிழ்ச்சி கொண்டு நிற்கின்றது.

வன்னிப்பகுதியில் இராணுவத்தை ஏவிவிட்டு காட்டுமிராண்டித்தனமாக தேர்தல் வன்முறைகளை கட்டவிழ்த்து வாக்குச்சீட்டுகளை பலவந்தமாக பறித்தும் ஆயுதமுணையில் தமிழர்களை வாக்களிக்க செல்லவிடாது தடுத்தும் தமிழர்கள் தன்மானத் தமிழர்கள் நாம் என்பதனை தேர்தல் முடிவின் மூலம் நிரூபித்துள்ளனர்.

சிங்களத்தின் சனாதிபதி உள்ளிட்ட அமைச்சர் பட்டாளங்கள் தமிழர் தயாகத்தில் முகாமிட்டு அரங்கேற்றிய பசப்பு நாடகங்களை எல்லாம் புறக்கணித்து ஓட ஓட விரட்டியடித்து தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றனர்.

உலகத்தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு ஆதரவுகுரல் கொடுத்து நின்றநிலையில் அதனை ஏற்று நாமும் விடுதலைத் தாகம் கொண்டு உறுதியோடுநிற்கின்றோம் என்பதனை ஆணித்தரமாக இந்த தேர்தல் முடிவின் மூலமாக தாயகத் தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id

கூட்டமைப்பினர் தமது பொறுப்பினை உணர்ந்து தலை நிமிர்ந்துள்ள தமிழினத்திற்கு தலைக் குனிவுகளை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

‎325 கோடி பணத்துடன் வந்து, 25 அமைச்சர்கள் புடை சூழ, தமிழர் தாயகத்தில் இலங்கை அரச பயங்கர வாத முகவர்கள் நடத்திய தேர்தல் திருவிழா தவிடு பொடியானது. அரிசிக்கும் பருப்புக்கும் வேட்டிக்கும் சால்வைக்கும் தன் மானத்தை எம்மக்கள் விட்டுக் கொடுப்பார்கள் எனக் கனவு கண்டது சிங்களம், ஏமாந்து போனது.

இந்த பாடத்தை அது புரியுமா? இல்லை ஏற்குமா?

விதி வெல்ல வாக்களித்தோம் வலி தந்தாரை தோற்கடித்தோம்

நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனை மரணம் கொடுக்கக் காத்திருக்கும் போதும் எங்கள் உணர்வுகளை சாகடித்து விட்டு நடக்க முடியாது என்கிற உணர்ச்சி வெளிப்பாட்டை தமிழர்கள் நடந்து முடிந்திருக்கின்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

யாரெல்லாம் எமக்கு மரணம் கொடுத்தார்களோ அவர்களெல்லாம் புனிதர்களாகி வந்தபோதும், நாங்கள் சிந்திய இரத்தம் உறையும் முன்னர் தாய் மண்ணை முத்தமிடுவதாய் கூறிக்கொண்டு எங்கள் இரத்தத்தை சுவை பார்த்தவர்கள் மீட்பர்களாய் மாறி வந்தபோதும், எங்கள் உணர்வுகளை சாகடித்து விட்டு நடக்க முடியாது என்கிற உணர்ச்சி வெளிப்பாட்டை தமிழர்கள் நடந்து முடிந்திருக்கின்ற உள்ளுராட்சி சபைத்தேர்தல் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

குழந்தைக்கும், தாய்க்கும், தந்தைக்கும் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைக்கப்பட்டது. உங்கள் ஆட்சி முடிந்து விட்டது. இப்போது எங்கள் ஆட்சி நடக்கிறது. இப்போதும் ஆடினால் நாயைப்போல் சுடப்படுவாய் தெருவில், இதுதான் இப்படித்தான் அதிகாலை வேலிகளைப் பிரித்துக்கொண்டு முகமூடிகளுடன் ஏ.கே47 தாங்கி வந்தவர்கள் சொன்னார்களாம். எங்கேயோ…! எப்போதோ கேட்டது போன்றதொரு ஞாபகம் வருகிறது. இதுதான் இலங்கையில் முடிந்து விட்டதாய் சொன்னார்கள்.

ஆனால் இப்போதும் உயிரோடு இருக்கின்றது. ஆகவே தமிழர்கள் பிரிந்து வாழ தமிழீழம் கேட்டதில் என்ன தவறிருக்க முடியும்? தந்தையை, தாயை, மகளை நான்குபேர் பிடித்து வைத்திருக்க ஒரு பல்கலைக்கழக மாணவனை வீட்டு முற்றத்தில் போட்டு காட்டுமிராண்டித்தனமாக ஒரு கொலைகாரனைப் போல் சுற்றி நின்று அடித்தார்கள். இது இந்தியன் ஆமி காலத்தில் நடந்த சம்பவத்தின் கதையல்ல, கடந்த 22ம் திகதி கிளிநொச்சியில் நடந்த சம்பவம். நம்பமுடியவில்லைத்தான் எம்மாலும் முதலில், நம்பித்தான் ஆகவேண்டும் என்று உணர்ந்து கொண்டோம்.

சம்பவ இடத்திற்கு சென்று அந்த மக்களுடன் பேசியபோது, நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது வெறிநாய்களைப்போல் சிலர் அங்குமிங்கும் ஒடித்திரிந்து நாங்கள் யார்? என்ன செய்கிறோம் என அவதானித்துக் கொண்டிருந்தபோது. இதுதான் எல்லாம் முடிந்த தேசத்தில் நடந்து கொண்டிருக்கும் கதை.

25 அமைச்சர்கள் 325 கோடியுடன் கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் முகாமிட்டார்கள். தமிழர்களுடைய தன்மானம் என்ன விலை? முள்ளிவாய்க்காலில் நாங்கள் செய்த வெறித்தனத்தை மறப்பதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே.

ஒன்றை மட்டும் மறந்துபோனார்கள் அவர்கள். கொடுத்தது வலி மட்டுமல்ல, வடுவும்தான் அது தமிழன் என்றொரு இனம் வாழும் வரைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதை.

தாயை, தந்தையை, பிள்ளையை, மனைவியை, கணவனைப் பறிகொடுத்தவன் மறப்பானா? நடந்தது எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்ற வார்த்தையும், உயர்த்திய கைகளும், சிரித்த முகமும், நாங்கள் உங்கள் நண்பன் என்ற வார்தைகளும் முள்ளிவாய்க்காலில் தமிழன் சிந்திய இரத்ததிற்கு ஈடாகுமா?

இன்றும் கூட தமிழர்கள் மீது புரிந்த வெறித்தனத்திற்க்கு மன்னிப்புக்கோர முடியாதவர்கள், வாழவேண்டிய பிள்ளைகள் கண்கள் கட்டப்பட்டு கோழைகள் கைகளில் உள்ள துப்பாக்கிகளால் கொல்லப்படுவது கண்டு மனம்வருந்த முடியாதவர்கள், எப்படி எங்கள் நண்பனாகமுடியும்? எப்படி எங்கள் சகோதரனாக முடியும்? இதைக்கூட உணர்ந்து கொள்ள முடியாத மடையர்களாக தமிழர்கள் இருந்து விடுவார்கள் என்ற மமதைக்குத்தான் தமிழர்கள் சொல்லிக் கொடுத்தார்கள் சரியான பாடம்.

தேர்தலுக்கு முதல்நாள் இரவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன, ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டது, மதுப் போத்தல்கள், தீப்பெட்டிகள், இராணுவத்தினரால் கொடுக்கப்பட்டது, ஒரு வாக்குச் சீட்டு 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரைக்கும் விலை பேசப்பட்டது.

வாக்குச் சாவடிக்கு மிக அருகில் புலனாய்வாளர்களும், சிவில் உடையில் இராணுவத்தினரும் நின்று கொண்டு வெற்றிலைக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டு நின்றார்கள்,

நள்ளிரவு கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி, மாயவனூர், சம்புக்குளம், மலையாளபுரம், பராதிபுரம், கோணாவில், கனகாம்பிகைக்குளம், போன்ற பகுதிகளுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் சுமார் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுக்களைப் பறித்தார்கள்.

வீட்டில் தனித்திருந்த பெண்ணின் தலைமுடியை ஜன்னலால் பிடித்து இழுத்து தங்கள் வெறித்தனத்தைக் காட்டினார்கள். வீடுகளுக்கு அலவாங்குகளால் குத்தி வீட்டில் இருந்த பொருட்களைக் கொள்ளையடித்து அடக்குமுறையின் உச்சத்திற்கே போனார்கள், ஆனால் அடக்குமுறைக்கும் உங்கள் வெறித்தனத்திற்க்கும் அடங்கி அழுத தமிழன் இதே நாளில் (23ம்திகதி) 1983ம் ஆண்டு இறந்துபோய்விட்டான். பின்னர் தமிழன் யார்? எப்படியானவன் என்று சொல்ல நீங்கள் இடித்தாலும் மாவீரர் துயிலுமில்லங்கள் சாட்சி.

இப்போது நாமும் சாட்சி. தமிழ்த் தேசியம் தமிழரின் தாயகத்தில் பெரு வெற்றி பெற்றிருக்கின்றது. தமிழன் சுதந்திரமாக வாழ விரும்புகிறான் என்பதற்கு இதுவொரு சிறந்த சமிக்ஞை. இதில் எங்கள் மக்களும் பலர் விரும்பியோ விரும்பாமலோ அரசிற்கு வாக்களித்திருக்கிறார்கள். இவர்களுக்காக பரிதாபப்பட மட்டும்தான் நம்மால் முடியும்,

வாக்குப் பெட்டிக்கு அண்மையில் செல்லும்போது கண்முன்னே துடித்துத் துடித்து இறந்தவர்கள், இறந்த பிள்ளையை தூக்கிப் புதைக்க முடியாமல் மணல்தரையில் விட்டு வந்தது, உடல் சிதறிப்போய் கிடந்த பிள்ளை என எமக்கு நடந்த கொடுரங்கள் கண்முன்னே வராதுபோனது துன்பம்தான்.

ஆனால் இந்தத்தேர்தல் மூலம் நாம் ஒரு யதார்த்ததை உணர்ந்த்தியிருக்கின்றோம். புலம்பெயர் மக்களே, தமிழக சொந்தங்களே, நாங்கள் முள்ளிவாய்க்காலில் சிந்திய இரத்தம் இன்னமும் உறையாமலிருக்கின்றது. நீங்கள் உறையும் பனியிலும், கொழுத்தும் வெயிலிலும் நின்று எமக்காக போராடிக் கொண்டிருப்பதால். தாயகத்தை நேசிப்பவன் தாயகத்திற்க்காக வாழ்பவன் இன்னமும் உயிரோடு இருக்கிறான்.

புலம்பெயர் சொந்தங்களே, தமிழக உறவுகளே உரத்துக் குரல் கொடுங்கள். விதி வெல்ல வாக்களித்தோம் வலி தந்தாரை தோற்கடித்தோம்….!

தாயத்திலிருந்து…

சுதந்திரன்.

suthanthiran86@gmail.com

http://tamilthesiyam.blogspot.com/2011/07/blog-post_8421.html

இப்படிப்பட்ட வெற்றிகளை எப்படியெல்லாம் சொல்லி இந்தப் பத்திரிகைகள் கொண்டாடுகின்கின்றன. ஆனால் சிலவேளைகளில் இவர்கள் எழுதுவதைப்பார்த்தால் தங்களால்தான் எல்லாம் நடப்பதாக எழுதிவிடுவார்கள். அங்கிருக்கும் கூட்டமைப்பை இன்று அங்குள்ள தமிழ்மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளார்கள்.

கூட்டமைப்பின் வெற்றி தாயகத்தில் வாழும் எமக்கு மகிழ்ச்சி தான். அதேவேளை தாய் மண்ணில் வாழும் மக்கள் தமக்குத் தேவையான, உண்மையான, நேர்மையான, உறுதியான வேறு தலைமைகள் இல்லாமையால் தான் கூட்டமைப்பைத் தெரிவு செய்தார்கள் என்பதை மறக்க வேண்டாம். மக்களின் உண்மையான எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய கூட்டமைப்பு செல்ல வேண்டிய தூரம், எடுத்துக்கொள்ள வேண்டிய பொறுப்புணர்வு மிக, மிக அதிகம் என்பதே கசப்பான உண்மை. இதை ஒவ்வொரு கூட்டமைப்பு உறுப்பினர்களும் உணரவேண்டும். சம்பந்தரும் புதிய தலைமையிடம் பொறுப்புக்களை கையளித்துவிட்டு உடனிருந்து வழிநடத்தினால் மட்டுமே சரியான திசையில் செல்வதாகக் கருதமுடியும்.

உண்மைகள் எப்போதும் கசப்பானதுதான். ஆனால் அதுதான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. வேறு தலைமை இல்லையென்பதும் சரியான வழிநடத்தல் இல்லையென்பதும் உண்மைதான். இதை எல்லோரும் உணர்ந்தால் ஒருமித்து நின்று இந்தத் தேர்தலைச் சந்தித்திருக்கலாம். நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். இன்னமும் இவர்கள் 80 வீத மக்களைத் தேடி அலையவேண்டியதில்லை.

கூட்டமைப்பால் ஒரு கட்டத்திற்கு மேல் நகரவே முடியாது. அதற்கு இந்திய உதவிதான் தேவை என்பதும் பெரியதொரு கசப்பான உண்மை. இப்போது கிடைத்துள்ள தேர்தல் முடிவுகள் வெற்றியென்ற பதத்திற்குள் வந்துவிடக்கூடாது. தமிழர்களது குரலுக்கு சர்வதேசமும் இந்தியாவும் இசைந்து வழிவிட்டால்தான் வெற்றி. அதுவே வெற்றி.

இதுதான் தற்போதைய யதார்த்தம்! இறைவன் என்றா சும்மாவா? எல்லாம் அறிந்தவர்! :)

உண்மைகள் எப்போதும் கசப்பானதுதான். ஆனால் அதுதான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. வேறு தலைமை இல்லையென்பதும் சரியான வழிநடத்தல் இல்லையென்பதும் உண்மைதான். இதை எல்லோரும் உணர்ந்தால் ஒருமித்து நின்று இந்தத் தேர்தலைச் சந்தித்திருக்கலாம். நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். இன்னமும் இவர்கள் 80 வீத மக்களைத் தேடி அலையவேண்டியதில்லை.

கூட்டமைப்பால் ஒரு கட்டத்திற்கு மேல் நகரவே முடியாது. அதற்கு இந்திய உதவிதான் தேவை என்பதும் பெரியதொரு கசப்பான உண்மை. இப்போது கிடைத்துள்ள தேர்தல் முடிவுகள் வெற்றியென்ற பதத்திற்குள் வந்துவிடக்கூடாது. தமிழர்களது குரலுக்கு சர்வதேசமும் இந்தியாவும் இசைந்து வழிவிட்டால்தான் வெற்றி. அதுவே வெற்றி.

உண்மைகள் ஆரம்பத்தில் கசப்பானது தான். அந்நாள் பின்னர் அதனால் நிரந்தர இனிமை கிடைக்கும்.

ஆனால் சம்பந்தர் தொடர்பான விடயத்தில், தமிழினப் படுகொலைகளுக்கு துணையாக நிற்கும் இந்தியப் பயங்கரவாதிகளின் விடயத்தில் தொடர்ச்சியான கசப்பே கிடைத்தது.

எனவே எதை எதுக்கு பிரயோகிப்பது என்பதில் குறைந்தபட்ச புத்திசாலித் தனத்தையாவது காட்டப் பழகவேண்டும்.

சம்பந்தன் தமிழினப் படுகொலைகளுக்கு துணையாக நிற்கும் இந்தியப் பயங்கரவாதிகளின் நிரந்தர கைக்கூலியாக இருக்கையில், அந்தச் சம்பந்தரின் ஜால்ரா கோஸ்டிகள் தமிழர் நலனில் அக்கறை கொண்டு பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

இந்தியத் துணையில்லாமல் செயற்படக்கூடிய எந்தக் கோஷ்டியையாவது சுட்டிக் காட்டுங்கள். அதை நோக்கித் தமிழர்கள் திரும்புவதற்குப் பாடுபடலாம். உலகியல் நிலை அவ்வாறானதாக இருக்கவில்லையே. நோர்வே சமாதானமென்று வந்தது. இறுதியில் இந்தியாவிடம் சென்றது. உலக நாடுகள் எல்லாம் இவ்வளவு காலமும் முயற்சித்தும் இந்தியாவின் மௌனத்தாலும் பாராமுகத்தாலும் தமிழர் விடயத்தில் இன்றுவரை தோற்று நிற்கின்றன.

இதில் கூட்டமைப்போ சம்பந்தரோ, அல்லது கஜேந்திரர்களோ எம்மாத்திரம்? இந்தியாவைத் தவிர தமிழர்களுக்குத் தீர்வு என்ற ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு வேறு எந்தச் சர்வதேச சக்தியாலும் முடியாது. சீனா மட்டுமே வெளிப்படையில் இந்திய எதிர்ப்புக்காட்டும் தோற்றம் ஒன்றைக் கொண்டுள்ளது. அதுவும் ஒரு பொய்யான தோற்றமே. இந்தியாவிற்கும் அது தெரியும். சம்பந்தர் சீனாவிற்கு ஜால்ரா போட்டாலும் இந்தியாவை மீறி எதுவும் நடக்காது. அதை சம்பந்தர் மட்டுமல்ல, நாமும் புரிந்து கொண்டால் நல்லது. நடந்தது தமிழர்களுக்குப் பாதக நிலைதான். அதற்காகத் தொடர்ந்து இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு எந்தப் பலனும் கொடுக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.