Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரப் பகிர்வின் மூலம் இனங்களுக்கு இடையில் பிணைப்பை ஏற்படுத்த முடியும் - சந்திரிக்கா :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப் பகிர்வின் மூலம் இனங்களுக்கு இடையில் பிணைப்பை ஏற்படுத்த முடியும் - சந்திரிக்கா :

27 ஜூலை 2011

"வீடியோவைப் பார்த்த தனது மகனும் மகளும் தங்களை சிங்களவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறோம்" என்றார்களாம்

http://bcove.me/knq597e0

முதலாம் இணைப்பு

25-07-2011 - 01:58

பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றில் இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணத் திரைப்படத்தை பார்த்து விட்டு என்னுடன் தொலைல பேசியில் தொடர்பு கொண்ட 28 வயதான எனது மகன் விம்மி அழுதவாறு தான் ஒரு இலங்கை சிங்களவர் எனக் கூறிக் கொள்வதில் வெட்கப்படுவதாக குறிப்பிட்டார். அதே விடயத்தை எனது மகளும் ஆச்சயத்துடன் கூறினார். ஏனையவர்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள எனது மகன் மற்றும் மகள் தொடர்பில் நான் பெருமை அடைகிறேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பாராளுமன்றத்தை கலைக்க நேர்ந்தமையையிட்டு நான் கவலையடைந்தேன். எனது கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே அவ்வாறு செய்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மறைந்த முன்னாள் நீதியரசர் கே.பாலகிட்ணன் நினைவுப் பேருரை நேற்று கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சொற்பொழிவாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இவ்வாறு குறிப்பிட்டார்.

இராஜதந்திரிகள், தொழில்சார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுரேந்திரன் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.

சமூகங்களையும், சமாதானத்தையும் உள்ளடக்கும் வகையிலான பொருளாதார அபிவிருத்தி என்ற தலைப்பில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது, அபிவிருத்தியும் அதன் நன்மைகளும் சமமான ரீதியில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் திட்டங்கள் அவசியமாகும். இனம், மதம், அரசியல் நிலைமை என்பவற்றை கருத்திற்கொள்ளாது அபிவிருத்தியின் பயன்பாடுகள் சகலரையும் சென்றடைய சமூக கட்டமைப்பு இருக்க வேண்டியது அவசியமாகும். அரசியலமைப்பு பாராளுமன்றம் மற்றும் மக்களின் பிரதி நிதித்துவம் உள்ளிட்ட அனைத்தும் மக்களின் சுதந்திரமான தன்மையையும் சமத்துவத்தையும் உறுதிபடுத்துவதற்கான கட்டமைப்பு அவசியமாகும்.

சமத்துவம் அவசியம் :

நாடு ஒன்றில் அனைவரும் சம பங்காளிகளாகவும் அரசியல் உரிமைகள் சமமாக பகிரப்படுவதாகவும் அனைத்து பிரஜைகளும் சமூகங்களும் உணரும் நிலைமை ஏற்பட்டால் அந்த நாட்டில் அரசியல் ஸ்திரம் பொருளாதார சுபீட்சம் காணப்படும். பன்முகத்தன்மையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதை தலைவர்களும் பிரஜைகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அனைத்து பிரஜைகளுக்கும் சம உரிமையை வழங்கவும் கௌரவம் மனித உரிமை என்பவற்றை மதிக்கவும் வேண்டும். யுத்தங்களின் வெற்றியானது சமாதானத்தை வெல்லக் கூடியதாக இருந்திருக்காது. அரசியல், பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் சகலருக்கும சமத்துவமான நிலைமை காணப்படவேண்டும்.

நீதி கிடைக்காது என உணர்ந்தனர் :

அன்று தமிழ் அமைப்புக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டமை மற்றும் மொழி விவகாரம் என்பன அதிகாரப்பகிர்வு கோரிக்கையை நோக்கி சென்றன.

அவையே இறுதியில் தனி நாட்டு கோரிக்கைக்கு சென்றன. 1958, 1977, 1978, 1980, 1980 போன்ற காலப்பகுதியில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட உடல் ரீதியான தாக்குதல்கள், யாழ். நூலக எரிப்பு சம்பவம் என்பன பெரும்பான்மை சிங்கள மக்களிடம் தமக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வை சிறுபான்மை மக்களிடம் ஏற்படுத்தியது. பெரும்பான்மை மக்களிடம் தமக்கு நீதி கிடைக்காது என சிறுபான்மை மக்கள் உணர்ந்தனர்.

இந்நிலையில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அனைத்து அரசாங்கங்களும் தோல்விகண்டமையினால் ஐந்து ஆயுத குழுக்களின் தோற்றம் இடம் பெற்றது. புலிகளின் தலைமையில் அவை தனிநாட்டுக்காக போராடின. அத்துடன் சிங்கள மொழி மட்டும் அரச மொழி என்ற கொள்கையும் பிரச்சினைக்கு வித்திட்டது என்று கூறலாம்.

இந்தியா உதாரணம்

1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புக்கள் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த தவறியிருந்தன. அவர்களின் உரிமைகள், அரசியல் மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்ததவறின. இந்தியாவை பொறுத்தவரை சுதந்திரத்தின் பின்னர் அந்நாட்டில் நிரந்தர அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சமஷ்டி முறைமையினை கொண்டு வந்ததை நாம் நினைவுகூர வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அந்த நாடு சமஷ்டி முறைறைமயினை அரசியலமைப்பில் கொண்டுள்ளது.

முதற்தடவையாக நான் முன்வைத்தேன்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக எனது அரசாங்கம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் புரிந்துணர்வுடன் கூடிய தீர்வுத் திட்ட மொன்றை முன்வைத்தது. யுத்தம் இருந்த நேரத்திலும் வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டோம். உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. வீதிகள், பாலங்கள், தொடர்பாடல், மின்சாரம், பாடசாலைகள், பல்கலைக்கழகம், வைத்தியசாலைகள் போன்றவற்றை மேம்படுத்தினோம். யாழ். நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்பினோம். எனினும் பொருளாதார அபிவிருத்தி மட்டும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து விடாது என்பதை நாம் புரிந்து கொண்டோம்.

பல சவால்களுக்கு மத்தியில் அதிகாரப்பகிர்வுடன் கூடிய, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய வகையிலான அரசியல் அமைப்பை முன்வைத்தோம். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையினை நீக்குவதற்கான யோசனையையும் அதில் உள்ளடக்கினோம்.

இந்த அரசியல் அமைப்பு சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்குமென உறுதியாக நம்புகிறேன். அவ்வாறான நிலைமை வந்திருந்தால் சர்வதேச மறுப்புக்கள் மற்றும் இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தவிர்த்திருக்கலாம். எமது யோசனையை புலிகளும் நிராகரித்ததுடன் அப்போதைய பாராளுமன்ற எதிர்க்கட்சியும் நிராகத்தது.

எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு இல்லை

அப்போதைய நிலைமை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐந்து தமிழ்க் கட்சிகள் என்னுடன் இணக்கப்பாட்டுக்கு வந்திருந்த போதிலும் எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனது அரசாங்கம் அன்று முன்வைத்த அதிகாரப்பகிர்வு திட்டம் தொடர்பில் தமிழ் மக்களில் பெரும்பான்மையானோரும் புலம்பெயர் தமிழ் மக்களும் திருப்தியடைந்திருப்பார்கள்.

நாங்கள் கொண்டு வந்த புதிய அரசியலமைப்பு திட்டத்தை அமுல்படுத்த நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியிருக்கலாம் என்று அப்போது எனக்கு கூறப்பட்டது.

இது அதிகார வர்க்கமாக இருக்கும் என்பதால் அதை நான் செய்ய வில்லை. காரணம் நான் ஜனநாயகத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்.

ஆனால் இன்றைய நிலைமையில் நிர்வாகம் அதிகாரவர்க்கத்தை நோக்கி நகர்வதும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமையையும் பலப்படுத்தாமை ஆச்சரியம் அளிக்கிறது.

அபிவிருத்தி மட்டும் போதாது அரசியல் அதிகாரப் பகிர்வு அவசியம்

யுத்தம் முடிவு பெற்றுள்ளது. பயங்கரவாதம்தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் புலிகளில் இருந்தும் வேறுபட்டவர்கள் என்பதை பெரும்பான்மை சமூகம் உணரவேண்டும். தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் இலங்கையில் ஏனைய பிரஜைகளுடன் சமமாக வாழ விரும்புகின்றனர்.

சுதந்திரத்தின் பின்னர் அனைத்து மக்களினதும் சமவுரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது கூட சிலர் அரசியல் இணக்கப்பாடு அவசியமில்லையென்றும் அபிவிருத்தியே போதுமென்றும் கருதுவதாக தெரிகிறது. ஆனால் வீதிகள், பாடசாலைகள் வைத்தியசாலைகளை அமைப்பதோ மின்சாரம், குடிநீரை பெற்றுக் கொடுப்பதோ மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு போதுமானதல்ல. வடக்குக்கும் கிழக்குக்கும் ஏன் மாகாண சபை முறைமையை கொண்டு செல்ல முடியாது.

சமஷ்டியே தீர்வு

மேலும் சிறுபான்மை மக்களுடன் அவர்களின் தலைவர்களுடன் பேச்சு நடத்தி நாம் இணக்கப்பாடுகளுக்கு வரவேண்டும். இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமையே தீர்வாகும் என்பதில் நான் அர்ப்பணிப்புடன் இருந்தேன்.

இதனால் எனது காலத்தில் மக்களை தெளிவுபடுத்தும் திட்டங்களை முன்னெடுத்தோம். 1994 ஆம் ஆண்டு 23 வீதமான மக்களே பேச்சுவார்த்தையில் பிரச்சினையை தீர்க்க இணக்கம் தெரிவித்ததாக அப்போதைய கணிப்பீடுகள் கூறின. ஆனால் 2 வருடங்கள் நாம் மேற்கொண்ட கருத்தரங்குகள், செயலமர்வுகள் தெளிவுபடுத்தல் காரணமாக 23 வீதமாக காணப்பட்ட பேச்சுவார்த்தை விரும்பிகளின் சதவீதம் 68 வீதமாக உயர்வடைந்தது.

சமாதானத்தை வெற்றிகொள்ளவில்லை

யுத்தத்தை வெற்றி கொண்டிருந்தாலும் சமாதான போராட்டத்தில் நாம் இன்னும் வெற்றிபெறவில்லை. சமாதானத்தை வெற்றிகொள்ள அபிவிருத்தியுடன் அதிகாரப்பகிர்வு திட்டத்துக்கு அரசாங்கம் செல்லவேண்டும். இதுவே அரசாங்கத்தையும் நாட்டையும் பலப்படுத்துவதுடன் நிரந்தர சமாதானத்தையும் உருவாக்கும் இதுவே பல்லின கலாசார கட்டமைப்பை கொண்ட எமது நாட்டுக்கு சிறந்ததாக அமையும்.

2003 ஆம் ஆண்டு அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்திடம் இருந்து நான் மூன்று அமைச்சுக்களை பொறுப்பேற்வேண்டியேற்பட்டது. காரணம் அப்போது காணப்பட்ட நிலைமையாகும். ஆலயங்கள் தாக்கப்பட்டிருந்தன. முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை காணப்பட்டது.

இவ்வாறு பல்வேறு காரணங்களினால் நான் மூன்று அமைச்சுக்களை எடுத்தேன்.

கவலையடைந்தேன்

எனினும் 2004 ஆம் ஆண்டு அப்போதைய நிலைமையில் பாரா மன்றத்தை கலைக்கவேண்டிய அவ சி ய ம் எனக்கு இருக்கவில்லை.

ஆனால் எனது கட்சியினன் அழுத்தம் காரணமாகவே நான் பாராளுமன்றத்தை கலைத்தேன். இது தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணிலுக்கும் நான் கூறினேன். அத்துடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் விடயம் தொடர்பில் நான் கவலையடைந்தேன்.

ரணிலிடம் மன்றாடினேன்

மேலும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை காணவேண்டும் என்பது தொடர்பில் பல முயற்சிகளை நான் எடுத்திருந்தேன். 10 வருடங்களாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நான் அழைப்பு விடுத்து வந்தேன். எங்களுடன் இணைந்து செயற்பட்டுஇனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்குமாறு நான் கேட்டுவந்தேன்.

இந்த விடயத்தில் நான் ரணிலிடம் பிச்சை கேட்பது போல் இருந்தேன்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த பிரச்சினைக்கான தீர்வை கொண்டுவர உதவு மாறு நான் கேட்டேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. நான் முடியுமானவரை முயற்சி செய்தேன். தேசிய அரசாங்கம் அமைக்கும்யோசனையையும் முன்வைத்தேன். ஆனால் ஆதரவு கிடைக்கவில்லை.

இலங்கையின் கொலைக்கள வீடியோ... கண்ணீர் விட்ட சந்திரிகா!

இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் சேனல் 4 வெளியிட்ட வீடியோ பற்றிப் பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார் இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

இந்த வீடியோவைப் பார்த்த தனது மகனும் மகளும் தங்களை சிங்களவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறோம் என்று கூறியதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பாலகிருஷ்ணரின் நினைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் தொடர்பாக தனது உரையில் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது பேச்சின் இறுதிப் பகுதியில், சமீபத்தில் உலகை அதிர வைத்த தமிழினப் படுகொலை குறித்த இலங்கையின் கொலைக்களம் என்ற வீடியோ தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இந்த விடியோவை பிரிட்டன் தொலைக்காட்சியில் பார்த்த 28 வயதான தனது மகன் தான், சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக அழுதவாறு கூறியதாக சந்திரிகா குறிப்பிட்டார். மேலும் தனது மகளும் இவ்வாறே தெரிவித்தார் என்றார் அவர்.

இதைக் கூறும்போது கண் கலங்கிய சந்திரிகா சற்றுநேரம் அமைதியாகிவிட்டு மீண்டும் தழுதழுத்த குரலில் உரையைத் தொடர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் தூதர்கள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்பின் பிரதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதிகாரப் பகிர்வின் மூலம் இனங்களுக்கு இடையில் பிணைப்பை ஏற்படுத்த முடியும் - சந்திரிக்கா :

அதிகாரப் பகிர்வின் மூலம் இனங்களுக்கு இடையில் பிணைப்பினை ஏற்படுத்த முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களுடன் அரசாங்கம் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஏனைய மாகாணசபைகளைப் போன்றே வடக்கு கிழக்கிலும் மாகாணசபைகள் இயங்குவதற்கு தேவையான பின்னணி ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்வதன் மூலம் பலவீனமடைவதாகக் கருத முடியாது எனவும், பல்வேறு இன சமூகங்கள் ஒன்றிணைவதனால் எமது பலம் மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதவான் கே. பாலகிட்னார் நினைவுப் பேருரையில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்காமையின் மூலம் தாம் தவறு இழைத்து விட்டதாக கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் இனப்பிரச்சினை குறித்த பெரும்பான்மை சிங்கள மக்களின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்த அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் மாறுபட்ட விதத்தில் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்ற போதிலும் சமாதானம் என்ற போராட்டத்தை வென்றெடுப்பதற்கு உரிய முனைப்பு காட்டப்படவில்லை என்பது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனிச்சிங்கள சட்டங்களினால் இனப்பிரச்சினை உக்கிரமடைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வரலாற்று காலம் முதல் தென்னிந்தியர்களினால் இலங்கையின் மீது படையெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 14 நூற்றாண்டகளில் 54 தடவைகள் தென்னிந்திய படையினர் இலங்கை மீது படையெடுப்புக்கள் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இதன் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு தொடர்பில் அச்சம் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64602/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப் பகிர்வின் மூலம் இனங்களுக்கு இடையில் பிணைப்பை ஏற்படுத்த முடியும் - சந்திரிக்கா :

நன்றி அரசு இனைப்பிற்கு, எல்லோருக்கும் கிளிங்டன் முதல் சந்தரிக்கா வரை காலம் கடந்த்து தான் ஞானம் வரும், பதவியில் இருக்கும் போது ஒன்றும் சொய்யமாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.