Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓமந்தையில் தொடருந்தின் குறுக்கே பாரஊர்தி பாய்ந்து கோர விபத்து: மூவர் பலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jul 29, 2011 / பகுதி: செய்தி /

ஓமந்தையில் தொடருந்தின் குறுக்கே பாரஊர்தி பாய்ந்து கோர விபத்து: மூவர் பலி!

கொழும்பிலிருந்து ஓமந்தை நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று பார ஊர்தியுடன் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இருவர் படுகாயமடைந்த நிலையில் ஒமந்தைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்று வியாழக்கிழமை நண்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:-

குறிப்பிட்ட தொடருந்து ஓமந்தை தொடருந்து நிலையத்தை அண்மித்தவேளை திடீரென மரமேற்றி வந்த பாரஊர்தி ஒன்று தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மதவாச்சியைச் சேர்ந்த பார ஊர்தியின் சாரதி உதயகுமார் (வயது21) மற்றும் அவருடன் பயணித்த தர்மசீலன் (வயது19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அதே பார ஊர்தியில் பயணித்த மஞ்சுதன் (வயது 33), தாசன் (வயது 48) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்; ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.pathivu.com/news/17703/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இதிலையும் மூன்று தமிழர் செத்துட்டாங்களா......

பார ஊர்தி ஓட்டிய சாரதி, தண்டவாளத்தை கடக்கும் போது கவனமாக இருந்திருக்கலாம்.

இவருக்கு லைசன்ஸ் கொடுத்த சிங்களவனை பதவி நீக்கம் செய்ய வேணும்.

விடுதலைப்புலிகளின் காவல்துறை அதை பாராட்டிய மக்கள், உலகம் தான் நினைவுக்கு வருகின்றது.

புலம்பெயர் நண்பர் ஒருவர் வேகமாக ஓடி பிடிபட்டார். அவரோ இலஞ்சம் கொடுத்து தப்பிக்க எத்தனித்தார். அதற்கு அந்த காவல்துறை வீரன் சொன்னானாம் : ' அண்ணா, நாம் தரும் இந்த தண்டனை உங்கள் உயிரையும் இன்னும் வேறு உயிர்களையும் காப்பாற்றவே' என்று.

அவர்கள் உயர்ந்த மனிதர்கள்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.