Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 இற்கு எதிராக பிரிட்டன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: கோட்டாபய

Featured Replies

சனல் 4 இற்கு எதிராக பிரிட்டன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: கோட்டாபய

சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை கடந்த புதன்கிழமை இரவு ஒளிபரப்பிய வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ எழுப்பியுள்ளார். இத்தகைய பொறுப்பற்ற வீடியோக்களை ஒளிபரப்பியமைக்காக சனல் 4 அலைவரிசைக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக இலங்கை இராணுவ வீரர்கள் என்று கூறப்பட்ட இருவர், சனல் 4 வீடியோவில் கூறினார்.

இது தொடர்பாக பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, டெய்லி மிரருக்கு கூறுகையில், 'சவேந்திர சில்வா, தான் என்ன செய்கிறார், என்ன செய்யப் போகிறார் என்பதை அனைவருக்கும் கூறிக்கொண்டிருப்பாரா?' மேற்படி கொலைகள் எம்மால் செய்யப்பட்டதாக இலங்கை இராணுவ வீரர்கள் என்று கூறப்பட்ட இருவர் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவை போலிப் பிரசாரங்களாகும் என்றார்.

சரணடையும் நபர்கள் குறித்து அப்போது ஐ.நா. வதிவிட பிரதிநிதியாக இருந்த நீல் புஹ்னே எமக்கு ஒருபோதும் தெரிவிக்கவில்லை. யுத்தத்தின் இறுதிநாட்களில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பிட்டதாக அவர்கள் எப்படி கூறமுடியும்?

முல்லைதீவு அரசாங்க அதிபர் 300,000 பொதுமக்களின் பதிவுகளைக் கொண்டிருந்தார். யுத்தத்தின் முடிவில் 294,000 பேர் இருந்தனர். ஏனையோரில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் கொல்லப்பட்ட எல்.ரி.ரி.ஈ.யினர். அவர்களில் சிலர், கனடா மற்றும் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டனர் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட சூசை, தமிழ்ச்செல்வன் ஆகியோரின் குடும்பத்தினரை நாம் பாதுகாத்து வருகிறோம். கடற்படையினர் அனைவரின் மரணத்திற்கும் சூசை காரணமானவர் என்ற நிலையில் நாம் அவர்களை கொன்றிருக்கலாம். ஆனால், நாம் அவர்களை பராமரித்து வருகிறோம். பிரபாகரனின் பெற்றோரையும் நாம் பராமரித்தோம்.

கொலையாளிகளாகவும் தற்கொலைப் பேராளிகளாகவும் இருந்த 11,000 முன்னாள் போராளிகள் படையினரிடம் சரணடைந்தனர். அவர்களுக்கு நாம் புனர்வாழ்வளித்து கல்வியளித்து மீண்டும் சமூகத்தில் இணைத்துள்ளோம்.

முந்தைய வீடியோவில் தோன்றிய பெண் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. அங்கத்தவர் என்பதற்கு எம்மிடம் ஆதாரம் உள்ளது. அவர் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்ட 200,000 பொதுமக்களுடன் இருந்தார் எனவும் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/25481--4-.html

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிதான், இவன் இப்படி பேசுறான், இவ்வளவு படு பாதக செயல்களை செய்துவிட்டு

  • தொடங்கியவர்

யுகோஸ்லாவியா போன்று ஒரு செயல்பாடு இங்கேயும் நடக்கலாம்.

இரண்டு சிங்கள சிப்பாய்களின் சாட்சி ஏற்கனவே வெளிவந்துள்ளது. இவர்கள் தமது தலைவர்களே சொன்னார்கள் சொல்கிறார்கள்.

அதில் ஒருவர் அமெரிக்காவில் உள்ளார். அவரை இரகசியமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சந்தித்து, மேலும் பல சாட்சிகளை ஆதரபூர்வமாக காட்டி அவரிடம் இருந்து மேலும் பல வாக்குமூலங்களை பெறலாம். அதன் மூலம் அவருக்கான தண்டனை குறைக்கப்படும் என உறுதியளிக்கப்படும்.

இவரைப்போன்று பலரும் தூதுவராலயங்களில் வேலைசெய்கின்றனர்.

  • தொடங்கியவர்

ஊடகங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை: பிரி. உயர் ஸ்தானிகராலயம்

பொறுப்பற்ற வீடியோவை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியமை கருத்து தெரிவித்த கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயம் ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

சனல் 4 என்பது சுயாதீனமான ஒரு ஒளிபரப்பாளராகும். ஒவ்வொரு ஜனநாயகத்திலும் சுதந்திர ஊடகம் முக்கியமானது என பிரிட்டன் நம்புகிறது. ஊடக நிறுவனங்கள் பொருத்தமான ஒழுக்க மற்றும் சட்ட ரீதியான தராதரங்களை பேணுவதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான பொறிமுறையை பிரிட்டன் கொண்டுள்ளது. ஆனால் ஊடகங்களின் உள்ளடக்கங்களை அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில ஊடகமான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

சுயாதீன ஒழுங்குபடுத்துனரான டெலிகொமியுனிகேஷன் (ஒவ்கொம்), சுயாதீன பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் வழக்கமான அவதூறு தொடர்பான சட்டங்கள் என்பன ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் பிரித்தானிய பொறிமுறையில் அடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/25547-2011-07-29-22-25-17.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.