Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தி சுவிஸில் காணொளி ஒளிபரப்பு! வழக்குத் தொடரவும் முனைப்பு (Video in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தி சுவிஸில் காணொளி ஒளிபரப்பு! வழக்குத் தொடரவும் முனைப்பு (Video in)

Thursday, August 4, 2011, 21:48உலகம், காணொளி, முதன்மைச்செய்திகள்

முன்னாள் உயர் படையதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சுவிற்சர்லாந்து தொலைக்காட்சி சேவையொன்று காணொளி ஒன்றை ஒளிபரப்புச் செய்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தின் எஸ்.எப்.1 என்னும் தொலைக்காட்சி அலைவரிசையில் இந்த காணொளி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போலியான போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து புலி ஆதரவாளர்கள், எஸ்.எப் 1 அலைவரிசையின் தலைவர் புருலோ எம்ரிக்கை சந்தித்ததன் பின்னர் இந்தக் காணொளி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காணொளி புலிகளின் தேவைக்காக ஒளிபரப்புச் செய்யப்படுவதாக சுவிஸ் வாழ் இலங்கை அமைப்பு எஸ்.எப்.1 தொலைக்காட்சிக்கு தெளிவுபடுத்திய போதிலும் அதனை அந்த தொலைக்காட்சி அலைவரிசை ஏற்றுக்கொள்ள தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜகத் டயசிற்கு எதிராக வழக்குத் தொடர முனைப்பு

இலங்கையின் முன்னாள் படையதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக சுவிற்சர்லாந்தில் வழக்குத் தொடர முனைப்பு எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இரண்டு தரப்பினர் இவ்வாறு வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜகத் டயஸ் தற்போது ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவராக கடயைமாற்றி வருகின்றார்.

அச்சுறுத்தலுக்கான மக்கள் சமூகம் மற்றும் ட்ரயல் என்னும் இரண்டு அமைப்புக்களுமே இவ்வாறு வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பில் சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபரிடம் குறித்த அமைப்புக்கள் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளன.

முன்னாள் படையதிகாரி ஜகத் டயஸ் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியே வழக்குத் தொடரப்படவுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத் தரப்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

http://youtu.be/asHUjzh0DE8

http://www.tamilthai.com/?p=23335

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள் ஒரு கட்டத்தில் ஸ்ரீலங்கா அரசின் மீது போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளும் அளவுக்கு கொண்டு செல்லும் என நம்பலாம்.அதற்காக நாம் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்.

இன்று பல நாடுகளில் சிங்கள தூதுவராலயங்களில் முன்னாள் படைத்துறையினர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இவர்களுக்கு எதிராகவும் இவ்வாறான அணுகுமுறைகளை ஆராய்ந்துபார்க்கலாம்.

இந்த அரச சார்பற்ற அமைப்பின் இயக்குனருக்கு எழுதிய மடலில், அவர் அலுவலகத்தில் தற்போது இல்லை என்ற செய்தி வந்தது.

யாராவது சுவிஸ் வாழ் இவருடன் கதைத்து தனிப்பட்ட உறவுகளை பொதுநலத்திற்காக வளர்க்கலாம்.

Merci de votre message.

Je serai absent du bureau jusqu'au 16 août 2011 et en prendrai connaissance à mon retour.

En cas d'urgence, merci d'appeler le bureau au +41 22 321 61 10.

[ பின் குறிப்பு : முன்பு ஒருமுறை ஒருவர் இப்படியான ஒருவருக்கு நன்றி தெரிவித்து ஒரு வாழ்த்து மடலும் அதனுள் ஒரு உணவுவிடுதியின் ஐம்பது டாலர் ( இருவருக்கு உணவு அருந்த போதுமானது) அன்பளிப்பு மட்டையையும் ( gift certificate) இணைத்திருந்தார். அதன் மூலம் அவரை தொடர்ந்தும் எமது மக்களுக்காக குரல் கொடுக்க வைத்தார். ]

-------------------------------------------------------------------------------------------

To: philip.grant@trial-ch.orgDr. Philip Grant (Director),

As a human being who believe in justice, I would like to commend your efforts in holding accountable. )

In case of Sri Lankan citizen, Mr.Diaz, there are ample evidence pointing his crimes against humanity. And he is hiding all that under various disguise and it is time we unmask.

Please continue your noble work toward justice.

Sincerely,

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஶ்ரீலங்காவின் முன்னாள் படையணித் தளபதியும், இன்நாள் இராஜதந்திரியுமான, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிராக சுவிற்சர்லாந்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டிருப்பதை, சுவிற்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது. கிடைக்கப்பபெற்ற இந்த முறைப்பாடு குறித்து, தாம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்த சுவிற்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம், இது தொடர்பான மேலதிக விபரங்களை இராஜ தந்திர ரீதியான காரணங்களை மேற்கோள் காட்டி மறுத்திருப்பதாகவும் மேலும் தெரிவிக்ககப்படுகிறது.

ஶ்ரீலங்காவின் ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராக உள்ள மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், 57 ஆவது படைப்பிரிவுத் தளபதியாக கடமையாற்றிய போது, யுத்தகுற்றங்கள் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே எழுந்துள்ளன. இது தொடர்பில் ஜேர்மன் அரசிடமும் சில ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகிறது. ஆயினும் இது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரையில் மேற்கொள்ளப்படாத நிலையில், சுவிற்சர்லாந்தில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களைக் கொண்ட மக்களுக்கான சமூகம், ட்ரையல் , இரு மனித உரிமைச் செயற்பாட்டு அமைப்புக்கள் இம் முறைப்பாட்டினைத் மேற்கொண்டுள்ளன.

ஶ்ரீலங்காவின் ஜேர்மனிக்கான தூதுவராலயத்துடன் இணைந்தே சுவிற்சர்லாந்திலுள்ள ஶ்ரீலங்கா தூதுவராலயமும் செயற்படுவதன் காரணமாக, அதன் பிரதித் தூதுவரான ஜகத் டயஸ், சுவிற்சர்லாந்துக்கும் வந்து சென்றுள்ளார். போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் இவ்வாறு சுந்திரமாக சுவிற்சர்லாந்துக்குள் வந்து செல்வது தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்திருக்கும், அவ் அமைப்புக்கள் அவரை வரவேற்கப்படாத நபராகப் பிரகடனப்படுத்துமாறும் கோரியுள்ளதாகவும் தெரிய வருகிறது. மேலும் கடந்த புதன் இரவு சுவிற்சர்லாந்தின் முக்கிய தொலைக்காட்சிச் சேவையிலும் இது தொடபில், 'சந்தேகப்படக் கூடிய போர்க்குற்றவாளிகள் ' என்ற தலைப்பில் செய்தி விவரணம் ஒன்று ஒளிபரப்பாகியதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த விவரணத்தை ஒளிபரப்புச் செய்யக் கூடாது என ஒரு தரப்பிலிருந்து, விவரணத்தை ஒளிபரப்பிய தொலைக்காட்சிச் சேவைக்கு அழுத்தங்கங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும், ஆயினும் அதனைத் தொலைக்காட்சிச் சேவை நிராகரித்து விட்டதாகவும் அறியப்படுகிறது. மேலும் இம்முறைப்பாடுகள் தொடர்பில் சுட்டப்படும் குற்ச்சாட்டுக்களை ஜகத் டயஸ் மறுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகப்படக் கூடிய போர் குற்றவாளிகள் :சுவிஸ் தொலைக்காட்சி விவரணம் குறித்து விரிவாகக் காண

http://www.4tamilmedia.com/index.php/special/news-review/5935-mutmasslicher-kriegsverbrecher

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள் ஒரு கட்டத்தில் ஸ்ரீலங்கா அரசின் மீது போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்ளும் அளவுக்கு கொண்டு செல்லும் என நம்பலாம்.அதற்காக நாம் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்.

உண்மை இதற்க்காக பலர் தம்மால் இயன்றளவு உழைத்துக் கொண்டிருகிறார்கள்

இந்த அரச சார்பற்ற அமைப்பின் இயக்குனருக்கு எழுதிய மடலில், அவர் அலுவலகத்தில் தற்போது இல்லை என்ற செய்தி வந்தது.

யாராவது சுவிஸ் வாழ் இவருடன் கதைத்து தனிப்பட்ட உறவுகளை பொதுநலத்திற்காக வளர்க்கலாம்.

Merci de votre message.

Je serai absent du bureau jusqu'au 16 août 2011 et en prendrai connaissance à mon retour.

En cas d'urgence, merci d'appeler le bureau au +41 22 321 61 10.

[ பின் குறிப்பு : முன்பு ஒருமுறை ஒருவர் இப்படியான ஒருவருக்கு நன்றி தெரிவித்து ஒரு வாழ்த்து மடலும் அதனுள் ஒரு உணவுவிடுதியின் ஐம்பது டாலர் ( இருவருக்கு உணவு அருந்த போதுமானது) அன்பளிப்பு மட்டையையும் ( gift certificate) இணைத்திருந்தார். அதன் மூலம் அவரை தொடர்ந்தும் எமது மக்களுக்காக குரல் கொடுக்க வைத்தார். ]

-------------------------------------------------------------------------------------------

To: philip.grant@trial-ch.orgDr. Philip Grant (Director),

As a human being who believe in justice, I would like to commend your efforts in holding accountable. )

In case of Sri Lankan citizen, Mr.Diaz, there are ample evidence pointing his crimes against humanity. And he is hiding all that under various disguise and it is time we unmask.

Please continue your noble work toward justice.

Sincerely,

வணக்கம்

இவர்களுடன் நான் ரேநடித் தொடர்பில் இருக்னின்Nறுன். வேலதிக விபரங்கள் எது தேவையானாலும் என்னால் முடிந்ததை உங்களிற்கு செய்கின்றேன்.

இராஜதந்திர சிறப்புரிமை - ஒன்றும் செய்ய முடியாது - சிங்கள தூதர்

Lankan diplomat immunity won’t be affected: Envoy

A criminal complaint filed in Switzerland against a top Sri Lankan diplomat and former Army general would not affect his diplomatic immunity, Sri Lankan Ambassador to Germany TB Maduwegedara has said.

The Society for Threatened Peoples and Swiss Association against Impunity have filed a criminal complaint with the Public Ministry of Switzerland against Sri Lankan deputy envoy in Germany Maj-Gen Jagath Dias for alleged war crimes.

http://zeenews.india.com/news/south-asia/lankan-diplomat-immunity-won-t-be-affected-envoy_724486.html

ஆம் இவரின் இந்த "diplomatic "கவசம் பறிக்கப்படும் வரை ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மையே. ஆனால் அதை பறிப்பதற்க்கு இந்த நாட்டு அரசுகளை நாம் வலியுறத்த வேண்டும். அதன் முதல் நடிவக்கை தான் இந்த ஒளிப்பதிவு.

இப்படியான அழுத்தங்கள் மூலம் இவiரின் இந்த கவசத்தை பறித்து பின்னர் இவர்மீது சட்ட நடிவடிக்கை எடுக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.