Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அதிபரின் சீனப் பயணத்திற்கான பின்னணி பொருளாதார ஒத்துழைப்பல்ல - ரொய்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அதிபரின் சீனப் பயணத்திற்கான பின்னணி பொருளாதார ஒத்துழைப்பல்ல - ரொய்டர்

[ புதன்கிழமை, 10 ஓகஸ்ட் 2011, 09:25 GMT ] [ நித்தியபாரதி ]

'பொருளாதார ஒத்துழைப்பு என்பது சிறிலங்கா அதிபரின் சீனப் பயணத்திற்கான பிரதான காரணியாக இருக்கவில்லை' இவ்வாறு Reuters செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.

அதன் முழுவிபரமாவது,

சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை முன்னிறுத்தி மேற்குலக சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தங்களில் இருந்து தப்பிப்பதற்கான வழிவகையை தேடிக்கொள்வதன் பொருட்டு செவ்வாயன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவிற்குப் பணயம் மேற்கொண்டுள்ளார்.

அதேவேளையில், போட்டி நிறைந்த பொருளாதார உலகில் சிறிலங்காவின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதும் அப்பயணத்தின் நோக்கமாகும்.

சீனா சென்றுள்ள அதிபர் ராஜபக்ச Shenzhen என்னும் இடத்தில் இடம்பெறும் அனைத்துலக பல்கலைக்கழக மாணவர்களின் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டதன் பின்னர் சீன அதிபர் கூஜின்ராவோ மற்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபாயோ ஆகியோரை பீஜிங்கில் சந்திக்கவுள்ளார்.

சீனாவிற்கான தனது பயணமானது 'பொருளாதார ஒத்தழைப்பை' முதன்மைப்படுத்தியதாகும் என திங்களன்று சிறிலங்கா அதிபர் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவில் பெருமளவான முதலீடுகளை மேற்கொண்டுள்ள நாடுகளில் ஒன்று சீனாவாகும்.

சிறிலங்காவில் இடம்பெறும் போருக்குப் பின்னான மீள்கட்டுமானப் பணிகளிற்காக கடந்த யூனில் ஒதுக்கப்பட்டுள்ள 06 பில்லியன் டொலர்களில் 1.5 பில்லியன் டொலர்களை சீனா வழங்கியுள்ளது. அதனை விட ஏற்கனவே மின் சக்தி ஆலை ஒன்றைக் கட்டுவதற்கும், ராஜபக்சாவின் இடமான அம்பாந்தோட்டையில் புதிய கப்பற்துறைமுகம் ஒன்றும் சீனாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுவருகின்றது.

"பாதுகப்பற்ற மற்றும் நெருக்கடியான சூழலிலும் கூட சீனாவின் முதலீடுகள் தொடர்ந்தும் கிடைக்குமா என்பதை சிறிலங்கா உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டியுள்ளது" என பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறிருப்பினும், பொருளாதார ஒத்துழைப்பு என்பது சிறிலங்கா அதிபரின் சீனப் பயணத்திற்கான பிரதான காரணியாக இருக்கவில்லை.

"யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேற்குலக நாடுகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள அழுத்தத்தால் மகிந்த ராஜபக்ச பெரும் குழப்பமடைந்துள்ளார்" என சமூக ஜனநாயக மையத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரான குசல் பெரேரா தெரிவித்துள்ளார்.

முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பு என அறிவித்த தமிழ்ப் பிரிவினைவாத புலிகளை அழித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன.

ஆனால் தற்போதும் இன-அரசியல் இணக்கப்பாடு என்பது மிக நீண்ட இடைவெளியைக் கொண்டுள்ளது. மே 2009ல் சிறிலங்காவில் நிறைவுக்கு வந்த முப்பது ஆண்டுகாலப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டபோது, சீனா, ரஷ்யா, அயல்நாடான இந்தியா போன்றன சிறிலங்காவிற்கு ஆதரவாக இருந்தன.

போரின் போது பெற்றுக்கொண்ட வெற்றியானது ராஜபக்சவை சிறிலங்காவில் மிகப் பிரபல்யம் மிக்க ஒரு தலைவராகக் கொண்டு வந்துள்ள அதேவேளையில் போரின் போது இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பாக மேற்குலக நாடுகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், புலிகளின் ஆதரவுக் குழுக்கள் என்பன ஒருசேர சிறிலங்கா அதிபர் மீது தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.

"செப்ரம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சீனாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியுமா அல்லது இல்லையா என்பது தொடர்பாக அறிந்துகொள்வதற்காகவே தற்போது சிறிலங்கா அதிபர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என நான் நினைக்கின்றேன்" என பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக உருவாக்கிய கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் முடிவானது நடைபெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமைக் கூட்டத்தொடரின் போது சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பிக்கவேண்டும் என அமெரிக்கா சிறிலங்காவிடம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது சிறிலங்காவானது அனைத்தலக விசாரணை ஒன்றிற்கு முகங்கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்ட போதும் சிறிலங்கா அரசாங்கம் அதனை ஏற்க மறுத்திருந்தது.

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அதில் பங்குகொண்ட சிறிலங்காப் படையினர் மற்றும் தமிழ்ப் புலிகள் ஆகிய இரு தரப்புக்களும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமை உள்ளடங்கலாக பல யுத்தக்குற்றங்களை மேற்கொண்டுள்ளனர் என ஐ.நா வல்லுனர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொதுமக்கள் படுகொலை இடம்பெற்றுள்ளது என சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பொய்யான பரப்புரையின் விளைவாகவே ஐ.நா அறிக்கையில் தம் மீது பல போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவும் சிறிலங்காவிற்கு ஆதரவாகவுள்ளது. சீனா, ரஷ்ய ஆகிய இரு நாடுகளும் சிறிலங்காவின் உள்நாட்டுப் பிரச்சினையில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து நிற்கின்றன.

யுத்தத்தின் இறுதிப் பகுதியில் யுத்த நிறுத்தம் ஒன்றை அமுல்ப்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இருநாடுகளாலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மேற்கொண்ட முயற்சியை சீனா, ரஷ்யா ஆகியன தடுத்து நிறுத்தியுள்ளன.

சீனாவானது தனக்கு மேற்குப் புறமாகவுள்ள திபேத்தியர்கள் மற்றும் Uighurs போன்றவர்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முயல்வதால் அங்கே இனக்குழப்பம் நிலவுகின்றது. அதேபோன்று ரஷ்யாவானது செச்சினியர்களுடன் போராடவேண்டியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் வாழும் தமிழ் இனத்தவர்களுடன் மேற்கொண்டுவரும் போராட்டத்தை ஒத்ததாகவே ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளிலும் இனக்குழப்பங்கள் நிலவிவருகின்றன.

"சீனா இரு நோக்கங்களைக் கொண்டு செயற்படுகிறது. சீனாவானது இந்தியாவை எரிச்சலடைய வைக்கும் அதேவேளையில், நாட்டில் நிலவும் பிரிவினைவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது" என சிறிலங்காவில் கடமையாற்றிய மேற்குலக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவானது ராஜபக்ச அரசாங்கத்துடன் பேணுகின்ற நெருக்கமான உறவை இந்தியா வெறுக்கின்றது. அத்துடன் சீனாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டமானது சிறிலங்காவைத் தன்வசப்படுத்தகின்ற சீனாவின் செயற்பாடாக உள்ளது என இந்தியா கருதுகிறது.

இதற்கும் மேலாக, சிறிலங்காவில் உள்ள தமது தமிழ் உறவுகளுக்காகப் பாடுபடுகின்ற 60 மில்லியன் தமிழ் மக்களைக் கொண்ட தமிழ்நாட்டை ஆளுகின்ற அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் செவிசாய்த்துக் கொள்ளவேண்டும்.

இதன் விளைவாகவே, சிறிலங்கா அதிப தனது நாட்டுத் தமிழ் மக்கள் தொடர்பில் மிகச் சரியான அரசியல் இணக்கப்பாடொன்றை மேற்கொள்ள முன்வரவேண்டும் என புதுடில்லி அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்தியாவானது காலாதிகாலமாக சிறிலங்காவின் உள்விடயங்களில் செல்வாக்குச் செலுத்தி வந்தபோதிலும், தற்போது தனது உள்நாட்டு அரசியல் இலாபத்தை நோக்காகக் கொண்டு கொழும்பிற்கான ஒத்துழைப்பை இந்தியாவால் வழங்க முடியாதுள்ளது.

"சீனா மட்டும் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக எதுவும் பேசாத ஒரேயொரு நாடாக உள்ளது. ராஜபக்சவின் ஆட்சியைப் பாதுகாக்கின்ற ஒரேயொரு நாடாக சீனாவே உள்ளது. இந்தியா இது விடயத்தில் உறுதியற்ற நிலையில் உள்ளது" என பெரேரா தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110810104460

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனக் குடியரசு ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று மகிந்த ராஜபக்ஷ சீனா செல்ல உள்ளார்:-

10 ஆகஸ்ட் 2011

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

மேற்கின் அழுத்தங்களை முறியடிப்பதற்கு ஜனாதிபதி சீனா விஜயம் செய்துள்ளார்? தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

மேற்குலக நாடுகளினால் அண்மைக் காலமாக பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை முறியடிப்பதற்கு தேவையான ஆதரவினை திரட்டும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு விஜயம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வலுவான பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும், யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பான அழுத்தங்களிலிருந்து மீள்வதற்கும் இந்த விஜயத்தை ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனப் ஜனாதிபதி ஹூ ஜின்டாவோ மற்றும் பிரதமர் வென் ஜியாபோ ஆகியோரை பெய்ஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

சீனாவுடன் நெருங்கிய பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதே தமது விஜயத்தின் பிரதான இலக்கு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலகில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதனால், சீனாவுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

எனினும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது ஜனாதிபதியின் முதன்மை நோக்கமல்ல என ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் மேற்குலக நாடுகளினால் பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களிலிருந்து மீளும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது என சமூக ஜனநாயகத்திற்கான மத்திய நிலையத்தின் ஆய்வாளர் கௌசால் பெரேரா தெரிவித்துள்hளா.

எனினும், நாட்டில் இன மற்றும் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதற்கு இன்னமும் கூடுதல் முனைப்பு காட்டப்பட வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனக் குடியரசு ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று மகிந்த சீனா செல்கிறார்:-

09-08-2011 - 01:32

மக்கள் சீனக் குடியரசின் ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோவின் அழைப்பொன்றை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்கு செல்ல உள்ளார்.

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அண்மையில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்றிருந்த போது, சீன ஜனாதிபதியால், இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி தனது சீன விஜயத்தின் போது, சீன ஜனாதிபதி, பிரதமர் வென்ஜியாபாவோ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அத்துடன் சீனாவில் நடைபெறும் சில கூட்டங்களிலும் அவர் கலந்துக்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/65404/language/ta-IN/article.aspx

சிறிலங்காவில் இடம்பெறும் போருக்குப் பின்னான மீள்கட்டுமானப் பணிகளிற்காக கடந்த யூனில் ஒதுக்கப்பட்டுள்ள 06 பில்லியன் டொலர்களில் 1.5 பில்லியன் டொலர்களை சீனா வழங்கியுள்ளது. அதனை விட ஏற்கனவே மின் சக்தி ஆலை ஒன்றைக் கட்டுவதற்கும், ராஜபக்சாவின் இடமான அம்பாந்தோட்டையில் புதிய கப்பற்துறைமுகம் ஒன்றும் சீனாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுவருகின்றது.

ஒரு அரசால் உறுதிப்படுத்தப்பட்ட கடன் பத்திரம் பொதுவாக 1.6 வீத வட்டியில் விற்கப்படலாம்.

ஆனால், சிங்களம் சீனாவுக்கு என்ற 6.3 வட்டி வீதத்தில் வழங்குகிறது.

இதில் எவ்வளவு பங்கு மகிந்த கூட்டத்துக்கு சேரும் என தெரியவில்லை.

இதில் ஏமாந்தவர்கள் சிங்கள, தமிழ், முஸ்லீம், பறங்கிய, வேட மக்களே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.