Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளன், சாந்தன், முருகன் உயிர்காக்க நிதி தாரீர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழுமையாக விசாரணை நிறைவுறாத இராஜீவ் கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, செய்யாத குற்றத்திற்காக சகோதரர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிர் மத்திய அரசால் பறிக்கப்பட இருக்கிறது.

perarivalan_267.jpgஇது மரண தண்டனை அல்ல, மிகக் கவனமாய் திட்டமிடப்பட்டு, நடத்தப்பட இருக்கிற படுகொலை. நம் கண்முன்னே நமது சகோதரர்கள் எவ்வித முகாந்திரமுமின்றி படுகொலை

செய்யப்பட 21 வருடங்களாய் காக்க வைக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கப்பட்டு, இறுதியில் தூ

க்குக் கயிறை தழுவப்போகிறார்கள்.

தமிழர்கள் எந்த ஒரு சமயத்திலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய வலிமை உள்ளவர்கள் அல்ல என்று நம்பும் இந்த இந்திய அரசை தமிழர்களாகிய நாம் வெல்லவேண்டும்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்களின் விடுதலையை பெற்றுத்தரக் கூடிய வகையில் சட்டரீதியான போராட்டங்களையும், மக்கள் திரள் போராட்டங்களையும் நாம் எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். அதற்குப் பெருமளவிலான நிதி தேவைப்படுகிறது. நிச்சயம் இந்த நிதிச்சுமையை இந்த மூவரின் குடும்பத்தினரால் தாங்க முடியாது.

உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் உறவுகளே! இந்த நிரபராதிகளைக் காக்க நிதியுதவி அளியுங்கள்! 21 ஆண்டுகளாக சிறையில் வாடும் தனது பிள்ளையைக் காக்கக் கோரி நம்மிடம் முறையிடும் அற்புதம் அம்மாளின் துயருக்கு ஒரு முடிவு காண உதவுங்கள்! 21 ஆண்டுகளாக அவர் சிந்திக் கொண்டிருக்கும் கண்ணீருக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மனமுவந்து நிதி தாருங்கள்!!

நிதியளிக்க: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16117&Itemid=263

நிதியுதவி அளித்தபின்பு அதுகுறித்த விவரங்களை save.3.tamil@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

நீங்கள் அளிக்கும் நிதி கீழ்க்காணும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

1. மரணதண்டனைக்கு எதிராக சட்டரீதியாக வழக்கு நடத்துதல்

2. மரண தண்டனைக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரச்சாரம் செய்தல்

3. துண்டறிக்கைகள், சிறுவெளியீடுகள் கொண்டு வருதல்.

4. ஒத்த கருத்துள்ள இயக்கங்களின் பணிகளுக்கு உதவுதல்.

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்

கௌரவ தலைவர் - நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர்.

கௌரவ ஆலோசனைக் குழு - பேரா.ஜக்மோகன் சிங், நீதியரசர்கள் அஜித்சிங் பெய்ன்ஸ், எச்.சுரேஷ்

செயற்குழு - பேரா.பால் நியூமன், வழக்கறிஞர்கள் சந்திரசேகர், பா.ப.மோகன், மனித உரிமையாளர் கண.குறிஞ்சி உள்ளிட்டவர்கள்.

- மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்

தகவலுக்கு நன்றிகள்.

சிறுதுளி பெருவெள்ளம்.

ஆகக்குறைந்தது பத்து டாலர்கள் கூட முடிந்த உறவுகள் கொடுத்து உதவலாம். இதன் மூலம் இந்த உறவுகள் மட்டுமல்ல தமிழகமும் கூட விடுதலை பெறும்.

மூவர் உயிர்காக்க உதவுங்கள்! தமிழக முதல்வருக்கு பிரான்ஸ் தமிழர் நடுவம் வேண்டுகோள்

தூக்குமரத்தின் நிழலில் நின்றபடி வாழ்வின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்ற, நீதிமறுக்கப்பட்ட இளம்தமிழர் மூவரின் உயிர்காக்கும் தவிப்புடன் உங்களிடம் வேண்டிக்கேட்கின்றோம், அன்புள்ளங்கொண்ட தாயாய் நின்று உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்

இவ்வாறு பிரான்ஸ் தமிழர் நடுவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையாருக்கு!

தூக்குமரத்தின் நிழலில் நின்றபடி வாழ்வின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்ற, நீதிமறுக்கப்பட்ட இளம்தமிழர் மூவரின் உயிர்காக்கும் தவிப்புடன் உங்களிடம் வேண்டிக்கேட்கின்றோம், அன்புள்ளங்கொண்ட தாயாய் நின்று உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்.

காந்திதேசம் கருணை அற்றதா?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை நிகழ்வின், நிழலில், இருபத்தியாறு பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மரணதண்டனைத் தீர்ப்பெழுதியது. தூக்குக் கயிற்றின்முன் நிறுத்தப்பட்ட இருபத்தியாறு பேரில், பத்தொன்பது பேரை குற்றமற்றவர்கள் என முடிவுசெய்து உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. மூன்று பேருக்கு ஆயுள்தண்டனையாகவும், நாலு பேருக்கு மரணதண்டனையாகவும் அது தண்டனையைக் குறுக்கியது. மரணதண்டனைத் தீர்பளிக்கப்பட்ட இளம்தாய் நளினி ஆயுட்தண்டனைக் கைதியாகி, இருபத்தியொரு ஆண்டுகளாக தன் இனியவாழ்வை இருண்ட சிறைகளில் கழித்துக்கொண்டிருக்கின்றார்.

தூக்குத்தண்டனைக் கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று இளம் தமிழர்கள், தமது மரணதண்டனையை விலக்கக்கோரி, இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த கருணை மனுக்கள், பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போதைய குடியரசுத்தலைவரால், நிராகரிக்கப்பட்டுள்ளன

இந்தச் செய்தி, உலகத் தமிழர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

இந்த நூற்றாண்டின், மிகப்பெரும் மனித அழிவையும், அவலத்தையும் சுமந்து தேற்றுவார் இன்றியும், துயர் ஆற்றுவார் இன்றியும் தவிக்கும் ஈழத்தமிழ் இனம், மீண்டும் மீண்டும் சோக நெருப்பில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

மீளவும் மீளவும் வஞ்சிக்கப்படுகின்ற இனமாகிப்போனோமா நாம் என்ற ஏக்கமே எம்மில் மிஞ்சிநிற்கின்றது.

மனித கண்ணியங்களும், மனித உரிமைகளும் தமிழர்கள் விடயத்தில் காற்றில் பறக்கவிடப்படுகின்றனவா? காந்திதேசம் தமிழர் விடயத்தில் கருணைக் கண்ணை இழந்துவிட்டதா? என்ற கேள்விகளே விஞ்சிநிற்கின்றன.

இளமை கரைத்து, வசந்தம் தொலைத்து சிறைக்கம்பிகளுக்குப் பின், மரணத்தின் நிழலில் காலம் கடந்தேனும் ஒரு வசந்தம் தோன்றாதா என்ற ஏக்கத்துடன் தவித்திருக்கும் இந்த இளம் தமிழர்கள் மீதான அரசியல் படிந்த கொடிய தீர்ப்புக்களும், கருணை மனுக்கள் நிராகரிப்பும் இந்தியா குறித்த எங்கள் அபிப்பிராயங்களில், மேலும் சந்தேகக்கோடுகளையே தோற்றுவித்துள்ளன.

ஈழத்தமிழ் இனத்தினதும், உலகத்தமிழ் இனத்தினதும், நம்பிக்கைக்குரியவராய் எதிர்பார்ப்பிற்கு உரியவராய், தமிழகத்தின் முதல்வராய் பொறுப்பேற்றிருக்கின்ற உங்கள் மீதே நாம் கடைசி நம்பிக்கை கொண்டுள்ளோம்

நீதிமறுக்கப்பட்ட, இந்த இளம் தமிழர்களை, தூக்குக் கயிற்றில் இருந்து காப்பாற்ற உங்களால் மட்டுமே முடியும் என்று, தமிழர்கள் நாம் பூரணமாக நம்புகின்றோம்.

உலகத் தமிழினத்தின் நலன்சார்ந்து, நீங்கள் எடுத்து வைக்கும் ஒவவொரு அடியிலும் நம்பிக்கை வளர்த்து நிற்கின்றோம்.

கருணை உள்ளங்கொண்டு, உங்கள் பிள்ளைகளைக் காக்கும் அன்புக்கரம் கொண்ட தாயாகவே பார்க்கின்றோம்.

செய்யாத குற்றத்திற்காய், இருபத்தொரு ஆண்டுகள், கொடுஞ்சிறையில் வாழ்வின் இளமைகளை இழந்தவர்களின், உயிர்களைக் காப்பீர்கள் என்ற அசையாத நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

நிட்சயம் உங்களுக்கு உலகத் தமிழினம் நன்றிக்கடன் பட்டிருக்கும்.

இவ்வாறு பிரான்ஸ் தமிழர் நடுவம் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={C8CDC421-3933-41D5-9195-7B039750F57D}

Edited by akootha

எதுக்கெடுத்தாலும் ஈழத்தமிழரிடம் நிதி கேட்கும் படலம் - சம்பந்தப்பட்டவர்களின் போலித்தன்மையை காட்டவில்லையா?

'இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்' என்ற மனித உரிமை ஆர்வலர்களின் குரல் இப்போது மீண்டும் வலுவாகியுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில், பேரறிவாளன் (எ) அறிவு, தாஸ் (எ) முருகன், ரவிராஜ் (எ) சாந்தன் ஆகிய மூவரையும் தூக்கு மேடையில் நிறுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் தயாராகிவிட்ட நிலையில், மரண தண்டனையை ஒழிப்பதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும் ஓரணியில் திரண்டு வருகின்றன.

உலக அளவில் 95 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தண்டனை செயல்படுத்தப்படுவதில்லை.

இந்த நிலையில், இந்தியாவில் மரண தண்டனையை ஒழிப்பதற்கென சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கையெழுத்து இயக்கம் ஒன்று தீவிரம் காட்டி வருகிறது.

'Stop Death Penalty in India' என்ற பெயரிலான ஃபேஸ்புக் பக்கத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றில், சமூக ஆர்வலர்கள் பலரும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

பேரறிவாளன், முருகன், சாந்தன், தேவேந்திரநாத் தாஸ் மற்றும் தேவிந்த்தர் பால் சிங் உள்ளிட்டோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டியதற்கான காரணங்களும் அந்த மனுவில் அடுக்கப்பட்டுள்ளன.

தூக்கு தண்டனையை தூக்கிலிடக் கோரும் இம்மனுவில் கையெழுத்திடுவது எப்படி?

http://www.facebook.com/stop.death.penalty

என்ற ஃபேஸ்புக் பக்கத்துக்குச் சென்று, அப்பக்கத்தின் wall-ல் இம்மனுவில் கையெழுத்துவிட விரும்பும் நபரின் பெயர், தொழில் மற்றும் வசிப்பிடம் ஆகிய விவரத்தை அளித்திட வேண்டும்.

இந்த விவரம் அளிக்கப்பட்ட சில நிமிடங்களில், அந்த மனுவில் கையெழுத்துப் பதிவு செய்யப்பட்டுவிடும்.

கடந்த சில நாட்களில், இந்த இயக்கத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மரண தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுக்கான இணைப்பு:

http://www.facebook.com/stop.death.penalty#!/notes/stop-death-penalty-in-india/urgent-petition-to-the-president-of-india-stop-hanging-perarivalan-murugan-santh/110545945713419

Rajiv Ghandy Assassination: Abolish the Death Penalty in India and Save Innocent Tamils!

http://www.petitiononline.com/Muthu78/petition.html

Plea to cancel the death sentence wrongly given to innocent Tamils (Rajiv Ghandy Assassination)

http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-tamils-rajiv-ghandy-assassination

http://www.vikatan.com/news.php?nid=3350

Muthamizh

Chennai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.