Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மர்ம மனிதன் சர்ச்சை?.. இது முழுக்க முழுக்க வதந்தி, கட்டுக்கதை என்று ஒதுக்க முடியாதபடி சில உண்மைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன: கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் அறிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Wednesday, 2011-08-24 12:41:38]

pilaiyan-East_150.jpg

மர்ம மனிதன் தொடர்பான உண்மைத் தன்மையினை பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுறை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு தரப்பினருக்கும் நாட்டின் இளைஞர்களுக்கும் என அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அவர் விடுத்தள்ள அறிக்கை:

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மர்ம மனிதன் தொடர்பான மிக குழப்பகரமான நிலையினை ஓர் பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஆழ்ந்து உற்று நோக்கி வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இம் மர்ம மனிதன் தொடர்பான ஓர் அச்சமான சூழ்நிலை மக்களை குழப்பத்திலும், பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளதுடன் மக்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்குமான உறவினையும் சீர்குலைத்துள்ளது.

இதனால் பல பகுதிகளில் இளைஞர்கள் வன்முறைகளை நாடவும் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக செயற்படவும் களம் அமைக்கப்பட்டுள்ளது.

இம் மர்ம மனிதன் தொடர்பில் வதந்திகள் பரவுகின்ற போதிலும் இது முழுக்க முழுக்க வதந்தி, கட்டுக்கதை என்று ஒதுக்க முடியாதபடி சில உண்மைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இம் மர்ம மனிதன் எனப்படுபவரால் சில பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். எனவே இம் மர்ம மனிதன் தொடர்பான மக்களின் அச்ச உணர்வு தேவையற்றது என முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது.

ஆனால் சிலரின் திட்டமிட்ட வகையில் மக்களை குழப்பத்திலும், அச்ச உணர்விலும் ஆழ்த்துகின்ற வகையில் வதந்திகள் பரப்பப்படுவதையும் நிராகரிக்கமுடியாது.

எனவே இன்று கிழக்கு மாகாணத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக சீர்குலைக்கும் வகையில் விஸ்வரூபம் எடுத்திருக்கின்ற இம் மர்ம மனிதன் பிரச்சினை தொடர்பில் விசாரணை நடத்தி அதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது பாதுகாப்பு தரப்பினரின் முக்கியமான கடமையாகும்.

இக்காலப் பகுதியானது முஸ்லிம் மக்களின் நோன்பு காலமாகவும், தமிழ் மற்றும் கிறிஸ்த்தவ மக்களின் திருவிழாக் காலமாகவும் மாணவர்களின் பரீட்சைக் காலமாகவும் இருப்பதனால் இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பது இன்றியமையாததாகும்.

இதற்காக வேண்டி மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பாடு நம்பகத்தன்மை உடையதாகவும் வெளிப்படைத் தன்மை உடையதாகவும், அமைதல் வேண்டும். இதற்கென கிராமங்கள் தோறும் ஊர்பிரமுகர்கள், மதபெரியார்கள், பெண்கள் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு தரப்பினரை உள்ளடக்கி விழிப்புக்குழு, நடவடிக்கைக்குழு ஏற்படுத்தல் வேண்டும்.

இக்குழுக்களின் ஊடாக இவர்களின் முன்னிலையிலே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில் இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் சட்டத்தை மதித்து வன்முறையை நாடாமல் இப்பிரச்சினைக்கு தீர்வுகான முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரசியல் பேதங்களுக்கு அப்பால் மக்களின் முக்கிய பிரச்சினையாக இதனைக்கருதி இணைந்து செயற்பட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்.

இது தொடர்பில் கட்சித் தலைவரும் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் என்ற வகையில் நான் பாதுகாப்புத் தரப்பு உயர்மட்டத்துடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் தொடர்ந்து கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றேன்.

அதே நேரம் எமது கட்சியின் முக்கியஸ்த்தர்களும் கட்சியின் பிரதிநிதிகளும் மக்களுடன் களத்தில் நின்று பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.

30 வருடங்களாக கடுமையான யுத்தத்தில் அனைத்தையும் இழந்து உயிர்களை மட்டுமே காப்பாற்றிக் கொண்ட இம் மக்களுக்கு மலர்ந்து வருகின்ற சமாதான சூழ்நிலையில் மீண்டுமொரு அச்சத்தையும் அவலத்தையும் ஏற்படுத்துவதையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அனுமதிக்காது.

http://www.seithy.com/breifNews.php?newsID=48804&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.