Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

The Origins of Aryan People - History of Iran

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரியப் படையெடுப்பை உண்மையில்லை என்பவர்கள் ஈரானியர்களின் சரித்திரத்தையும், பாரசீகத்தின் சரித்திர ஆராய்சியாளர்களையும் பொய்யன்களாக்குகிறார்கள்.

இன்றும் ஈரானியர்கள் தாங்கள் தான் ஆரியர்கள் என்றும், இந்தியர்கள் தங்களுடையதும் திராவிடர்களினதும் கலப்பினால் வந்தவர்கள் என்றும் வாதாடுகிறார்கள்.

ஈரானிய சரித்திர ஆராய்ச்சியாளர்களையும், அவர்களின் சரித்திரத்தையும் பொய் என்று நிருபிக்கப் படவேண்டிய பொறுப்பு எல்லாம் தெரிந்த மாதிரி உளறும் குருவியின் தலையில் விழுகிறது. இந்த சவாலை ஏற்றுக் கொள்வாரா அல்லது தமிழரை வசைபாடி இந்த தலைப்பையும் திசை திருப்புவாரா என்று பார்ப்போம்.

ஆரியப் படையெடுப்பை உண்மையென்று பல நூற்றாண்டுகளாக வாதாடி, அதைக் காரணம் காட்டி உயர்ந்த அந்தஸ்து தேடி இன்றும், அதன் பலன்களை அனுபவிக்கும் கூட்டம், பெரும்பான்மையான இந்தியர்கள் அவ்ர்களின் கபடவேடத்தை அறிந்ததும், அதைப் பொய் என்று நிரூபிக்க முனையும் இந்த வாதங்கள் எதுவும் நிரூபிக்கப் படவுமில்லை, எல்லோராலும் இன்னும் உண்மையானதாக ஏற்றுக் கொள்ளப் படவுமில்லை.

அமெரிக்காவில் இந்தக் ஆரியப் படையெடுப்பை மறுக்கும் கட்டுரை அப்படியே ஏற்றுக் கொள்ளப் படவில்லை. ஆனால் ஆரியப் படையெடுப்பை ஏற்றுக் கொள்பவர்களினதும், மறுப்பவ்ர்களினதும், இருபக்கக் கருத்துக்களும் பாட்ப் புத்தகத்தில் இடம் பெறவேண்டுமென்று தான் தீர்மானிக்கப் பட்டுள்ளது. இதன் கருத்து ஆரியப் படையெடுப்பு உண்மையல்ல என்று அமெரிக்க ஏற்றுக் கொண்டு விட்டது என்று இங்கு சிலர் பூச்சுத்துகிறார்கள்.

"I am Darius, the great king, the king of kings

The king of many countries and many people

The king of this expansive land.

The son of whistashpa of Achaemenid

Persian the son of a Persian

Aryan from the Aryan race

From the Darius the Great's inscription in Naqshe-e-Rostam- Iran

The above inscription is the one of most valid written evidences of the history of Aryan race, and as can be seen Darius I, (Persian King) in the 5th century BC, declares himself a Persian and from the Aryan race .

Darius the Great

darius_s.jpg

Darius. Relief from the

northern stairs of the Apadana

at Persepolis (Archaeological

museum, Tehran) Darius I (Old Persian Dârayavauš): king of ancient Persia, whose reign lasted from 522 to 486. He seized power after killing king Gaumâta, fought a civil war (described in the Behistun inscription), and was finally able to refound the Achaemenid empire, which had been very loosely organized until then. Darius fought several foreign wars, which brought him to India and Thrace. When he died, the Persian empire had reached its largest extent. He was succeeded by his son Xerxes.

http://www.livius.org/da-dd/darius/darius_i_0.html

"Indians are hybrid of early Dravidians and the white Iranian race, a fact which is evident from their dark skin. The origin of Aryan people- History of Iran"

http://www.iranchamber.com/history/article...ple_origins.php

ஆரியப் படையெடுப்பு பொய் என்று இன்னும் நிரூபிக்கப் படவில்லை. மாறுபட்ட கருத்துக்கள் தாண் வைக்கப் படுகின்றன. அமெரிக்காவில் அதற்கு, ஆதரவாகவும், எதிராகவும் கட்டுரைகள் எழுதப் படுகின்றன. அமெரிக்க அரசின் ஆதரவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை என்று கதை விடும் ராஜாதிராஜாவுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை. அமெரிக்காவில் அப்பளம் வட்டமாயிருப்பது நல்லதா அல்லது சதுரமாக வெட்டினால் பொரியுமா என்பது போன்ற ஆராய்ச்சிக்கும் நிதியதவி பெறலாம், உம்முடைய ஆராய்ச்சிக் கட்டுரையின் நோக்கத்தை விளக்கமாகச் சமர்ப்பித்தால் சரி. அதனால் ஆரியப் படையெடுப்பை உண்மை என்பவர்களும் கூட ஆராய்ச்சிக்கு Sponsor செய்யுமாறு விண்ணப்பிக்கலாம்.

ஈரானியர்களின் சரித்திரம் பொய், ஆரியர்கள் என்பவர்கள் இந்தியர்கள், அவர்கள் எங்கிருந்தும் இந்தியாவுக்கு வரவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குருவியின் தலையிலுள்ளது.

darius_seal.jpg

Seal of Darius the Great

(British Museum, London; ©!!!)

http://www.iranchamber.com/history/darius/darius.php

ம்ம் இதுகும் உற்சாகமூட்டக்கூடிய கருத்தாடலாக இருக்கும் என்னும் நம்பிக்கையோடு. குருவிகளே ஆதாரங்களோடு உங்கள் பதில்க் கருத்தினையும் பதியுங்கள். ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு நன்றிகள்.

ஈரான் என்று இன்று அழைக்கப்படும் Persia. PErsia என்ற சொல்லிற்கு Persian அல்லது Farsi மொழியில் Land of Aryans என்று அர்த்தம்.

Hindi, Urudu, Farsi Persian போன்ற மொழிக்கிடையிலான ஒற்றுமைகள் தொடர்புகளை விவாதிக்க வேண்டிய தேவையிருக்காது என்று நம்புகிறேன்.

ஈரானை இன்று பலர் இஸ்லாமிய மிதவாதக் கொள்கை கொண்ட நாடாக மட்டுமல்ல ஒரு அரபு நாடாக கூட பாக்கிறார்கள். ஈரானியர்கள் மத்தியில் இஸ்லாம் என்பது அரேபியர்களின் படையெடுப்பால் பரவிய மதம், அது அவர்களுடைய பூர்வீக மதம் அல்ல. Persians இன் பங்களிப்பால் வந்தது தான் Shia இஸ்லாமியப்பிரிவில் உள்ள கலாச்சார செல்வந்தம் (cultural richness).

தயவு செய்து யாழ்களத்தை கண்மூடித்தனமான ஆரிய எதிர்பாளர்கள் கொண்ட களம் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கும் திசையில் செல்லாது அவதானமாக இருப்போம்.

இங்கு எவரும் ஆரியர் திராவிடர் வேற்றுமையில் குளிர்காய நினைக்கவில்லை. அன்று மெஞ்ஞானத்தின் பெயரால் அடக்கி ஆண்டது போல் இன்று விஞ்ஞானத்தின் பெயரால் வரலாற்றை பொய்யாக்கும் குறிப்பிட்ட தனமனிதர்களின் விசமப்பிரச்சாரத்தை தெளிவாக்க மட்டும்தான் இந்த விவாதங்கள்.

இலங்கையில் மகாவம்சத்தில் சிங்கத்தில் இருந்து மனிதன் வந்த கதையாக எப்படி திரிபுகள் நிகழ்ந்ததோ அதேபோல் அனைத்து வரலாற்று ஆவணங்களிலும் காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப வரலாற்றுத் திரிபுகள் செருகல்கள் இடம்பெற்றிருக்கின்றன. எதுவும் 100% சரியானவை என்றில்லை.

இன்று உயிரியல் ஆகட்டும் தொல்பியல்துறையாகட்டும் உயிர்ச்சுவட்டு ஆய்வுகள் மூலம் பல அதிசயக்கத்தக்க உண்மைகளை வெளியிட்டு வருகின்றன. விலங்குப்பாகுபாட்டியலில் கூட சமீபத்திய மரபணு தொழில்நுட்ப ஆய்வுகள் பல புதிய மாற்றங்களைப் புகுத்தியுள்ளன. பழைய பாகுபாட்டு நிலைகளை மாற்றியமைத்துள்ளன. அவை நியாயமானவையாகக் கூட இருக்கின்றன..!

அந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டு இங்கு தரப்பட்ட ஆய்வறிக்கை இந்த விடயத்தில் ஒரு முதற்கட்ட ஆய்வுமுடிவுதான். அது குறித்து இறுதி முடிவெடுக்க குறித்த ஆய்வுகள் மீளப் பல தடவை செய்யப்பட வேண்டும். இன்று உலக அளவில் அவர்களால் செய்யப்பட்டது போன்ற பல ஆய்வுகள் செய்யப்பட்டு பல முடிவுகள் பழைய ஆய்வு முடிவுகளை மறுதலிக்கவல்லனவாகவும் நிறுவத்தக்கனவாகவும் வந்துள்ளன. அதற்கான சில உதாரணங்கள் முன்னைய விவாத இடத்தில் தரப்பட்டுள்ளது. இப்போ இந்த ஆய்வு முடிவும் கூட ஆரியர் படையெடுப்பை உறுதிப்படுத்தி இருந்தால் இங்கு குறித்த ஆய்வுக்கட்டுரை வந்திருக்கவே வாய்ப்பில்லை..!

அந்த வகையில் ஆரிய திராவிட வேற்றுமை உணர்வோடு குறித்த ஆய்வை நோக்காது...அவர்கள் அப்படி நோக்கிச் செய்திருந்தாலும், இல்லைச் செருகல் புகுத்திச் செய்திருந்தாலும் கூட.. அதில் பொதிந்திருக்க கூடிய சாத்தியமான உண்மைகளைக் கண்டறிய வேண்டும். அதற்கு மீளாய்வுகள் அவசியம். அதை விடுத்து நாம் அவை நமக்குப் பெருத்தமில்லாதவற்றைச் சொல்கின்றன என்று அவற்றை அடியோடு புறக்கணிக்க முடியாது. பழைய கருதுகோள்களை மாற்றத்தக்க அல்லது மீளச் சரிபார்க்கத்தக்க நவீன வழி வகைகள் இன்று இருக்கக் கூடியதாக அவற்றைச் செய்யாமல் வரலாற்றில் பழைய கருதுகோள்களை, கோட்பாடுகளை நமது தேவைக்காக இன்று கட்டிக்காத்துவிட்டு நாளை அது பிறிதொரு வழியில் தவறு என்று சுட்டிக்காட்டப்படும் போது அது நமக்குள்ளேயே பல முரண்பாடுகளுக்கு இட்டுசெல்லலாம்.

எனவேதான் குறித்த கட்டுரை தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம். அந்த ஆய்வின் நம்பகத்தன்மையை அதிகரிக்க வேண்டின் அதை இந்தியாவிலோ அல்லது பிறிதொரு நடுநிலை நாட்டிலோ மீளச்செய்து முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து அது ஒரு விஞ்ஞானப் புனை கதை என்று எடுத்த எடுப்பில் மறுதலிக்க முடியாது. காரணம் அவர்கள் கையாண்ட வழிமுறையில் வேறு ஆய்வுகள் பலவும் வேறிடங்களில் செய்யப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்களும் அங்குதரப்பட்டுள்ளது.

எனவே எமது சுயநலம் மட்டும் கருதாது பிராந்திய மானுடவியல் பண்பின் உண்மைத்தன்மை அறிய வேண்டின் சில கசப்பான உண்மைகளைக் கூட தரிசிக்க தயாராக இருக்க வேண்டும். இவற்றை நமது விருப்பத்துக்கு மாற்றி அமைப்பதால் அவையே உண்மை என்றாகிவிடாது..! காரணம் அவை விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி முடிவுகளால் திருத்தமாகப் பெறப்படக் கூடியவையாக இருப்பதே..!

குறித்த ஆய்வுக்கட்டுரை சார்ந்த விடயங்களுக்கும்..அங்கு தொடரப்படும் விவாதங்களுக்கும்...இந்த இணைப்பைப் பாருங்கள்..

http://www.sepiamutiny.com/sepia/archives/002849.html

:P :idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவி, ஆரியப் படையெடுப்பு என்பது பொய், ஆரியர்கள் என்பவர்கள் பண்டைய இந்தியாவின் மக்கள், அவர்கள் எங்கிருந்தும் இந்தியாவுக்கு வரவில்லை என்ற கருத்துக்கு அடுத்த தலைப்பில் அட்டகாசமாக வக்காளத்து வாங்கினீர், ஆனால் ஈரானின் மக்கள், தங்களின் சரித்திர கல்வெட்டுக்களையும், தொல்பொருட் தடயங்களையும் காட்டி தாங்கள் தான் ஆரியர்கள், அவ்ர்கள் இந்தியாவுக்கு வந்து, இந்திய உபகண்டத்தின் பூர்வீக மக்களுடன் கலந்ததாதால் தான் திராவிடரல்லாத இந்தியர்கள் உருவாகினார்கள் என்கிறார்கள், என்பதற்கு ஆதாரங்களையும் தந்து, அவர்கள் ஆரியரில்லை, இங்கு வரவுமில்லை என்பதை நிரூபியுங்கள் எல்லாம் தெரிந்த குருவியே என்று கேட்டால் அதைச் செய்ய வக்கில்லை.

தலைப்பிற்கோ, கேள்விக்கோ எந்த விதத் தொடர்புமில்லாத குப்பையைப் பதிவு செய்ய உமக்கு வெட்கமாக இல்லையா? தெரியாததைத் தெரியாது என்று சொல்வது தான் பண்பாடு, சளாப்பிக் கொண்டு, சம்பந்தமில்லாதவற்றைத் தொடர்பு படுத்திச் சப்பைக்கட்டு கட்டுவதை, நீர் வேண்டுமானால் கெட்டித்தனமாக நினைக்கலாம். பல பேர் நேரடியாக உம்மிடம் சொல்லாவிட்டாலும், உம்மிடமுள்ள கொஞ்ச நஞ்ச நல்லெண்ணத்தையும் மறந்து விடுவார்கள்.

:roll: :roll: :evil: :evil:

குருவி, ஆரியப் படையெடுப்பு என்பது பொய், ஆரியர்கள் என்பவர்கள் பண்டைய இந்தியாவின் மக்கள், அவர்கள் எங்கிருந்தும் இந்தியாவுக்கு வரவில்லை என்ற கருத்துக்கு அடுத்த தலைப்பில் அட்டகாசமாக வக்காளத்து வாங்கினீர், ஆனால் ஈரானின் மக்கள், தங்களின் சரித்திர கல்வெட்டுக்களையும், தொல்பொருட் தடயங்களையும் காட்டி தாங்கள் தான் ஆரியர்கள், அவ்ர்கள் இந்தியாவுக்கு வந்து, இந்திய உபகண்டத்தின் பூர்வீக மக்களுடன் கலந்ததாதால் தான் திராவிடரல்லாத இந்தியர்கள் உருவாகினார்கள் என்கிறார்கள், என்பதற்கு ஆதாரங்களையும் தந்து, அவர்கள் ஆரியரில்லை, இங்கு வரவுமில்லை என்பதை நிரூபியுங்கள் எல்லாம் தெரிந்த குருவியே என்று கேட்டால் அதைச் செய்ய வக்கில்லை.

தலைப்பிற்கோ, கேள்விக்கோ எந்த விதத் தொடர்புமில்லாத குப்பையைப் பதிவு செய்ய உமக்கு வெட்கமாக இல்லையா? தெரியாததைத் தெரியாது என்று சொல்வது தான் பண்பாடு, சளாப்பிக் கொண்டு, சம்பந்தமில்லாதவற்றைத் தொடர்பு படுத்திச் சப்பைக்கட்டு கட்டுவதை, நீர் வேண்டுமானால் கெட்டித்தனமாக நினைக்கலாம். பல பேர் நேரடியாக உம்மிடம் சொல்லாவிட்டாலும், உம்மிடமுள்ள கொஞ்ச நஞ்ச நல்லெண்ணத்தையும் மறந்து விடுவார்கள்.

:roll: :roll: :evil: :evil:

இந்த விவாவத்துக்குள் நுழைய வேண்டிய தேவை இல்லை என்பதுக்கே அங்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பழைய கொள்கைகளையும் கோட்பாடுகளை கருதுகோள்களையும் புதிய கோணத்தில் அதிநவீன வடிவத்தில் மீளப் பரிசோதிக்கும் காலம் நெருங்கிவிட்டது. நீங்கள் கல்வெட்டிலும் கால்வாய் வெட்டிலும் நில்லுங்கோ..! ஆங்கிலேயர் தந்த ஆரியன் என்பதுக்கு ஆயிரம் அர்த்தம் கற்பிப்பீர்கள்..! ஆயிரம் சுத்தல்கள் சுத்துவீர்கள்..! வரலாறுகள் பலவற்றிலும் உண்மை என்பது 100% வீதம் இல்லை..! இன்னும் சில வருடங்களுக்குள் எல்லாப் புரளிகளுக்கும் விஞ்ஞான ரீதியான விடை கிடைக்கும். சந்திரனில் ஆம்ஸ்ரோங் இறங்கினானா என்பதே கேள்விக்குரியதாக ஆக்கப்பட்டிக்கு.. நீங்கள் கல்வெட்டில் உள்ளதை எவனோ இதுதான் என்ற நம்புகிறீர்கள்..ஆனால் விஞ்ஞானம் இதுதான் பிடி என்று உங்கள் கண்முன்னேயே நிரூபிப்பத்தை நம்புகிறீர்கள் இல்லை. சாத்திரம் பொய் எங்கிறீர்கள்..ஆனால் கல்வெட்டில் புரியாத வடிவத்தில் இருப்பதை இதுதான் என்றால் நம்புவீர்கள்..! மீண்டும் உங்களின் விதண்டாவதத்துக்குள் நுழையும் எண்ணமில்லை. உங்களுக்கு பிடித்தபடி நீங்கள் சொல்லிட்டுப் போங்கோ..நமக்கு உலகுக்கு என்ன வந்திச்சுது..! :wink: :) :idea:

விஞ்ஞான விளக்கங்கள் முடிவுகளில் இந்த பார்ப்பான்கள் சந்தோசப்படுறதுக்கு ஒன்றுமில்லைங்க விஞ்ஞானத்தமான முடிவுகளிலை ஆய்வுகூட பரிசோதனை முடிவுகளிலை சமூக அரசியல் நிதி நிலமைகள் கூட கனக்க பங்கு வகிக்குதுங்க ஒரு யூனிவசிற்றை முடிவை இன்னொரு யுனிவசிற்றி மறுத்தது கண்கூட பார்த்திருக்ககிறோமுங்க ...விஞ்ஞானத்திலை விடை காணமுடியாத கன விசயமிருக்குதுங்கோ...விஸ்வ ஹிந்து பரிசத்து ஆரியனுக்கு சார்பாக முடிவெடுக்க கனக்க நிதி கொடுக்க தயங்காதுங்கோ. மூன்றாம் உலக நாடுகளிலை மட்டும் ஊழலில்லைங்கோ... நாசா தொடக்கம் பென்ரகன் வரை உந்த சித்து விளையாட்டு இருக்குதுங்கோ.........இந்துமாகடல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.