Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்க்கு ஆதரவாக ஒன்று திரளும் சக்திகளை உடைக்கும் சதியில் காங்கிரஸ் அரசு

Featured Replies

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 26, 2011

Sonia%20and%20Mahinda.jpg

சிறிலங்கா அதிபர் மஹிந்த இராஜபக்‌ஷ அவசரகால சட்டத்தினை நீக்கியது, இந்திய அரசாங்கம் ராஜிவ் கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை தேதி விதிக்கப்பட்டமை, இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் விவகாரம் ஆகியன எல்லாமே இந்திய - சிறிலங்கா அரசின் திட்டமிட்ட காய் நகர்த்தல்களே.

இந்த காய் நகர்த்தல்களிற்கு முதற்காரணியாக இருப்பது அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கூட்டத்தொடரில் நடக்கவிருக்கும் இலங்கை பற்றிய விவகாரமே.

இந்த கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் அல்லது அமெரிக்கா இந்த அறிக்கை தொடர்பில் மனு சமர்ப்பிக்கலாம் எனவும் நம்பபப்டுகின்றது. இந்த செய்தி போர்க்குற்றத்தில் ஈடுபட்ட சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அதற்கு துணை போன இந்திய அரசாங்கத்திற்கும் பெரும் தலையிடியாகவே மாறும்.

இதனை திசை திருப்பவே இந்திய - சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட காய் நகர்த்தல்களை செய்து வருகின்றது. இந்தியாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இலங்கை விடயத்தில் மிக காட்டமாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. போர்க்குற்ற விசாரணை பற்றி கேள்வி எழுப்புகின்றன. ஆழுங்கட்சியான காங்கிரஸிற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றது. மறு வளமாக தமிழ் நாட்டில் போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்தம் தமிழ் நாட்டில் ஒரு போராட்டமாகவே வெடிக்கின்றது.

ஆகவே இந்த நெருப்பினை தணிக்கவும், மக்களின் உணர்வலைகளை மாற்றவும் ராஜீவ் காந்தி கொலை வழக்கினை எடுத்து அந்த தீயினை மக்கள் மனதில் மீண்டும் படரவிடுவதே இந்திய அரசின் நோக்கம்.

.

1.அனைத்திந்திய ரீதியாக காங்கிரஸ் ராஜிவ் கொலை வழக்கில் நடவடிக்கை எடுத்துள்ளது என்ற செய்தி

2.இந்த செய்திக்கு தமிழ் நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதே வேளை ஜெயலலிதாவும் ஏனைய தமிழ் கட்சிகள் சிலவும் இந்த எதிர்ப்பிற்கு செவி சாய்ப்பதனை தவிர்க்கலாம்.

3. ஆகவே இதன் மூலம் சிறிலங்காவிற்கு எதிராக ஒன்று திரண்டு இருந்த தமிழக சக்திகளை பிரித்தல் அல்லது முரண்பாட்டினை ஏற்படுத்தல்.

4.இதன் மூலம் போர்க்குற்றச்சாட்டிற்கான வீரியத்தை குறைத்தல்.

ஆகியவற்றை இந்திய குள்ள நரிகள் செய்யத்திட்டமிட்டுள்ளன. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கும் தமிழர் உரிமையும் ஒன்றுடன் ஒன்றோ அல்லது சட்ட ரீதியான போராட்டம் என்று உணர்ந்து தமிழ் நாட்டு மக்கள் செயற்படுவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கு எதிரான ( மரண தண்டனைக்கு எதிரான போராட்டம்) போராட்டத்தின் ஊடாக ஈழத்தமிழர் விடயத்தில் ஒன்று பட்டு நிற்கும் தமிழ் நாட்டு தமிழர்கள், தமிழக அரசு, இந்திய எதிர்க்கட்சிகளின் கூட்டு செயற்பாட்டை பிரிக்க யாரும் முற்படமாட்டார்கள். ஆனால் பிரிக்கப்படும் என்றே காங்கிரஸ் கட்சி நினைத்து காய்களை நகர்த்துகின்றது.

அடுத்ததாக இந்திய நாடாளுமன்ற அமர்வில் தமிழர்கள் பிரச்சினை பற்றி விவாதிக்கும் போது அது தொடர்பில் தமக்கு சாதகமான நடவடிக்கைகளை கொண்டுவரவே இரணு விடயங்களை இந்திய அரசு திட்டமிட்டு நகர்த்தியது.

1. தமிழ்க்கட்சிகளை காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனன் நாச்சியப்பன் அழைத்து பேசியது.

2. மஹிந்தரை அவசரகால சட்டத்தினை நீக்கும் அறிவிப்பை வெளியிடுமாறு கூறியது.

தமிழ் மக்களையும் தமிழ்க்கட்சிகளையும் டில்லிக்கு அழைத்துப்பேசுவது தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கையினை ஏற்படுத்தும் என காட்டுவதற்கே. அதாவது சிறிலங்கா அரசிற்கு இந்தியா அழுத்தத்தினை கொடுக்கின்றது என காட்டுவதற்கே. அதனைக்கூட்ட இந்திய அரசு உத்தியோக பூர்வமாக அதி உயர்மட்ட அளவில் செய்யவில்லை மாறாக ஒன்றுக்குமே பிரயோசனம் இல்லாத இந்திய உளவுப்படையின் முகவரான சுதர்சனன் நாச்சியப்பனை வைத்தே கூட்டத்தினை நடாத்தியது தமிழர்களை எப்படி இந்தியா ஏமாற்றுகின்றது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. சுதர்சனன் நாச்சியப்பன் தன்னால் சோனியாவின் மனதை மாற்ற முடியும் என்று அடிக்கடி வெடிப்பவர் ஆனால் இதுவரை என்னத்தை மாற்றினார் என தெரியவில்லை.

அடுத்ததாக அவசர காலச்சட்டத்தினை நீக்கினால்தான் நாம் உங்களுக்கு ஏதாவது உதவ முடியும் என மஹிந்தரை மிரட்டியே அதனை நீக்க வைத்துள்ளது இந்தியா. ஆனால் அதனைக்கூட ஒழுங்காக செய்யவிலை. சிறிலங்காவில் அவசரகாலச்சட்டமும், பயங்கரவாத தடைச்சட்டமும் மஹிந்தருக்கு உள்ளங்கையும் புறம் கையும் போன்றது. உள்ளங்கையால் தமிழர்க்கு அடிக்க முடியாவிட்டால் புறங்கையால் அடிக்க முடியும்.

மேற்குறித்த இரு விடயங்களும் ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதனை இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் படம் காட்டவே ஆகும். இதன் மூலம் சிறிலங்கா மீது அழுத்தத்தினை மேற்கொள்ளுமாறு போராட்டம் செய்யும் இந்தியர்களையும் தமிழர்களையும் திருப்திப்படுத்தவே இந்த விளையாட்டுக்கள். இது டில்லியின் ஒரு வகையான சாதகமான அழுத்தம் அல்லது அணுகுமுறை என்றே கூறலாம்.

அடுத்ததாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டோர் மீது நடவடிக்கை எடுப்பதன் ஊடாக தமிழக மக்களை ஆத்திரமூட்ட செய்வது. இந்த ஆத்திரத்தினை ஜயலலிதா மீதும், ஏனைய கட்சிகள் மீதும் திருப்ப வைப்பது. இதன் மூலம் ஈழத்தமிழர்களுக்காக ஒன்று பட்ட தமிழக அரசு, மக்கள், இந்திய எதிரணிகளை உடைப்பதே இதன் உள் நோக்கம்.

.

மட்டுமல்ல போர்க்குற்றத்திற்கு எதிரான வீரியத்தினையும் குறைக்கும் என இந்தியா நம்புகின்றது.ஆனால் தமிழ் மக்களும் தமிழர் ஆதரவி சக்திகளும் இந்த சதியினை உடைத்து நகர்வார்கள். ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான மரண தண்டனை என்பதும் ஒரு உரிமை மீறலே என்ற வகையில் தமிழர்கள் செயற்படுவார்கள்.

http://www.eelanatha...%AE%9A%E0%AF%81

Edited by உமை

தமிழக உறவுகள் விழிப்பாக ஒற்றுமையாக இருந்து காங்கிரசின் சதிகளை முறியடிக்கவேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் நகர்வுகள் முக்கியமாக இருக்கும்.

அன்னா சகாராவின் போராட்டம் வட இந்தியாவை எரிக்கவேண்டும்.

அதேவேளை புலம்பெயர் தமிழர்கள் எப்படியாவது போர்குற்ற விவகாரத்தை ஐ.நா. மனிதஉரிமைகள் விவாதப்பட்டியலில் அமெரிக்க ஊடாக சேர்க்கவேண்டும்.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.