Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மத்திய அரசிடம் 6 கோரிக்கைகளை முன்வைத்தன.. ஒருமித்த கருத்துக்கு வரமுடியாத தமிழ்க் கட்சிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[sunday, 2011-08-28 09:46:07]

India_tamilparties_confrence2011_150.jpg

தமிழ் மக்களுடைய நிலங்களை இலங்கை அரசு ஆக்கிரமிப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கோரிக்கைகளை இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற இரண்டு நாள் கலந்துரையாடல்களின் போது மத்திய காங்கிரஸ் அரசிடம் தமிழ்க் கட்சிகள் ஏகமனதாக முன்வைத்துள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஈழத்தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத் தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பன் இந்தக் கூட்டத்துக்கு ஏற் பாடுசெய்திருந்தார். 8 தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர். இலங்கை அரசினால் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் . மக்கள் தமது சொந்தக் காணியில் சொந்த இடத்தில் மீளக் குடியமர அனுமதிக்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

அத்துடன் தமிழர் நிலப் பகுதிகளில் இருந்து இராணு வம் முற்றாக அகல வேண்டும். வீதிகள், கிராமங்கள் தோறும் படையினர் இருப்பதால்தான் தேவையில்லாப் பிரச்சினைகள் வருகின்றன.

யுத்த காலத்திலும் இதற்கு முன்பாகவும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இந்தியாவிலுள்ள 2 லட்சம் ஈழத்தமிழரும் நாடு திரும்புவதற்கு ஏதுவான சூழ்நிலைகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்.

அவர்கள் இராணுவப் பிரசன்னங்கள் இருப்பதால் தாயகம் திரும்புவதற்கு அச்சப்படுகின்றார்கள். மேலும் தாயகம் திரும்பும் அகதிகளுக்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

தமிழ் மக்களுடைய நிலங்கள் அபகரிப்பதை ஆக்கிரமிப்பதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.

தமிழ் மக்களை அவர்களது வசிப்பிடத்துக்கு திரும்பவிடாமல் உயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்து விட்டு அந்த இடங்களில் சிங்கள மக்களை குடியமர்த்துவதை முதலில் நிறுத்த வேண்டும்.

பயங்கரவாதச் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்.

ஆகிய ஆறு அம்சக் கோரிக்கைகளே அனைத்துத் தமிழ்க் கட்சிகளாலும் ஏகமனதாக முன்வைக்கப்பட்டுள்ளன.

தீர்வுத்திட்டம் பற்றிப் பேசப்பட்டபோதும் அனைத்து தமிழ்க் கட்சிகளதும் ஒருமித்த கருத்துக்கு வரமுடியவில்லை. அதற்காக இந்த முயற்சியைத் தோல்வியடைந்ததாகக் கருதவேண்டியதில்லை. உண்மையில் இதைப் பற்றி ஆலோசிப்பதற்கான நேரம் எமக்கும் போதுமாக இருக்கவில்லை. கால அவகாசம் கிடைத்திருக்குமானால் அனைத்துக் கட்சிகளும் ஒரு மித்த கருத்துக்கு வந்திருக்க முடியும். மேலும், எம்மால் முன்வைக்கப் பட்ட கோரிக்கைகள் தொடர்பில் இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல். எவ். சுரேஷ் அணியில் இருந்து சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஆனந்த சங்கரி, பத்மநாபா, ஈ.பி.ஆர். எல்.எவ். சார்பில் இரா. துரைரத்தினம், சிறிதரன், ரெலோ வில் இருந்து செல் வம் அடைக்கல நாதன், புளொட் சார்பில் கந்தையா சிவணேசன், பெனடிக் தனபால சிங்கம், ஈ.பி.என். எல்.ப் சார்பில் பரந்தன் ராஜன், தமிழ் காங்கிரஸிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://www.seithy.com/listAllNews.php?newsID=49014&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அரசிடம் 6 கோரிக்கைகளை முன்வைத்தன.. ஒருமித்த கருத்துக்கு வரமுடியாத தமிழ்க் கட்சிகள்!

9c2c5a82-91a2-485d-ad32-6576396dadcf.jpg

அனைத்து தமிழ்கட்சியினரும் ஒருமித்த கருத்தோடு வாங்க வாங்க என கிந்தியன் தொடர்ந்து இஞ்சி மரபா விற்பதன் நோக்கம் என்ன? இவர்களாவது? வாரதாவது? என முன்னமே தெரிந்து போட்ட படியால்தான்.. :rolleyes: :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.