Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதிக்குப் பேரிடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 04:53 GMT ] [ தா.அருணாசலம் ]

pure%20Ceylon%20tea.jpgமத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் சிறிலங்காவினால் ஏற்றுமதி செய்யப்படும் 300 மில்லியன் கிலோ தேயிலையில், 78 வீதமானவற்றை ஈரான், ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளே வாங்கி வந்தன.

ஆனால் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சிறிலங்காவில் இருந்து 55 மில்லியின் கிலோ தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தேயிலை ஏற்றுமதியில் 30 வீதம் மட்டுமேயாகும்.

அரசியல் நெருக்கடிகளால் லிபியா, சிரியா போன்ற நாடுகளின் பிரதான துறைமுகங்களுக்கு தேயிலையை அனுப்ப முடியாத நிலை உள்ளதாக கொழும்பின் முன்னணி தேயிலை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரான மலிக் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடையும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஈரானில் இருந்து ஏற்றுமதியாளர்கள் தமக்கான கொடுப்பனவை உள்ளூர் வணிக வங்கி ஒன்றின் ஏற்பாட்டில் வேறு வழிமுறை ஒன்றின் ஊடாகவே பெறுவதாகவமு அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவின் நான்காவது மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதி நாடான சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும், ஆண்டுதோறும் 10 மில்லியன் கிலோ தேயிலை அனுப்பப்படும் லிபியாவின் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா தேயிலை சபையின் பணிப்பாளர் ஹசித டி சில்வா தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110828104565

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா தேயிலையை இறக்கு மதி செய்யும் நாடுகளின் பட்டியலில் லிபியாவும் இருந்தது, மேற்குலகில் புலம்பெயர் தமிழர்களின் புறக்கனப்பு போராட்டம் முக்கிய பங்கு வகுக்கின்றது.

Edited by தமிழ் அரசு

இந்த வருமான இழப்பை சீனாவோ இல்லை இந்தியாவோ இழப்பீடு செய்யமுடியாது, பெரிய இழப்பு மேற்ரும் நீண்ட காலம் செல்லலாம் மீழ சரிசெய்ய. அதற்குள் பல நூறு பிரச்சனைகள் நாட்டுக்குள்ளே தோன்றும்.

தொடர்ந்து புறக்கணிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் மறைமுகமாக பாதிக்கப் படப் போவதும் மலையக தமிழ் தொழிலாளார்களே.

Edited by தமிழ் சிறி

இதனால் மறைமுகமாக பாதிக்கப் படப் போவதும் மலையக தமிழ் தொழிலாளார்களே.

நீண்ட காலத்தில் அவர்கள் நன்மை அடையலாம்.

இவர்கள் ஏற்கனவே பெரியளவில் பாதிக்கப்பட்டுத்தான் உள்ளனர். இவர்களின் ஒரு நாள் சம்பளம் ஐநூறு என நினைக்கிறேன், அண்மையில் கூட்டப்பட்டது அதிலும் அவர்கள் ஏமாற்றப்பட்டார்கள்.

சிங்கள அரசு பொருளாதரா ரீதியில் பலவீனப்படும் பொழுது அது பல அரசியல் மாற்றங்களையும் தரும், அதன் மூலம் இந்த மக்களின் வாழ்வு மேம்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

35_1.JPG

ஏற்கனவே அவன்... இவன் ....தொழில் ரீதியான ஒப்பந்தம் என்று சொறிலங்காவில் ஒப்பந்தம் வாங்கி போட்டான்.. இனி அஸ்ஸாம் பக்கம் ஜாகைய மாற்றி கொள்வார்க்ளோ.. அங்கயும் வருமானம் வரவில்லையென்றால் தெரு தெருவா பிச்சை எடுங்க .... இது எப்படி இருக்கு ? :icon_idea:

அரபு நாடுகளுக்கான கடந்த வருட தேயிலை ஏற்றுமதி - 300 மில்லியன் கிலோ

அந்த நாடுகள் - ஈராக், சிரியா, லிபியா, ஈரான்.

இது மொத்த ஏற்றுமதியில் 78%

இந்த வருட முதல் ஆறுமாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை - 55 மில்லியன் கிலோ (30%)

காரணங்கள்

- லிபியாவிலும் சிரியாவிலும் தொடரும் மக்கள் போராட்டங்கள்

- ஈரான் மீதான பொருளாதார தடை

http://www.sundaytim...ews/nws_01.html

Edited by akootha

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார தளம்பல்களால் இலங்கையில் தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வருமான வீழ்ச்சியை ஈடுகட்டும் விதமாக தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொழிற்சங்கங்கள் கண்டித்துள்ளன.

லிபியா, சிரியா மற்றும் இரான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமைகளால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நாடுகளால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை விட, தொழிலாளர்களுக்காக அண்மையில் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தாலேயே தாம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை தேயிலை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயந்த கீரகல பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

தொழிலாளர்களின் சம்பளத்தை 100 ரூபாய் வரை குறைப்பதன் மூலம் தமது நட்டத்தை ஈடுசெய்ய முடியும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால், சர்வதேச சந்தைகளில் ஏற்படுகின்ற தாக்கங்கள் தொழிலாளர்களிடத்தில் எந்த விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்த முடியாது என்று தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

வாழ்க்கைச் செலவு

லாபங்களில் பங்கு கொடுப்பது பற்றி இதுவரை காலமும் வாய்திறக்காத கம்பனிகள், நட்டம் ஏற்படும் போதுமட்டும் தொழிலாளர்களின் சம்பளத்தில் கை வைக்க நினைப்பது தவறான சிந்தனை என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் துணை பொருளாதார அமைச்சருமான முத்து சிவலிங்கம் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பையும் நாணயத்தின் பெறுமதியையும் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பை எந்தக் காரணத்தைக் கொண்டும் மீண்டும் குறைப்பது பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்றும் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, தேயிலை ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிகளை சந்தித்தால் அவர்கள் வரிவிலக்கு மற்றும் மானியங்கள் போன்ற பரிகாரங்களை அரசிடமே நாட வேண்டும் என்று பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளர் ஓ.ஏ. ராமையா தமிழோசையிடம் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஆடை ஏற்றுமதியாளர்கள் இவ்வாறான நெருக்கடியை சந்தித்த வேளையிலும் இவ்வாறான நடைமுறைகளே கையாளப்பட்டதாகவும் ராமையா சுட்டிக்காட்டினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2011/08/110829_teatradeunions.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.