Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்சேகாவை கொலை செய்ய முயற்சி?! – கொழும்பு ஊடகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22-276x300.jpg

பிரசுரித்தவர்: admin August 30, 2011

சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரபல சிங்கள இணைய ஊடகமொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் ஹெந்த விதாரண, குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக இரகசிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களினால் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஹெந்த விதாரண தெரிவித்துள்ளார். போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட செல்லிடப் பேசி சிம் அட்டைகளில் இந்தத் தகவல்கள் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கைதி ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜே.வி.பி தலைவர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்புக்களை எடுத்துள்ளார். விசாரணைகளை திசை திருப்பும் நோக்கில் இவ்வாறு தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஹெந்த விதாரண’வின் இந்தத் தகவல்களில் சந்தேகம் நிலவுவதாக புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களே தெரிவிப்பதாக குறித்த சிங்கள இணைய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

போரை வெற்றிக் கொள்வதற்கு முக்கியமாக திகழ்ந்த சரத் பொன்சேகா’வை புலிகள் இலக்கு வைக்கக் கூடும் என்பதில் ஆச்சரியமில்லை என்ற போதிலும், அரசாங்கமே சரத் பொன்சேகாவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெந்நீர் பெற்றுக்கொள்ளக் கூட நீதிமன்றின் உதவியை நாட வேண்டியுள்ள சரத் பொன்சேகா மீது புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொலைபேசி அழைப்பு, புலி உறுப்பினர் போன்ற காரணிகள் ஜோடினையாக இருக்கக் கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவை கைது செய்யும் முயற்சியில் முக்கிய பங்கு வகித்த ஹெந்த விதாரண’வே இந்தத் தகவல்களை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://mykathiravan....a-news/?p=14043

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.