Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர் வாழும் நாட்கள் சில காலங்கள் தான் - ஊனமுற்ற போராளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குரல் கடந்த வருடம் Posted 27 October 2010 - 09:25 PM அன்று இக்களத்தில் இணைத்திருந்தேன். இந்தக்குரலுக்குரிய போராளி நெஞ்சின்கீழ் உணர்வற்ற நிலமையில் மருத்துவம் பெற்று வந்தான். இவ்வருடம் பலதரம் சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்டு உடலின் பலம் யாவும் இழந்து வருகிறான். வாழப்போகும் நாட்கள் இன்னும் குறிப்பிட்ட காலங்கள் என்கிறது மருத்துவ அறிக்கைகள். இவன் வாழும்வரை தனக்கு பிடித்ததை சாப்பிட்டு சந்தோசமாக இருக்க வேண்டும்.

வயதான அம்மா கூலிவேலைக்குச் சென்று தனதும் தனது மகளினதும் வாழ்வைக் கொண்டு செல்கிற வறுமையில் வாழ்ந்தும் , 2மாதம் அல்லது 3மாதம் ஒருமுறை இவனைச் சென்று பார்த்துத் தன்னால் இயன்ற 2ஆயிரம் ரூபாவோ அல்லது இயன்ற சிறு உதவியைக் கொடுத்துவிட்டுப் பிள்ளையின் நிலையை எண்ணி அழுதுகொண்டு போய்விடுகிறார்.

இவனுக்கு மாதாந்தம் உதவுவதாக ஒரு நிறுவனம் கூறியிருந்தார்கள்.(புலம்பெயர் நாட்டிலிருந்து செல்லும் உதவிகளை வவுனியாவிலிருந்து வழங்கும் நிறுவனம் அது) ஆனால் சில தரம் மட்டும் 3ஆயிரம் ரூபா மட்டுமே கொடுத்துவிட்டு நிறுத்திவிட்டார்கள். ஒருமுறை கடந்த வருடம் இக்குரலைக் கேட்டுவிட்டு கள உறவு நுணாவிலான் 50€ உதவியிருந்தார்.

கடந்தமாதம் வரை பராமரித்த மருத்துவமனை நிருவாகம் வெளிநாட்டு நிறுவனம். அந்நிறுவனமானது தற்போது தங்கள் கடமை முடிந்துவிட்டதாக இந்தப் போராளி போன்ற பலரை வீடுகளுக்கும் மற்றும் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பிவிட்டார்கள். இப்போதைய மருத்துவமனையில் தனது உடல்வலுவையெல்லாம் இழந்த இவன் ஒருநேர உணவை வெளியில் எடுத்துச் சாப்பிடவே வெகுமதி கொடுத்தே சாப்பிட வேண்டியுள்ளது. பல விடயங்கள் எழுத முடியாதுள்ளது.

இவன் வாழும் வரையும் மாதாந்தம் இவன் விரும்பிய உணவை உண்ண இவனுக்கு உதவி தேவைப்படுகிறது. உதவ முடிந்த உறவுகளிடமிருந்து உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தவருடம் பதிவிட்ட இடுகையின் இணைப்பு கீழ் இணைக்கிறேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76932

கடந்த வருடம் ஒலித்த இந்த இளைஞனின் குரல் பதிவு

இணைப்பில் அழுத்திக் கேளுங்கள்.

__________________________________________________________________________________________

கீழ்வரும் குரலும் கடந்த வருடம் Posted 06 November 2010 - 08:00 PMஅன்று பதிவிட்டிருந்தேன். இப்பிள்ளைக்கு கள உறவு நிழலி ஒருமுறை உதவியிருந்தார். நிழலி மேலும் பெற்றோரை இழந்த பிள்ளைகள் இருவரைப் பொறுப்பேற்றமையால் இந்தப் பெண்பிள்ளையை வேறு ஒருவர் உதவுவதாக பொறுப்பெடுத்தார். ஆனால் தொடர்பு கொண்டு கதைத்துவிட்டு உதவி இதோ அதோ என்று சொல்லி கிட்டத்தட்ட எட்டுமாதங்கள் கடந்த நிலமையில் அந்த நபர் உதவவுமில்லை தொடப்பு கொள்ளவுமில்லை.

இந்தப்பிள்ளையும் தற்போது மேற்சொன்ன இளைஞனின் நிலமைக்கு வந்து கொண்டிருக்கிறாள். குடும்பத்தினராலும் உதவ முடியாத நிலமையில் இருக்கிற இந்தப் பிள்ளைக்கு இப்போது 19வயதாகிறது. படுக்கைப்புண்கள் போட்டு மேற்கூறிய இளைஞன் இருக்கும் மருத்துவமனையிலேயே உள்ளாள். இவளுக்கும் உதவிகள் தேவைப்படுகிறது. இவர்கள் வாழும்வரை பிடித்ததைச் சாப்பிட்டு வாழ்ந்துவிட்டுப் போகும் வரை மாதம் சிறு தொகை குறைந்தது மூவாயிரம் ரூபாய் கிடைத்தாலே அது பேருதவியாக இருக்கும். ஒரு ஞாபகப்படுத்தலுக்காய் கடந்த வருடம் இட்ட பதிவை மீளவும் இடுகிறேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77277

இவளுக்கு இப்போது 18வயதாகிறது. திருமலையில் ஒரு சாதாரண குடும்பத்தின் பிள்ளையிவள். நடுத்தரக் குடும்பமொன்றின் எட்டாத கனவுகள் இவள்பற்றி இவளது குடும்பத்திற்கும் இருந்தது.

12வது வயதில் பள்ளியால் திரும்பிக் கொண்டிருந்த பிள்ளை காணாமல் போய்விட்டாள். கட்டாயமாய் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக என்ற திட்டத்தில் இவள் வன்னிக்குப் பிடித்து அனுப்பப்பட்டாள். பார்க்கவே அஞ்சிய துப்பாக்கிகளை இவள் கையாளக்கற்றுக் கொடுக்கப்பட்டாள். களம் செல்லலுக்கான தயார்படுத்தலோடு கல்வியும் கற்க அனுமதிக்கப்பட்டாள்.

பிள்ளைபறிபோன துயரில் உயர்மட்டங்கள் யாவற்றின் படிகளையும் தேடிய தாய்க்கு அவள் எங்கென்று தெரியாதெனவே சொல்லப்பட்டது. அம்மா அப்பா அக்கா தங்கைகளைக் காணவேண்டுமென்ற ஆசை இவளுக்கு நிராசையாகவே இருந்தது. துயரங்களை மறைத்துக் கொண்டு கல்வியில் கவனத்தைச் செலுத்திய அதேவேளை களத்தயார்படுத்தலிலும் தன்னைப் பிணைத்துக் கொண்டாள்.

கடைசியில் களம் அவசரமாய் அழைத்து ஆயுதங்களோடு காவலிருந்தாள். 2009 தைமாதம் முதுகுப்பகுதியில் காயமடைந்து இடுப்பின் கீழ் இயக்கம் அறுந்து ஓடித்திரிந்த கால்கள் ஓய்ந்து ஒடுங்கிப்போனாள். 2009மே பலிகளின் நடுவே உயிரோடு மீண்டவர்களுடன் இவளும் உயிர் மீண்டாள்.

இன்று 2010 முடியும் காலம் படுக்கைப்புண்ணோடு எப்போதாவது வந்து பார்க்கும் அம்மா வரும்வரை காத்திருந்து அழுதுவிட்டுப் படுக்கைப்புண்ணோடு அவலப்படுகிறாள். வாழும் வயதில் கல்வி கற்கும் வயதில் கனவுகள் பறிக்கப்பட்டு இன்று முடமாய்ப்போன ஒரு மகளின் குரல் இது.

இவர்களுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள :-

தொடர்புகளுக்கு

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

ஸ்கைப் தொடர்புக்கு - Shanthyramesh

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா, உங்கட A/C Money அனுப்பியுள்ளேன், உங்களுடன் தனிமடலில் தெடர்பு கொள்கின்றேன் விபரமாக.

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடையார் நீங்கள் மேற்படி இருவருக்கும் 6மாதங்களுக்கான உதவியாக அனுப்பிய 600டொலர்களும் கிடைத்தது. மிக்க நன்றிகள்.

இச்செய்தியைப் பார்த்து மேலும் பலர் தொடர்பு கொண்டிருந்தனர். இவர்களுக்கு உதவ முன்வந்திருந்தனர். உடையார் இவர்களைப் பொறுப்பேற்றதை தெரிவித்து இத்தகைய பாதிப்புகளுடன் உள்ளவர்கள் பற்றிக் கூறியதில் 4உறவுகள் தங்கள் உதவிகளை வேறு நால்வருக்கு செய்ய முன் வந்து விபரங்களைப் பெற்றுள்ளனர்.

2பேரால் மேலும் 4பேர் பயன்பெற்றுள்ளனர். தொடர்பு கொண்ட உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.