Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

57வது படைப்பிரிவின் CDO பிரிவால் எரி குண்டு வீசி கொல்ல பட்ட போராளிகள் புதிய போர்குற்ற ஆதாரம் (Photo in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

57வது படைப்பிரிவின் CDO பிரிவால் எரி குண்டு வீசி கொல்ல பட்ட போராளிகள் புதிய போர்குற்ற ஆதாரம் (Photo in)

  • Thursday, September 1, 2011, 10:44

சிங்கள பேரினவாதம் தமிழர் தாயக பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன்பாரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது .இதன் போது இறுதி பாதுகாப்பு வலயம் என அழைக்க பட்ட பகுதிகளிற்குள் தங்கி இருந்த மக்களையும் போராளிகளையும் கைது செய்து கொன்று குவித்தது . இவ்வாறாக போராளிகள் குழு ஒரு கொட்டகைக்குள் பாதுகாப்பு தேடி வாழ்ந்த வேளை அவர்கள் மீது நச்சு எறிகுண்டுகளை வீசி கொன்று அழித்துள்ளது.

இந்த குண்டு வீழ்ந்து வெடித்த ஐநூறு மீட்டருக்கு உட்பட்ட பகுதிகள் எங்கும் புகை மண்டலமாய் காட்சி அளிப்பதுடன் அதற்குள் தங்கி இருந்தவர்கள் அனைவரும் மூச்சு திணறி இறந்து விடுவார்கள் .அவ்வாறன தாக்குதலையே இலங்கை அரசு மேற்கொண்டது இதன் போது எண்பதாயிரம் மக்கள் கொலை செய்ய பட்டும் பதின் ஐந்தாயிரம் போராளிகள் கைது செய்ய பட்டதும் குறிப்பிடத்தக்கது .

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வன்னி புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிராந்தியத்தில் நடைபெற்ற பாரிய சண்டையில் பெரும் அளவிலான விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதூஷா, கேணல் துர்கா, லெப்.கேணல் நாகேஷ், உட்பட நூறுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள். பெருமளவிலான ஆயுத தளபாடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்(CDO � Commando Regiment ) மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுத்துடன் இணைந்து இந்திய இராணுவமும் நேரடியாகக் கலந்து கொண்டது .

ஈழ விடுதலைக்காக களமாடி வீழ்ந்த வீரர்கள் மீது சத்தியம் செய்து ஒற்றுமையுடன் ஒன்று பட்ட பலத்துடன் எமது தாயக விடியலை வென்றெடுப்போம் .கருத்து முரண்பாடுகள் கலைந்து அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்ற நிலையில் நாம் எமது இலட்சிய பாதையில் வீறு கொண்டு நடப்போம் .

கடந்த கால வரலாற்றுகளை முதற்படியாக்கி எமது சுதந்திர தேசத்தை அமைப்பது மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கடப்பாடாகும் .இந்த வேளையிலும் நாம் ஒன்றுபட மறுத்து பிரிவினவாத்தை உரைப்பதும் மேலும் தமிழர் களிற்குள் பிளவுகளையும் ஏற்படுத்துவோமாக இருந்தால்எமது இனம் சபிக்க பட்ட ஒரு இனமாக மாறிவிடும் . இதனை கருத்தில் கொண்டு அனைவரும் ஒன்று பட்டு மாவீரகள் மீது சத்தியம் செய்து எமது சுதந்திர விடுதலையை பெற்றெடுப்போம் .

அனைவரும் ஒன்றாய் வாரீர் .ஓரணி சேர்வீர். இது வரலாற்று கடமை .

http://www.tamilthai.com/wp-content/uploads/2011/09/news-logo3.png

http://www.tamilthai.com/wp-content/uploads/2011/09/top.jpg

http://www.tamilthai.com/wp-content/uploads/2011/09/je-logo.png

http://www.tamilthai.com/wp-content/uploads/2011/09/news-logo-5.png

http://www.tamilthai.com/?p=25601

படங்களின் இணைப்பு மட்டும் தரப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

அங்கு நடந்தது உலகில் ...எல்லாருக்குமே தெரிந்துவிட்டது,,,

இனியென்ன புதுசா?

இந்த படங்களை ஆக குறைந்தது, கறுப்பு வெள்ளையிலாவது போட்டு .......

நாங்களே அந்த உடல்களுக்கு சிறு கெளரவம் கொடுக்கலாம்........

செய்தி இணைப்பாளரே!

உண்மை அறிவிலி

சில பகுதிகளை மறைத்து மரியாதை கொடுத்திருக்கலாம்.

படங்கள் முழுவதும் தங்கள் பெயரைப் பதித்து நாசாமக்கிய சில ஊடகவியலாளர்கள், இறந்த உடலத்துக்கான மரியாதையை கொடுக்க நினைக்கவில்லை. இது அவர்களின் தராதரத்துக்கு எடுத்துக்காட்டு.

ஆனால் இனி உலகத்துக்கு தெரிய ஒன்றும் இல்லை என்று நினைப்பது சரியில்லை. கடந்த காலத்திலும் விட்ட ஒரு பெரிய தவறு இந்த அலட்சியப் போக்குத்தான்.

இதுவரை நாம் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை. இன்னமும் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. இதற்குள் நாமே சலித்துக்கொண்டு, மற்றவர்கள் மட்டும் எல்லாவற்றையும் சலிக்காமல் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தமிழனின் பின்னடைவுக்கு, தொடரும் பயங்கரவாத முத்திரைக்கு ஒரு காரணம்.

எனவே அவ்வபோது புதிதாக சிலவற்றை வெளியிட்டே ஆக வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.