Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாங்கக் குழுவினருக்கு ஜி.எல்.பீரிஸ், மிலிந்த மொறகொட ஆலோசனை

ஜெனீவா பேச்சுக்களுக்காக செல்லும் சிறிலங்கா அரசாங்கக் குழுவினருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜி.எல்.பீரிஸ், மிலிந்த மொறகொட ஆகியோரை ஆலோசனை வழங்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

மகிந்தவின் வேண்டுகோளை ஏற்று நேற்று புதன்கிழமை அரசாங்கக் குழுவினருக்கு ஜி.எல்.பீரிஸ் தனது அனுபவங்களை விளக்கினார்.

மகிந்த ராஜபக்சவின் இந்த அழைப்பானது வியப்பூட்டுவதாக இருக்கிறது என்று ஐக்கியத் தேசியக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் தூதுவராக மிலிந்த மொறகொட இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளதால் எதிர்வரும் சனிக்கிழமை அரசாங்கக் குழுவினருக்கு அவர் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இருவரையும் ஆலோசனை வழங்கச் செல்லுமாறு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

தகவல் மூலம் - புதினம்.கொம்

  • Replies 65
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை திருத்தம் செய்ய சிறிலங்கா அரசு வலியுறுத்தும்?

சுவிஸ் ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையேயான பேச்சுக்களின் போது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தக் கூடும் என்று இந்திய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சீ நியூஸ் (Zee News) தொலைக்காட்சி, சிறிலங்கா அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டி இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் போது தனது தேர்தல் அறிக்கையான மகிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் பேச்சுக்களை நடத்துமாறு தனது குழுவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

மகிந்த சிந்தனையின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நகர்வுகளும் இருக்கும் என்று அரசாங்கப் பேச்சுக்குழுவினருக்கான பயிலரங்கில் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாக சிறிலங்கா அரச தொலைக்காட்சி கூறியது.

அதேபோல் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கக் குழு வலியுறுத்தும் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்த ஒரு அரசியல் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், வன்முறைகளைத் தடுக்க யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச விரும்புவதாகக் கூறினார்.

சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற போது அமைதி முயற்சிகளில் புதிய அணுகுமுறையைக் கையாளப் போவதாகத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை ஜெனீவாவில் எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் நாட்களில் நடத்த ஒப்புக்கொண்டனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் தரப்பில் ஜெனீவாப் பேச்சுக்களில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளைச் செயற்படுத்துவதல் தொடர்பாகவே பேச்சுக்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ ஏடான விடுதலைப் புலிகள் சஞ்சிகையில் வெளியாகி இருந்த ஆசிரியர் தலையங்கத்தை புதினம் இணையத் தளம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசுரித்தது.

அந்த ஆசிரியர் தலையங்கத்தை இந்தியாவின் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளேடுகள் பெரும்பாலானவை வெளியிட்டிருந்தன. இதனடிப்படையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சீ நியூஸ் (Zee News) தொலைக்காட்சியும் பதிவு செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது

தகவல் மூலம் - புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவா நகரில் அம்பலப்படுத்துவோம்

ஆசிரியர் தலையங்கம்

துணைக்குழு விடயத்தில் அரசு அசமந்தப்போக்குக் காட்டி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு ஏன்இ எதற்காகப் போகவேண்டும் என்ற கேள்வி தமிழ் மக்களிடையே எழுகின்றது. சிங்கள இனவாதம் தமிழினத்தின் உரிமைகளை வழங்கப் போவதில்லை. கடந்த ஐம்பத்து எட்டு வருடங்களாக பேரினவாத அச்சில் தான் அவர்கள் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

தமிழினம் நீண்டதொரு விடுதலைப் பயணம். அது களைத்து விடவில்லைஇ சரிந்து விடவில்லை. தமது இலட்சியம் தமிழீழத் தாயகம் என்ற அந்த உறுதி தளரவில்லை. சண்டைக் காலமா? சமாதான சூழலா? பலத்தில் தளர்வில்லை. விடுதலைப் போராட்டம் இன்னும் தேசிய எழுச்சி பெறுகிறதுஇ பலமும் வளர்கிறது. இதனை தென்னிலங்கைப் பேரினவாதம் உணரவில்லை. மகாவீரர்களாகத் தங்களைப் புகழ்ந்து தள்ளிக் கொண்டு வீறாப்பு வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டு ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டை இன்னும் கையிலே வைத்துக்கொண்டிருக்கின்றனர். இது சமாதான வழி முறைகளுக்கான பெரும் முட்டுக்கட்டை.

கடந்த நான்கு வருடங்களாக அமுல்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசு முழுமையாக அமுல்ப்படுத்தியிருக்குமானா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தநிறுத்த ஒப்பந்த விதிகள்

அமுலாக்கம் குறித்து மட்டுமே

பேச்சு என்கின்றனர் புலிகள்

""ஜெனீவாவில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடு தலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் பேச்சு களின்போது தற்போதைய யுத்தநிறுத்த உடன்பாட்டு விதிகளை செம்மையாக நடைமுறைப்படுத்துவது பற்றி மட்டுமே பேசப்படும். அதற்கு அப்பால் எந்த விடயமும் பேசப்பட மாட்டாது. ஜெனீவாப் பேச்சுக்கான நிகழ்ச்சி நிரல் அதுதான்.''

- இப்படி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.

ஜெனீவாப் பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை பகிரங்கப்படுத்துமாறு இலங்கை அரசை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரியிருப்பது குறித்து கருத்துக் கேட்ட போதே புலிகளின் தலைமையுடன் தொடர் புடைய வட்டாரங்கள், புலிகளின் தலைமையின் நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப் படுத்தின.

ஜெனீவாப் பேச்சுகளின்போது, "மனித உரிமைகள் நடைமுறைப் படுத்தல்' என்ற அம்சம் பற்றி மேலதிகமாகப் பேசுவது குறித்து சில வட்டாரங்கள் நோர்வே ஊடாக ஒரு யோசனையைப் பிரேரித்த போதிலும், அது வும் நிராகரிக்கப்பட்டுவிட்டாகத் தெரிகிறது.

""இரண்டு நாள் பேச்சிலும் ஆக, யுத்த நிறுத்த அமுலாக்கம் - செம்மையாக நடைமுறைப்படுத்தல் பற்றி மட்டுமே பேசப்படும். அதற்கு அப்பால் பேசப்பட மாட்டாது. யுத்த நிறுத்த ஏற்பாடுகளை உறுதியாக நடை முறைப் படுத்துவது குறித்து இணக்கம் காணப்படு வது மட்டுமல்லாமல், காணப்பட்ட இணக் கம் களத்தில் வேகமாகவும், திறமையாக வும், குழப்பமின்றியும் செயல்படுத்தப்பட வும் வேண்டும். அது செயல்படுத்தப்படுவதில் தான் அமைதி முயற்சிகளின் அடுத்த நகர்வு தங்கியிருக்கின்றது. யுத்த நிறுத்தம் செம்மை யாக செயற்படுத்தப்படாமல் அமைதி முயற்சி கள் தொடரும் என்ற எதிர்பார்ப்புக்கே இடமில்லை.'' - என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

""யுத்தநிறுத்த உடன்பாட்டு விதிகளை செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்து மட்டுமே ஜெனீவாப் பேச்சில் ஆரா யப்படும்'' - என்ற தகவலை நேற்று கிளிநொச்சியில் வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வ னும் வலியுறுத்திக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் மூலம் -உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாவில் பழைய கோட்டையில் பேச்சு

விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுகள் ஜெனீவா நகரின் மையத்தில் நடைபெறா. அதற்குப் பதிலாக நகரின் மையத்திலிருந்து சுமார் இருபது கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள பழைய கோட்டை ஒன்றுக்குள் உள்ள முற்கால அரண் மனை ஒன்றில்அது நடைபெறும் எனத் தெரிய வருகிறது.

இந்த தொன்மை மிகுந்த கோட்டை நவீன முறையில் அலங்கரிக்கப்பட்டு புதிய வடி வத்தில் சர்வதேச மாநாடுகள், உயர் மட்டச் சந்திப்புகள் போனறவை நடைபெறக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகினறது.

அரசு, புலிகள் ஆகிய இரு தரப்பு பிரதி நிதிகள் குழுவும் ஜெனீவாவின் மையத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு இரண்டு நாளும் பேச்சுகளுக்கான இந்தப் பழைய கோட்டை அரண்மனைக்குக் கூட்டிச் செல்லப்படும் எனத் தெரியவரு கின்றது.

தகவல் மூலம் -உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசாங்கக் குழுத் தலைவருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

ஜெனீவா பேச்சுக்களில் கலந்து கொள்ளும் சிறிலங்கா அரசாங்கக் குழுவின் தலைவரான சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜெஃப்ரி லான்ஸ்ரெட் நேற்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த கால சிறிலங்கா அரசாங்கங்கள் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில் அரசாங்கத்தின் எதிர்காலக் கொள்கையை வகுப்பதில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கவனமெடுத்து வருவதாக அமெரிக்க தூதுவரிடம் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அரசாங்கக் குழுவினருக்கான பயிலரங்குகள் தொடர்பாகவும் அவை வெற்றிகரமாக நடந்துள்ளன என்றும் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவிக்கப்பட்டது.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளார்ந்த ஈடுபாட்டோடு அமைதி முயற்சிகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்க அரசாங்கம் பாராட்டுத் தெரிவிப்பதாக அமெரிக்கத் தூதுவர் ஜெஃப்ரி லான்ஸ்ரெட் கூறினார்.

சோதனையான காலங்களில் கூட அரசாங்கம் பொறுமையாக இருந்தமை பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் மூலம் - புதினம்.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் பயிற்சி அரங்கு நடத்தினாலும் தெரிந்தத்தானே பேசப்போறாங்க.இது என்னமோ உருப்படற மாதிரி தெரியல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாங்கக் குழுவில் கடற்படை தளபதி, காவல்துறை மா அதிபர்?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான ஜெனீவா பேச்சுக்களில் சிறிலங்கா கடற்படை தளபதி மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ, கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க, சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ஜோன் குணரத்ன, திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் அஜித் நிவாட் கப்ரால், சட்டத்தரணி கோமின் தயாசிறி ஆகியோர் அக்குழுவில் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அதிகாரிகள் குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் எதிர்வரும் சில நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

தகவல் மூலம் - புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாவிலும் '20 க்கு 40' கணக்கிடுவாரோ நிமல் சிறிபால டி சில்வா?: கலக்கத்தில் ஜே.வி.பி.!!

சிறிலங்கா அரசியலில் '20-க்கு 40' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிற அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை ஜெனீவா பேச்சுக்கான குழுவாக அரசாங்கம் நியமித்திருப்பதால் ஜே.வி.பி. கலக்கமடைந்திருப்பதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் ஜே.வி.பி. கூட்டணி அமைத்தது.

சுதந்திரக் கட்சி அணியில் போட்டியிட ஜே.வி.பி. 25 ஆசனங்களைத்தான் கேட்டிருந்தது. ஜே.வி.பி.யுடன் ஆசனப் பகிர்வு பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்த நிமல் சிறிபலா டி சில்வா, திருகோணமலை, அம்பாறை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தகுதியான சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் இல்லை என்பதால் 19 ஆசனங்களைக் கூடுதலாக ஜே.வி.பி.க்கு அளித்திருக்கிறார்.

ஜே.வி.பி. கேட்டது என்னவோ 20. நிமல் சிறிபால கொடுத்தது என்ன 40. ஆகையால் நிமல் சிறிபால டி சில்வாவை ஜே.வி.பி.யினர் சிங்களத்தில் '20-க்கு 40' என்று புனை பெயரிட்டு அழைத்து வந்தனர்.

தற்போது அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களின் அடிப்படையில் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவுக்கு அடுத்திருக்கும் மூத்த அமைச்சர் என்கிற வகையில் நிமல் சிறிபால டி சில்வா ஜெனீவா பேச்சுக்கான அரசாங்கத்தின் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் கூட்டணியைப் போலவே விடுதலைப் புலிகளுடன் நடத்துகிற பேச்சுக்களிலும் '20-க்கு 40' என்ற கணக்கில் விட்டுக்கொடுப்புகளை நிமல் சிறிபால டி சில்வா செய்துவிடுவாரோ என்ற அச்சம் ஜே.வி.பி.யிடம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைகளுக்கான குழுவிற்கு அறிவு போதிக்கும் பயிலரங்குக் கூட்டம் கொழும்பில் நடத்தப்பட்ட போது நிமல் சிறிபால டி சில்வாவின் செயற்பாடுகள் ஜே.வி.பி.யினரை மேலும் கலக்கமடையச் செய்திருப்பதாகவும் தெரிகிறது.

அமெரிக்கா வழங்கிய 'அறிவு'ப் பயிலரங்கில் எதுவித அக்கறையுமின்றி நிமல் சிறிபால டி சில்வா மந்தமான நிலையில் இருந்ததைக் கண்ட சிலர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர். மகிந்தவும் நிமல் சிறிபால டி சில்வாவின் பெயரைக் குறிப்பிடாமலேயே, தூக்கத்தைக் கலைத்துவிட்டு அனைவரும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கக் குழுவினர் ஜெனீவா சென்று பேச்சு நடத்தி முடித்துவிட்டு வரும் வரையில் 'நெருப்பை' மடியில் கட்டிக் கொண்டு இருப்பதைத் தவிர எங்கள் கட்சிக்கு வேறு வழியில்லை என்கின்றனர் ஜே.வி.பி.யினர்.

தகவல் மூலம் - புதினம்.கொம்

ஜெனிவா பேச்சின்போது ஒட்டுப்படைகளின் ஆயுதக்களைவிற்கு அரசு இணங்கக் கூடாது - ஹெல உறுமய

ஜெனிவாவில் நடைபெறவுள்ள பேச்சுக்களின்போது சிறீலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கும் துணைப்படைகளின் ஆயுதங்களை களைவதற்கான இணக்கத்தை சிறீலங்கா அரசு வழங்கக் கூடாதென ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கடந்த 7ம், 8ம் நாட்களில் நடைபெற்ற அரச பேச்சுக் குழுவிற்கான கருத்தரங்கில் கலந்து கொண்ட ஹெல உறுமய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஜெனிவா பேச்சுக்களின்போது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பது தொடர்பாக மாத்திரமே ஆராயப்படவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவற்கு இணங்கக் கூடாது என ஹெல உறுமயவும் ஜேவிபியும் கூட்டாகத் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறீலங்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை திருந்வதே அவசியம் எனத் தெரிவித்துள்ள ஹெல உறுமய அவ்வாறு அரசு செய்ய மறுக்குக்கும் பட்சத்தில் அரசிற்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.

sankathi.com

ஆயுத கலாச்சாரத்தில் எவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்குதுகள் இந்த மொட்டையள் சாந்தி சமாதானம் என்று சொல்லிக் கொண்டு புத்தரின் பாதையில் போதனையை செய்ய வந்திட்டு. :evil: :evil: ............. இப்பிடியே போனா நாடு விளங்கிடும்

அப்ப ஒட்டுப்படைகள் இருக்கிறதை அவையே ஒப்புக்கொள்கிறார்கள்

அப்ப ஒட்டுப்படைகள் இருக்கிறதை அவையே ஒப்புக்கொள்கிறார்கள்

இதுகள் இல்லாமல் அரசால் ஒன்றும் செய்ய முடியாது

ஆனால் இவர்களுக்கு ஏற்படும் நிலையானது பரிதாபம் தான்

சிங்கள அரசால் கூட காப்பாற்ற முடியாது.

விரும்பினா இந்தியா போகட்டும் ஆனால் இந்தியா என்னும் எவளவு காலம் தான் இவர்களுக்கு தினி போடும்?

வீண் செலவு என்று கைவிடும் நாளும் தூரம் இல்லை.

இக் கட்டுரையை வசித்தால் புரியும்

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...ghlight=#166733

இதையும் பாருங்கோ படிச்ச சட்டதரணிகளே இப்பிடிச் சொல்லினம்

கருணா குழு துணை இராணுவக் குழு இல்லை: சிறிலங்கா அரச சட்டத்துறை

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் கருணா குழுவினர் உள்ளடங்கப்பட மாட்டார்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு அரச சட்டத்துறை தெரிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட போது துணை இராணுவக் குழுவினராக கருணா இல்லை என்றும் அரச சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு அரசாங்கம் இணங்கமுடியாது என்றும் கருணா குழுவினரை நிராயுதபாணிகளாக்குமாறு கோரும் யுத்த நிறுத்த சரத்து 1.8 பிரிவின் கீழ் கருணா குழுவினரை கோர முடியாது என்றும் சட்டத்துறையினர் கூறி உள்ளனர்.

ஜெனீவா பேச்சுவார்த்தைகளின் போது துணை இராணுவக் குழுவினரது ஆயுதக்களைவு கோரிக்கையை விடுதலைப் புலிகள் முன்வைக்கும் போது அதற்குப் பதிலளிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் இந்தக் கருத்தை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்கள் என்றே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படுவதால் அனைத்து துணை இராணுவக் குழுக்களுமே அந்த சரத்துக்கு உடன்பட்டவர்கள் என்றும் ஆயுதக் குழுக்களை களைவதை விட்டு அரசாங்கம் துணை ஆயுதக் குழுக்களை உருவாக்குவதிலேயே தீவிரம் காட்டுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கருணா குழு தொடர்பாக அரசாங்கம் இத்தகைய கருத்தை முன்வைத்தால் விடுதலைப் புலிகள் உரிய பதில் கொடுப்பார்கள் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

லங்கா சிறீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுத கலாச்சாரத்தில் எவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்குதுகள் இந்த மொட்டையள் சாந்தி சமாதானம் என்று சொல்லிக் கொண்டு புத்தரின் பாதையில் போதனையை செய்ய வந்திட்டு. :evil: :evil: ............. இப்பிடியே போனா நாடு விளங்கிடும்

அது மொட்டையோ விக்கோ தெரியாது கவனமாப் பாருங்கோ.

அது மொட்டையோ விக்கோ தெரியாது கவனமாப் பாருங்கோ.

உண்மயான அடக்கு முறை இந்த மொட்டைகளிடம் இருந்து தான் தொடங்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.