Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டமன்றத்தீர்மானம்,டில்லியின் காங்கிரசுக்கு கழிவறை காகிதமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tamil%20nadu%20arasu.jpg

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு பிறகு எம் தமிழ் மக்கள் உண்மையை உணர்ந்துள்ளனர் மற்றும்,மிச்சம் இருக்கும் மக்களையாவது காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற உந்துதலில் தாயக தமிழ்நாட்டில் இனத்திற்காக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.ஆளும் அம்மாவின் அ.தி.மு.க.அரசு தமிழ் மக்களின் உணர்வுகளை உள்வாங்கி செயல்ப்படுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க முத்தான மூன்று தீர்மானங்களை நிறைவேற்றி உலகத்தமிழர்களின் தாயகமாம் தமிழ்நாட்டின் பெருமையினை தக்கவைத்துள்ளது.முதல் இரண்டுதீர்மானங்கள், ஸ்ரீலங்கா அரசின் மீதுள்ள போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்கு சர்வதேசத்தை வலியுறுத்துமாறு,டில்லி அரசை வலியுறுத்தியது.இரண்டாவது தீர்மானம்,ஸ்ரீலங்கா மீது பொருளாதாரத்தடையை விதிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

டில்லி அரசு தமிழ்நாட்டின் பிரச்சினையானாலும் சரி தமிழனின் பிரச்சினையானாலும் சரி எப்போதுமே பாராமுகமாக தான் இருந்து வந்துள்ளது.இது இங்குள்ள தமிழர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.இருந்தாலும் தமிழர்கள் இந்தியாவில் பிறந்த காரணத்தால் இறையாண்மை என்று இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் காங்கிரசுக்காரனின் வசனத்தை நம்பியோ,அல்லது தன்னுடைய வயிறு நிறைந்தால் போதும் என்றோ,அல்லது இருக்குதோ இல்லையோ தெரியாது சாமி மேல பாரத்தை போட்டு விட்டு கண்டுகொள்ளாமல் இருப்பதால்,தமிழனின் இந்த தூக்க நிலையினை பயன்படுத்தி காங்கிரசின் தலைமை குடும்பம் வழிபாட்டுக்கு உரியதாக வளர்ந்து போனது.

இங்கே தமிழ்நாட்டில் இருந்து டில்லி செல்லும் காங்கிரசு தலைவர்களெல்லாம் தலைமை குடும்பத்தின் அல்லக்கைகளாக இருப்பதால்,தமிழன் என்றாலே கேவலமாக பார்க்கும் மனநிலைக்கு காங்கிரஸ் எப்போதோ வந்துவிட்டது.எனவே இந்தியாவின் காங்கிரஸ் காவேரி பிரச்சினையிலும் சரி பாலாறு,முல்லைப்பெரியார்,சோலையார்,அச்சன்கோவில் ஆறுகளின் பிரச்சினையிலும் சரி,எள்ளளவும் தமிழ்நாட்டுக்கு நீதியை வழங்கியது இல்லை.நீரால் மூன்றாம் உலகப்போர் வரும் என்று ஐக்கிய நாடுகளின் சபை சொல்லி இருப்பதையும் கூட காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை.

நெய்வேலியின் நிலக்கரிக்கு கூட 1990 ல் வி.பி சிங் அவர்களின் தேசியமுன்னணியின் ஆட்சியில் தான் வெறும் நான்கு சதவீத ராயல்டி வழங்கப்பட்டது.இந்தியாவின் தேசிய இனங்களை எல்லாம் எப்படி சிதைப்பது என்பதில் மிகவும் கைதேர்ந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள்.இந்தியாவின் இத்தனை ஆண்டுகால சுதந்திரத்தில் 98% காலம் காங்கிரசின் ஆட்சி தான் நடந்துள்ளது இத்தனை ஆண்டுகாலத்தில் இவர்கள் எந்த ஒரு தேசிய பிரச்சினையையும் தீர்த்தது இல்லை,ஒன்று அந்த பிரச்சினை அதுவாகவே தீரும்,அல்லது அப்படியே இருக்கும் அல்லது வளர்ந்து மேலும் வலுப்பட்டு இருக்கும்.ஆனால் அதே நேரம் தவறு என்று தெரிந்தாலும் ஒப்புக்கொள்ளாமல் ஊமைசேட்டை செய்வதில் மிகவும் கெட்டிக்காரன் காங்கிரசுக்காரன்.எப்படி தெரியுமா?தீர்மானம் ஒன்றுக்கு டில்லி காங்கிரஸ் தந்த பதில்,சிங்கள ராணுவத்திற்கு

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் வெலிங்டன்னில் பயிற்சி.சரி தீர்மானம் இரண்டு பொருளாதாரத்தடை வலியுறுத்தியது.தந்த பதில் தெரியுமா?என்பது கோடிக்கு அதிவிரைவுப்படகுகள் சிங்களத்திடம் வர்த்தகம்.

அதன் தலைமை குடும்பத்திற்கு இந்தியாவின் ஆட்சி வேண்டும்,பதவி சுகத்தில் பந்தாவாக வாழவேண்டும்.இதுதான் இந்தியாவின் காங்கிரசின் லட்சணம்,மாநிலங்களில் இருந்து செல்லும் அல்லக்கைகள் எல்லாம் இரண்டாம் கட்டத்தலைவர்களாக மாநிலத்தில் பவனி வருவார்கள்.காங்கிரசில்

கொள்கை என்ற எதுவும் கிடையாது.தலைமைக்கு ஒரே கொள்கை கீழ் மட்டம் எல்லாம் தன்னை வழிபடவேண்டும் என்பது தான்.மாநிலங்களில் கோஷ்டிகள் இல்லாத காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் இல்லை.காரணம் ஒன்றே ஒன்று தான் தொண்டர்கள் ஒற்றுமையானால் அரசியல் படுவார்கள்,அவர்கள் அரசியல்ப்பட்டுவிட்டால் கொள்கை லட்சியம் என்று சிந்தித்து விடுவார்கள் அவர்கள் சிந்தித்து விட்டால்,காங்கிரசின் டில்லி தலைமை குடும்பமும் மாநில தலைமை எடுபிடி அல்லக்கைகளும் அழிந்து போய் விடுவார்கள் என்பது தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறது.

எனவே கட்சியை கோஷ்டிகளாக பிரித்து வைத்திருக்கவேண்டும்,மக்களை மதங்களாக,மொழிகளாக,ஜாதிகளாக,பிரித்து வைத்திருக்கவேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிகண்டு வருகின்றனர்.ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.நாடே ரெண்டுபட்டால் காங்கிரசுக்கு கொண்டாட்டம்.இப்போது மூன்றாவது தீர்மானம் மூன்று தமிழர்களை காப்பாற்றக்கோரி நிறைவேற்றி இருக்கிறது.இந்தியாவின் மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் பத்து சதவீதத்தை கொண்டதும்,ஆங்கிலேயனை தவிர எந்த ஒரு அந்நியனுக்கும் நீண்டகால ஆளுகைக்கு முழுவதும் ஆளப்படாத பிரதேசத்தை கொண்ட தமிழ்நாடு,அத்தகைய பெருமை படைத்த தமிழ்நாட்டின் சட்டப்பேரவை,இது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் தீர்மானம்,இதையும் இழிவு படுத்தும் விதமாக சல்மான் குர்ஷித் என்ற அமைச்சர் தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் தீர்மானம் மத்திய அரசை கட்டுப்படுத்தாது என்கிறார்,காஷ்மீர் முதல் அமைச்சர் ஓமர் அப்துல்லா இன்னொரு தூக்கு

தண்டனை கைதியை முன்னிறுத்தி பேசுகிறார்,நண்பர்களே பேச சொல்லி சொல்லி கொடுத்தவன காங்கிரசுக்காரன்.

தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் தீர்மானங்கள் டில்லியை கட்டுப்படுத்தாது ஆனால் டில்லி தமிழ்நாட்டை கட்டுப்படுத்தும்?இது நிகழ் காலத்துக்கு வேண்டுமானால் ஒத்து வரும்,உன்னிப்பாக பார்த்துக்கொடிருக்கிறோம்.நாங்கள் கையை கட்டிக்கொண்டு சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம்.பரிசீலித்துக்கொண்டிருக்கிறோம் என்பதெல்லாம் இது நாள் வரைக்கும் தமிழ்,தமிழ்நாடு,தமிழன்,ஈழத்து தமிழன் பிரச்சினையில் காங்கிரசு சொன்னது.ஆனால் இதே நிலை தொடர்ந்தால் இதே வசனம் தமிழ் இனத்தில் இருக்கும் இளைஞர்களை செயல்களில் வெளிப்படும்.எங்கள் தலைவர் தமிழீழ தேசியத்தலைவர்,உலகத்தமிழர்களின் தலைவர் பிரபாகரன் காட்டியவழிகளில் மிகவும் சிறந்தவழி எங்கள் இளைஞர்களுக்கு இனிமேல் பேசுவது வாயாக இருக்காது செயல்களாகத்தான் இருக்கும்.எதிர் வரும் பன்னிரெண்டாம் தேதி ஜெனிவாவில் தொடங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் நீதியின் பக்கம் குரல் கொடுத்து இந்தியாவின் தேசியத்தை இந்தியாவில் காப்பாற்றுவதற்கு உறுதியாக காங்கிரஸ் செயற்படும் என்று நம்பலாமா?

தமிழகத்திலிருந்து ஈழதேசம் இணையதளத்திற்காக மூர்த்தி

http://www.eeladhesa...ndex.php?option

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.