Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் பணயமாக பிடித்த தமது சிப்பாய்களை வீடுடைத்து மீட்டுச் சென்றனர் படையினர்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10 செப்டம்பர் 2011

இளைஞர்களை கைது செய்ய முயன்ற படையினரை சுற்றிவளைத்தனர் மக்கள்:-குளோபல் தமிழச் செய்தியாளர்:-

GTN%20Breaking%20News_CI.JPG

வலிகாமம் மேற்குப் பகுதியில் கிறிஸ் மனிதர்கள் எனப்படுவோரின்; நடமாட்டம் தொடர்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இன்றிரவு கிறிஸ் மனிதனைப் பிடிக்கச் சென்ற பொதுமக்களை தடுக்க முற்பட்டதாக கூறப்படும் இரண்டு இராணுவத்தினரை மக்கள் பணயமாக பிடித்து அடைத்து வைத்திருந்துள்ளனர்.இதையடுத்து நீண்ட இழுபறிகளின் பின்னர் பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நிலவிய முறுகல்களின் மத்தியில் மேலதிகமாக குவிக்கப்பட்ட படையினர் பணயமாக பிடிக்கப்பட்ட படையினரை மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் வலிகாமம் மேற்கு தொல்புரம் பாணாவெட்டிப் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்ட வேளை அப்பகுதியில் இரு மர்மமனிதர்கள் நடமாடியுள்ளனர்.அவர்களைக்கண்ட பொது மக்கள் சந்தேகத்தில் அவர்களை பிடிப்பதற்காகத் துரத்திச்சென்ற வேளை அவர்கள் தப்பித்துள்ளனர். அதே வேளை அப்பகுதிக்கு உடனடியாக விரைந்து வந்த இராணுவத்தினர் இருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் மர்மமாக நடமாடியுள்ளனர். அத்துடன் திரண்டிருந்த பொதுமக்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.. இதையடுத்து அங்கு குவிந்த பொது மக்கள் இரண்டு இராணுவத்தினரையும் வீடொன்றினுள் வைத்துப் பூட்டியுள்ளனர்.அத்துடன் அவர்களை விடுவிக்கவும் மறுத்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு மேலதிகமாக பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டவர்களைக் மீட்டுக்கொண்டு செல்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த படை அதிகாரிகள் மக்களுடனான வாக்குவாதத்தின் பின்னர் தம்முடன் படையினரை மீட்டு அழைத்துச் சென்றனர். மேலும் இச்சம்பவங்களில் முன்னின்று செயற்பட்டவர்களென கூறி எழுவரை கைது செய்துமுள்ளனர். அவ்வாறு பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க கோரி மக்கள் நள்ளிரவு தாண்டியும் அங்கு குவிந்து நின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளின் பேரில் அங்கு விஜயம் செய்துள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் போராட்டக்காரருடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகளின் படி கைது செய்யப்பட்ட எழுவரும் விடுவிக்கப்பட்டள்ளனர்.இதேவேளை வலிமாமத்தின் அராலி தெற்கு, மேற்கு உள்ளிட்ட சில பகுதிகளிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் தொடர்வதாக செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.தமிழ் தேசிய கூட்டமைப்பின் வலிகாமம் மேற்கு பிரதேசசபை தவிசாளர் வீட்டிற்கும் மர்ம மனிதர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்து உறவுகள் கேட்பது 'இயல்பு வாழ்க்கை' மட்டுமே!

இதை விட மேலதிகமாக எதுவும் கேட்க அவர்களிடம் திராணியில்லை!

அது கூட, அவர்களுக்கு ஏதொ ஒரு விதத்தில் மறுக்கப் படுகின்றது!

எமது கையாலாகாத தலைமைகளை நோவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை!!!

இந்த அவல நிலையில் இருந்து எமது மக்களை நாமும் தான் காப்பாற்றமுடியும். எம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டியது எமது கடமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.