Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் Massachusetts State Houseசில் 'சிறிலங்காவின் கொலைக்களம்' சனல்-4 ஆவணப்படம் திரையிடப்படுகின்றது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் Massachusetts State Houseசில் 'சிறிலங்காவின் கொலைக்களம்' சனல்-4 ஆவணப்படம் திரையிடப்படுகின்றது !

[Wednesday, 2011-09-14 10:43:59]

சிறிலங்கா அரசாங்கத்துக்கு சர்வதேச நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாது, தமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனக்கருவறுப்பின் சாட்சியமாக விளங்கியுள்ள, சிறிலங்காவின் கொலைக்களம் எனும் சனல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படும் அமெரிக்காவின் Massachusetts மாநில ஆட்சியாளர் மாளிகையில் திரையிடப்படுகின்றது.

Amnesty International ஏற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பங்கெடுப்புடன் செப்ரெம்பர் 14 புதன்கிழமை திரையிடப்படவுள்ள இவ்ஆவணப்படம் குறித்தான முன்னறிவிப்பாக மாநிலத்தின் முக்கிய ஊடகங்களில் விவரம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

Massachusetts மாநில ஆட்சியாளர் மாளிகை பிரதிநிதி Jason Lewis அவர்களின் தலைமையில் இடம்பெறும் திரையிடலைத் தொடர்ந்து கருத்துப்பகிர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்துப்பகிர்வில் அமைப்பு பிரதிநிதிகள், நா.த.அரசாங்கப் பிரிதிநிதிகள் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.

நாதம் ஊடகசேவை

USA_chanel4clips_140911_001.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=49726&category=TamilNews&language=tamil

நல்ல முயற்சி!

அமெரிக்காவில் இந்த மாநிலத்தில் முன்பு, எழுபதுகளில் என்று நினைக்கிறேன், தமிழீழத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவின் ஒரு முன்னணி மாநிலமாக இந்த மாநிலம் பார்க்கப்படுகின்றது. இதன் செனட்டரில் ஒருவர், ஜோன் கெரி, அமெரிக்காவின் செனட்டில் பலம் பொருந்தியவர்.

அமெரிக்காவில் இலங்கையின் கொலைக்களம் !

[ உலகத் தமிழ் செய்திகள் ] - [ Sep 15, 2011 23:32:52 GMT ]

சிறிலங்கா அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் 'இலங்கையின் கொலைக்களம்' சனல்-4 ஆவணப்படம் அமெரிக்காவின் Massachusetts மாநில ஆட்சிபீடத்தில் (State House) திரையிடப்பட்டது.

Amnesty International (அனைத்துலக மன்னிப்புச்சபை) ஏற்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளான சுபா சுந்தரலிங்கம் மற்றும் வைத்திய கலாநிதி ஜெராட் ஃபிரான்சிஸ் ஆகியோரது பங்களிப்புடன் இவ்வணப்பட திரையிடல் இடம்பெற்றுள்ளது.

Massachusetts மாநில ஆட்சிபீட உறுப்பினர்கள், உயர்கல்விச் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பல்துறையினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆவணப்பட திரையிடல் தொடர்பிலான முன்னறிவுப்புகள் ஏற்கனவே மாநில ஊடகங்களில் வெளிக்கொணரப்பட்ட நிலையில் இதன்வழி பொதுமக்களும் இத்திரையிடலை காணவந்திருந்தனர்.

Massachusetts ஆட்சிபீட உறுப்பினரான ஜேசன் லூவிஸ் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.

திரையிடலைத் தொடர்ந்து கருத்துரைத்த Massachusetts மாநீல ஆட்சிபீட ஜேசன் லூவிஸ் சிறிலங்கா அரசினால் ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட போர்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையைக் கோரியும் ஐ நா நிபுணர் குழுவின் பரிந்துரையை வலியுறுத்தியும் State Houserpy தீர்மானமொன்றை விரைவில் நிறைவேற்ற வுள்ளதாக தெரிவித்தார்.

ஆவணப்படம் பெரும் தாக்கத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நிலையில் தொடர்ந்து சபையோர் கேள்விகளுக்கு கலாநிதி ஜெராட் ஃபிரான்சிஸ் தமிழர்களுடைய அரசியல் போராட்டத்தின் நியாப்பாடுகளை முன்னிறுத்தி பதிலுரைத்தார்.

இதேவேளை கில்லரி கிளின்ரன் அம்மையாரின் கவனத்துக்கு சமர்பிக்கும் நோக்கில் நீதிகோரும் கையொப்பங்கள் அனைத்துலக மன்னிப்புச்சபையினால் சபையில் வேண்டப்பட்டது.

மூலம்: உலகத் தமிழ் செய்திகள்

பிரசுரித்த நாள்: Sep 15, 2011 23:32:52 GMT

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா & கறுப்பி பகிர்வுக்கு, சொறிலங்காவை கூட்டில் ஏற்ற எல்லோரும் உதவினால் விரைவில் எங்களுக்கு விடிவு கிடைக்கும்

நன்றி அகூதா & கறுப்பி பகிர்வுக்கு, சொறிலங்காவை கூட்டில் ஏற்ற எல்லோரும் உதவினால் விரைவில் எங்களுக்கு விடிவு கிடைக்கும்

உண்மை உடையார். எல்லாம் எமது கைகளிலேயே உள்ளது.

From: SCOTT, Lee <lee.scott.mp@parliament.uk>

Subject: RE: Special Thanks to you for once again you being the instrumental for the Parliamentary debate on Human rights in the Indian Sub-continent (Kashmir & Sri Lanka to be debated) on 15th September @ 3pm.

Dear Xxxxxxx,

I will continue until justice is done and I am going to UN again next week on behalf of Tamil People

Regards

Lee

நன்றி அகுத:

உண்மை உடையார். எல்லாம் எமது கைகளிலேயே உள்ளது.

From: SCOTT, Lee <lee.scott.mp@parliament.uk>

Subject: RE: Special Thanks to you for once again you being the instrumental for the Parliamentary debate on Human rights in the Indian Sub-continent (Kashmir & Sri Lanka to be debated) on 15th September @ 3pm.

Dear Xxxxxxx,

I will continue until justice is done and I am going to UN again next week on behalf of Tamil People

Regards

Lee

அமெரிக்க விவாத தலைப்பு: இந்தியாவிடம் மாட்டி கொண்டுவிட்ட இரண்டு நாடுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.