Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளசை நட்டாற்றில் நழுவ விட்டது சிறிலங்கா அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Douglas%20Devananda.jpg

[ வெள்ளிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2011, 00:08 GMT ] [ கார்வண்ணன் ]

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் குறித்து சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் அது சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, நேற்றுமாலை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கில் துணை ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், ஈபிடிபி பலமான ஆயுதக் குழுவை வைத்துள்ளதாகவும் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் நேற்றுமுன்தினம் கூறியிருந்தார்.

அதற்கு, பிளேக் உள்நோக்கத்துடன் கருத்து வெளியிடுவதாகவும், அவர் பொய்த் தகவல்களை பணம் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டியிருந்தார்.

வடக்கில் சிறிலங்கா இராணுவம், காவல்துறை தவிர்ந்த வேறேவரிடமும் ஆயுதங்கள் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

டக்ளஸ் தேவாந்தாவின் இந்தக் கருத்து குறித்து நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, “அது அவருடைய தனிப்பட்ட கருத்து“ என்றும், “அது சிறிலங்கா அரசின் கருத்தல்ல“ என்று கூறியுள்ளார்.

வடக்கில் துணை ஆயுதக்குழுக்களை அடக்க வேண்டும் என்ற பிளேக்கின் இறுக்கமான கருத்தைக் கூட சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்காததுடன், அதற்கெதிராக டக்ளஸ் தேவானந்தா வெளியிட்ட கருத்தையும் கூட அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinapp...?20110916104690

Edited by தமிழ் அரசு

சிங்கள அரசு பல தடவைகள் இவ்வாறு அமைச்சர்களை ஏவிவிட்டு கருத்துக் கூறவைத்து பின்னர் அக்கருத்து அவர்களின் தனிப்பட்ட கருத்தேயன்றி அரசாங்கத்தின் கருத்தல்ல என்று கூறியிருக்கிறது. இது டக்கிளசை அரசாங்கம் கைவிட்டதாகக் கருத முடியாது. பிளேக் மீதான கோபத்தை சிங்களளவர் டக்கிளஸ் மூலம் வெளியிட்டுள்ளனர். தமிழர்களுக்கான உரிமை கோரும் எண்ணம் உள்ள தமிழர்கள் இருக்கும்வரை டக்கிளஸ் சிங்களவருக்கு வேண்டப்பட்டவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாய் வேஷம் போட்டால் குரைத்துதானே ஆகவேண்டும் :icon_mrgreen:

Edited by தமிழ் அரசு

இதில் புதிதாக ஒன்றும் இல்லை. இந்த ஒட்டுண்ணி எடுத்த பாதை அப்படி. அதாவது சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாக பேசியே ஆகவேண்டும். இது அமெரிக்காவுக்கும் தெரியும் தமிழர்களுக்கும் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.