Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா மீது அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி ஜெனிவாவில் போராட்டம்

Featured Replies

[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 01:56 GMT ] [ ஐரோப்பிய செய்தியாளர் ] geneva_tamil-protest.jpgசிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகம் முன்பாக நேற்று தமிழர்களால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து அனைத்துலக விசாரணைக்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உத்தரவிட வேண்டும் என்று கோரி சுமார் 1000 வரையிலான தமிழர்கள் ஜெனிவாவில் உள்ள ஐ.நா முன்றலில் போராட்டம் நடத்தியதாக உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்ததாக ஏஎவ்பி தகவல் வெளியிட்டுள்ளது.

Geneva%20tamils%20protest.jpg

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்க லண்டனில் இருந்த சென்றிருந்த கந்தையா ராஜமனோகரன் என்பவர் ஏஎவ்பியிடம் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் சுமார் 5,000 தொடக்கம் 10,000 பேர் பங்கேற்பர் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரமான தமிழர் தாயகத்தையே தாம் எதிர்பார்ப்பதாகவும், இந்த விவகாரத்தை ஐ.நா தனது கையில் எடுத்துக் கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்த வடக்கு சுவிற்சர்லாந்தில் உயர்நிலை பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் ஈழத்தமிழரான நிவேதன் நந்தகுமார், போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், அனைத்துலக சமூகம் எதையும் செய்யவில்லை என்று விசனம் வெளியிட்டுள்ளார்.

தமிழர்களான நாம் விடமாட்டோம், சுதந்திரத்துக்காகவும், சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம் என்றும் அவர் கூறியதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20110920104719

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Sep 20, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

சுவிஸ் ஜெனிவாவில் உணர்வுபூர்வமாக எழுச்சி பொங்க இடம்பெற்ற மாபெரும் பொங்கு தமிழ் பேரணி நிகழ்வு!

pongutamil2011-20-2.jpgசுவிற்சர்லாந்து, ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகள் பலவற்றிலும் இருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.

pongutamil2011-20-1.jpgவரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இருந்து பேருந்துகளில் வந்து நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ponku%201.jpg

10ஆயிரம் வரையான மக்கள் இந்நிகழ்வில் மிக எழுச்சி பூர்வமாகக் கலந்துகொண்டதை நேரில் காணமுடிந்தது.

ponku%202.jpgசுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா சபை முன்றலில், ஐரோப்பிய தமிழர்கள் ஒன்று கூடிய மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வு நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் கொட்டிய மழைக்கு மத்தியில் ஜெனிவா தொடரூந்து நிலையத்திலிருந்து ஐ.நா சபை நோக்கி அணிவகுப்பு நிகழ்வுடன் ஆரம்பமாகியது.

ponku%203.jpgபேரணியை வரவேற்று ஐ.நா. முன்றிலில் இருந்து பிரான்ஸ் தமிழ்ச்சோலை சோதியா கலைக்கல்லூரி மாணவர்களின் இன்னியம் நிகழ்வு மற்றும் தேசிய அணிநடை நிகழ்வுகள் இ;டம்பெற்றன. இது அனைவரையும் கவர்ந்தது.

ponku%204.jpgபிற்பகல் 3.00 மணியளவில் ஜெனீவா ஐ.நா சபை முன்றலை வந்தடைந்த மக்கள் பெருவெள்ளம், மேடையின் முன் ஒன்றுதிரண்டது.

ponku%205.jpgதமிழீழ தேசிய கொடியேற்றல் நிகழ்வு, ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகள் என்பன அடுத்ததாக இடம்பெற்றன.

தொடர்ந்து சிறீலங்கா இறுதி யுத்தத்தை நிறுத்தக்கோரி, ஐ.நா முன்றலில் தன்னை தீயுடன் ஆகுதியாக்கிக்கொண்ட ஈகை பேரொளி முருகதாசன் உட்பட, தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்தோரின் ஈகைச்சுடரொளி ஏற்றல் வைபவம் அடுத்து இடம்பெற்றது.

ponku%206.jpgஇதில் முருகதாசனின் தந்தை உட்பட ஈகிகளின் உறவினர்கள் கலந்து கொண்டு அவர்களின் திரு உருவப்படங்களுக்கு ஈகச் சுடர் ஒளி ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

ponku%207.jpgதொடர்ந்து பல நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், சகோதர இனப் பிரமுகர்கள் பொங்குதமிழ் நிகழ்வின் நோக்கம் பற்றியும் தமிழ் மக்களுக்கு தமது ஆதரவு குறித்தும் தமிழிலும் ஏனைய மொழிகளிலும் உரைநிகழ்த்தினர். இதற்கு தமிழில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டது.

ponku%208.jpgதொடர்ந்து ஜேர்மன் மாணவர்களின் எழுச்சி நடனம் இடம்பெற்றது. இது அனைவரையும் உணர்வுடன் எழுந்து நடனம் ஆடவைத்தது.

ponku%209.jpgதொடர்ந்து பொங்குதமிழ் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக 'வெல்வது உறுதி" என்னும் குறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.

ponku%2010.jpgகலந்து கொண்ட மக்கள் அந்த குறுவட்டை வாங்குவதற்கு முண்டியடித்தமையையும் காணமுடிந்தது.

தொடர்ந்து சிறப்புரை இடம்பெற்றது. சிறப்புரையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார்.

ponku%2011.jpgசிறப்புரையைத் தொடர்ந்து பொங்கு தமிழ் 2011 இற்கான பொங்குதமிழ் பிரகடனம் வெளியிட்டுவைக்கப்பட்டது.

தொடர்ந்து பொங்குதமிழ் நிகழ்விற்கான நல்வாய்ப்புச் சீட்டிழுப்புக்கான குலுக்கல் இடம்பெற்றது.

அடுத்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ponku%2012.jpgஇறுதியாக சுவிஸ் தமிழர் இசைக்குழுவினால் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் இசைக்கப்பட்டது. இதன்போது அனைவரும் எழுந்து நின்று தமிழீழத் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நடனம் ஆடியமை அனைவரையும் உணர்ச்சிபொங்கச் செய்தது.

ponku%2013.jpg

http://www.pathivu.com/news/18481/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.