Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்ற இன்னும் பத்தாண்டுகள் தேவை

Featured Replies

[ வியாழக்கிழமை, 22 செப்ரெம்பர் 2011, 06:09 GMT ] [ நித்தியபாரதி ] SRILANKA-WAR-LANDMINES.jpg

சிறிலங்காவின் வடக்கில் உள்ள விவசாய நிலங்கள், காடுகள் மற்றும் கிராமங்களைச் சூழப் புதைக்கப்பட்ட அரை மில்லியனுக்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு போருக்குப் பிந்திய சிறிலங்காவிற்கு இன்னொரு பத்தாண்டு காலம் தேவை என நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவொன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறிலங்காவில் இடம்பெற்று, பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படவும் காயப்படவும் காரணமான உள்நாட்டுப் போரானது தமிழ்ப்புலிகள் சிறிலங்கா இராணுவப் படைகளால் தோற்கடிக்கப்பட்டு மூன்றாவது ஆண்டில் சிறிலங்காவானது உள்ளது.

யுத்தத்தின் போது தமது இடங்களை விட்டுத் தப்பியோடிய மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமங்களில் தமக்கான வாழ்வைக் கட்டியெழுப்ப முற்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போதும் கூட இந்த மக்கள் நிலக்கண்ணி வெடிகள், நிலத்தில் விழுந்து வெடிக்காதுள்ள குண்டுகள், ஏவுகணைகள், கைக்குண்டுகள் போன்றவற்றால் அச்சமடைகின்றனர்.

SRILANKA-WAR-LANDMINES.JPG

தற்போதைய நிலையில் இன்னமும் அரை மில்லியன் வரையான கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக, 2002 இலிருந்து 60,000 வரையிலான நிலக்கண்ணிவெடிகளை அகற்றியுள்ள நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிக்கான சுவிஸ் நிறுவனத்தின் [the Swiss Foundation for Mine Action -FSD] சிறிலங்காவிற்கான வதிவிடப் பிரதிநிதி நைகல் றொபின்சன் [Nigel Robinson] தெரிவித்துள்ளார்.

"ஆகவே தற்போதுள்ள வளங்கள் தொடர்ந்தும் பேணப்படுமிடத்து, சிறிலங்காவில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுவதற்கு இன்னமும் 10 ஆண்டுகள் தேவை" எனவும் சிறிலங்காவின் வடமேற்கு மாவட்டமான மன்னாரில் நிலக்கண்ணிவெடி அகற்றும் தளத்திலிருந்து நேர்காணலை வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வேறு சில சிறப்புக் குழுக்களின் உதவியுடன் சுவிஸ் நாட்டின் நிலக்கண்ணிவெடி அகற்றும் அமைப்பின் கீழ் தற்போது 750 கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகாலப் போரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நிலக்கண்ணி வெடிகள் யுத்த வலயங்களில் புதைக்கப்பட்டதாக சில அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், உண்மையில் மொத்தம் எத்தனை நிலக்கண்ணிவெடிகள் மற்றும் ஏனைய வெடிபொருட்கள் என்பன பயனபடுத்தப்பட்டன என்பது தொடர்பாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் கிடைக்கவில்லை.

நிலக்கண்ணிவெடியைத் தடைசெய்யும் சாசனத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திடாத சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழ்ப் புலிகள் ஆகிய இருதரப்பினரும் கண்ணிவெடிகளை அதிகளவில் பயன்படுத்தியுள்ளதாக கண்ணிவெடி மற்றும் கொத்துக் குண்டுகளை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தயாரிப்பான P4 MK1 கண்ணிவெடிகளை சிறிலங்கா இராணுவத்தினர் தமது நிலைகளில் அதிகம் விதைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தமிழ்ப் புலிகள் யுத்தம் தீவிரமாக இடம்பெற்ற பகுதிகளிலும், இராணுவத்தினர் முன்னேறி வந்த பாதைகளில் மிகவும் ஆபத்தை விளைவிக்கின்ற நிலப்பொறிகளை விதைத்துள்ளனர்.

உண்மையில் சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடிகள் மிகச்செறிவாக விதைக்கப்பட்ட போதிலும் நல்லவேளையாக அதன் தாக்கம் அல்லது இழப்பு என்பது ஒப்பீட்டளவில் மிகக்குறைவாகவே உள்ளன.

நிலக்கண்ணிவெடிகளால் 2008 ல் காயமடைந்த மற்றும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக இருந்ததாகவும், பின்னர் இதனுடன் ஒப்பிடும்போது இதனால் ஏற்பட்ட இழப்பானது 2009 ல் 38 ஆக இருந்ததாகவும் கண்ணிவெடி மற்றும் கொத்துக் குண்டுகளை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

"நிலக்கண்ணிவெடி வெடிப்பதால் ஆண்டொன்றிற்கு தலா 900 பேர்வரை இறக்கும் ஆப்கானிஸ்தான் போன்ற சில உலக நாடுகுளுடன் ஒப்பிடும்போது சிறிலங்காவில் ஏற்பட்ட இழப்பானது மிகக் குறைவானதாகும். சிறிலங்காவில் உள்ள மக்கள் தமது விவசாய நிலங்களைத் துப்பரவு செய்து குப்பைகளை எரித்தல் போன்ற உயர் ஆபத்துமிக்க செயற்பாடுகளில் ஈடுபடுவதாலேயே இவ்வாறான இழப்புக்கள் கூடுதலாக எற்படுகின்றது" என றொபின்சன் தெரிவித்துள்ளார்.

நிலக்கண்ணிவெடிகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் புலிகளால் சொந்தமாகத் தயாரிக்கப்படும் கண்ணிவெடிகளால் ஏற்படும் ஆபத்து குறைவாக இருத்தல் போன்றவற்றாலேயே இந்துசமுத்திரத்தில் அமைந்துள்ள சிறிலங்காத் தீவில் நிலக்கண்ணிவெடியால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக உள்ளதாகவும் றொபின்சன் மேலும் தெரிவித்தார்.

"தற்போது மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிவருகின்றனர். இவர்கள் தமது பயிர் செய் நிலங்களில் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட்டு அதன் மூலம் தமது குடும்பத்தவர்களைப் பராமரிப்பதற்கான வருவாயைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். இவர்கள் தமது விவசாய செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடுவதில் நிலக்கண்ணிவெடியானது தடையாக உள்ளது" எனவும் அவர் தனது நேர்காணலின் போது குறிப்பிட்டார்.

செய்தி வழிமூலம்: Reuters

http://www.puthinappalakai.com/view.php?20110922104734

பண மாடு (Cash cow)

உண்மையாக அகற்றும் இதய சுத்தியும் இல்லை மக்களின் பால் அன்பும் இல்லை. இதை வைத்து சர்வதேசத்திடம் பணம் பறிப்பதே இலக்கு.

பயங்கரவாத நாட்டில் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்!

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.