Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒளியை விஞ்சிய வேகத்தில் பயணம்

Featured Replies

ஒளியை விஞ்சிய வேகத்தில் பயணம்: வியப்பில் விஞ்ஞானிகள்

ஒளி பயணிக்கும் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் அணுக்களிலும் சிறிய துகள்கள் பயணிப்பதைத் தங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிக முக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்பு அமையும்.

தங்களது பரிசோதனை தந்துள்ள இந்த முடிவு சரிதானா என்பதை மற்றவர்களும் ஆராய்ச்சிகளை நடத்தி உறுதிசெய்ய வேண்டும் அல்லது தங்களது பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் விரும்புகின்றனர்.

ஒளியின் வேகமே அதிகபட்ச வேகம்

ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வினாடிக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்கிறது.

பிரபஞ்சத்தில் எந்த ஒரு வஸ்தும் இதனை விட வேகமாக பயணிக்க முடியாது என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த விசேட சார்புக் கொள்கையில் தெரிவிக்கும் முக்கிய விதியாகும்.

இதுவரை நடந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான பரிசோதனைகளில் எதிலுமே ஒளியை விட அதிக வேகத்தில் ஒரு வஸ்து பயணித்தது என்ற முடிவு வந்ததே கிடையாது.

பரிசோதனை

ஆனால் தற்போது சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து சுமார் 732 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தாலிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றுக்கு அணுவிலும் சிறிய வஸ்துக்களான நியூட்ரினோஸ்க கற்றை ஒன்றை அனுப்பி அது பயணித்த நேரத்தை அளந்தபோது ஒளியின் வேகத்தை விட சற்று குறைவான நேரத்திலேயே நியூட்ரினோஸ் பயணித்திருப்பதை முடிவுகள் காட்டின.

தாங்கள் அளந்தது சரிதானா என்பதை உறுதிசெய்வதற்காக இவர்கள் 15 ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் செய்து பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் அத்தனை முறையிலும் இந்த வஸ்து ஒளியை விட வேகமாகப் பயணிப்பதாகவே முடிவுகள் காட்டியிருந்தன.

தாங்கள் கண்டறிந்தது நிஜம்தானா என்று இவர்களால் இன்னும் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

ஆராய்ச்சியில் பிழை கண்டுபிடிக்க கோரிக்கை

ஆகவே இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை பொதுமன்றத்தில் முன்வைத்து, தாங்கள் எந்த இடத்திலாவது பிழை விட்டிருக்கிறோமா என்பதை பிற விஞ்ஞானிகள் கண்டறிந்து சுட்டிக்காட்ட வேண்டும் என இவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போதைய பரிசோதனையின் முடிவுகளை இனிமேல் செய்யப்படும் ஆராய்ச்சிகளும் உறுதிசெய்யுமானால், நமது பொதீக அறிவை என்றென்றும் மாற்றிய ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

http://www.bbc.co.uk/tamil/science/2011/09/110923_lightspeedbroken.shtml

  • தொடங்கியவர்

நம்மில் பலரை, இந்த உலகிலேயே மிகப் பிரபலமான அறிவியல் சமன்பாடு எதுவென்றுக் கேட்டால், எல்லோரும் தயக்கமில்லாமல் சொல்லக்கூடிய பதில் " E = mc2 " என்பதாகத்தான் இருக்கும்!

அதைக் கண்டுப்பிடித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எனும் மாமேதை என்பதும் எல்லோருக்கும் தெரியும். இந்த மூன்றே எழுத்துக்களைக் கொண்ட சமன்பாடு, சூரியன் பிரகாசிப்பதையும், நட்சத்திரங்கள் ஜோலிப்பதையும், இந்த மகா பிரபஞ்சத்தின் ரகசியங்களை விளக்கும் திறன் கொண்டது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்! இந்த சேவையை மீதும் செய்யவில்லை இந்த சமன்பாடு....விரும்பியோ, விரும்பாமலோ, ஒரே அணுகுண்டால் லட்சக்கணக்கான மனிதஉயிர்கள் நாசமாவதற்க்கும் பாதை வகுத்தது.

இந்த மகா சமன்பாட்டில் உள்ள ஒரே எண் '2'. அதுவும் நேர் அர்த்தத்தில் இலை. 'அடுக்கு' என்ற முறையில் உள்ளது. ஒளியின் வேகம் என்ற ஒரு எண் அதே எண்ணால் பெருக்கப்படவேண்டும். 670 மில்லியன் X 670 மில்லியன் ( மணிக்கு 670 மில்லியன் மைல்கள் ). அந்த தொகை எவ்வளவு என்றுத் தெரியுமா? 448,900,000,000,000,000. சரி இருக்கட்டும். ஏன் அந்த 2 அடுக்கு?(Square?).

'c' என்ற ஒளியின் வேகம் ஒரு மாறா எண் என்பதை முதலில் புரிந்துக் கொண்டவர்களில் ஐன்ஸ்டைன் முதலாமவர். மிக நுட்பமாக கவனியுங்கள்.... நாம் என்னதான் வேகமாக சென்றாலும், நம்மிலிருந்து புறப்படும் ஒளி, மணிக்கு 670 மில்லியன் மைல் வேகத்தில் நம்மை விட்டுப் போய்விடும்! (ஆகவே ஒளியின் வேகத்தில் யாரும் பிரயாணிக்கவே முடியாது!) இங்கேதான் மேக்ஸ்வேல்லின் ஐடியாவை பிடித்துக்கொண்டார் ஐன்ஸ்டைன். 'c' என்பது மாற எண் என்றால், ஒளியின் வேகத்தை அடையும் ஒருப் பொருளின் நிறை என்னவாகும்? அது கண்டிப்பாக அதிகரிக்கும்! இதிலிருந்து அவர் கூறுவது நிறையும், ஆற்றலும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. ஏன்...? அவை இரண்டும் ஒன்றே..! ஆற்றல்தான் நிறை, நிறைதான் ஆற்றல்! c² இன் மதிப்பு மிக மிக மிக அதிகமாக இருப்பதால், ஒரு சின்ன கடுகளவு நிறைக்கொண்ட பொருளுக்கு அளவில்லாத ஆற்றல் இருப்பது நிச்சயம்! இந்த சமன்பாட்டின் சரியான புரிதல் நட்சத்திரங்களின் இதயத்தில் என்ன நடக்கிறது என்பதையும், நாமெல்லாம் அந்த நட்சத்திர துகள்களால் உருவானவர்கள் என்பதையும், சூரியனிலிருந்து நமக்குக் கிடைக்கும் எல்லா ஆற்றலும் E=mc² என்பது புரிம்துவிடும்!

http://prabanjapriyan.blogspot.com/2010/06/emc.html

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா இணைப்பிற்கு, இனி ஒளியின் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய மாதிரி கண்டு பிடிப்பார்கள் போல்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக் காலமாக சக்திச் சொட்டுக்கள் (Photons) மற்றும் உப அணு துணிக்கைகள் (sub-atomic particles) சார்ந்த சில பழைய பெளதீகக் கொள்கைகள்... அல்லாடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்.. இதுவும் அமைகிறது.

பழைய விஞ்ஞானக் கொள்கைகள்.. அதிநவீன.. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப.. பிழையென நிறுவப்படுவதும்.. சரியென நிறுவப்படுவதும் நடந்து வருகின்ற ஒரு வழமையும் கூட.

இந்தப் பிரபஞ்சமே அறிவியல் சார்ந்த ஒன்றாக இருக்கின்ற போதும்.. மனித அறிவியல் அறிவு அதனை விளங்கிக் கொள்ள இன்னும் பூரணத்துவம் அடையவில்லை.. என்பதற்கு இது சான்று. அறிவியலில் நாம் கடந்து செல்ல வேண்டிய பாதை மிக மிக மிக மிக மிக............................ நீண்டது..!

தமிழில் அமைந்த இந்த தகவல் பதிவிற்கு நன்றி. ஏலவே இவ்வாறான பல ஆக்கங்களை ஆங்கிலத்தில் படித்துள்ளேன். :icon_idea:

Time travel: Light speed results cast fresh doubts

Physicists have confirmed the ultimate speed limit for the packets of light called photons - making time travel even less likely than thought.

The speed of light in vacuum is the Universe's ultimate speed limit, but experiments in recent years suggested that single photons might beat it.

http://www.bbc.co.uk...onment-14289114

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.