Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா, அமெரிக்காவின் ஊடுருவல் தாக்குதல்களும் சீனாவின் இணையத்தள திருட்டுகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன இணையத் தளங்களை இலக்குவைத்து அமெரிக்காவும் இந்தியாவும் கடந்த வருடம் ஆயிரக்கணக்கான சைபர் தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. சீன அரசினதும் ஏனைய அமைப்புகளினதும் இணையத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட 4 இலட்சத்து 93 ஆயிரம் சைபர் தாக்குதலில் அரைப்பங்கிற்கும் அதிகமானவை குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்டவையாகுமென சீனாவில் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ட்ரோஜன் மென்பொருள் மூலமான தாக்குதல்களாக இருப்பதுடன் 14.7 வீதமான கணினிஐ.பி.முகவரிகள் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகவும் 8 வீதமான ஐ.பி. முகவரிகள் இந்தியாவைச் சேர்ந்தவையாகவும் உள்ளன. அரசின் 4635 இணையத்தளங்கள் உள்ளிட்ட35,000 இணையப் பக்கங்கள் கடந்த வருடம் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை அதற்கு முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 67.6 வீதம் சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. தேசிய கணினி வலையமைப்பின் அவசர உதவிக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சீன அரசின் ஆரம்ப கணினி பாதுகாப்பு அமைப்பே இதுவாகும். மக் கபே பாதுகாப்பு அமைப்பின் சைபர் தாக்குதல்கள் குறித்தே உலகளாவிய விசாரணை அறிக்கை வெளியாகியுள்ள நிலையிலேயே சீனாவும் அது

குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, உலகம் பூராகவும் கடந்த 5 வருடங்களில் நாடுகள், அமைப்புகள் சிலவற்றின் 72 இணையக் கட்டமைப்புக்கள் சைபர் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றின் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக இணைய மற்றும் கணினி பாதுகாப்பு நிறுவனமான மக்கபே தெரிவித்துள்ளது. இணையக் கட்டமைப்புகளின் மீதான இத்தாக்குதல்களின் பின்னணியில் ஒரு நாட்டின் அரசாங்கம் செயற்படுவதாகவும் அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

2006ம் ஆண்டிலிருந்து நடந்துவரும் இந்த சைபர் தாக்குதல் சம்பவங்களில் அந்நாட்டின் ஒற்றர்களே ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தாக்குதல்களின் பின்னால் உள்ள நாடு சீனா என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவும் அவ்வாறாக இருக்க வாய்ப்புக்கள் உள்ள போதிலும் சீனாவாக இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள்கூறுகின்றனர்.

ஐ.நா. சபை, சர்வதேச ஒலிம்பிக் ஆணைக்குழு உட்பட பல அமைப்புகள் மற்றும் அமெரிக்கா, தாய்வான, இந்தியா தென்கொரியா, வியட்நாம், கனடா ஆகிய நாடுகளினதும் இணையக்கட்டமைப்பு இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. சீனாவின் பீஜிங் மற்றும் ஷங்காய் நகரங்களில் இருந்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இது தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டிருந்த இன்னொரு நிறுவனமான டெல் செகுயர் வேர்க்ஸ் அறிவித்துள்ளது.

இத்தாக்குதல்கள் குறித்த அமைப்பை மட்டும் மையப்படுத்தி நடத்தப்படவில்லையெனவும் பல்வேறு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக 2008ம் ஆண்டு காலப்பகுதியில் சர்வதேச ஒலிம்பிக் ஆணைக்குழு மற்றும் தேசிய ஒலிம்பிக் ஆணைக்குழுக்களின் இணையத்தளங்கள் சைபர் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கபே தெரிவித்துள்ளது. எந்த நாடு என வெளிப்படையாக மக்கபே அறிவிக்காத போதிலும் ஒலிம்பிக்குடன் தொடர்புடைய சைபர் தாக்குதல் என சுட்டிக் காட்டியுள்ளது. 2008ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பீஜிங்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இத்தகைய தாக்குதல் ‘பிஸ்ஸிங் (phishing)` என அழைக்கப்படுகின்றது. பொதுவாக இவை மின்னஞ்சல்கள் மூலமே நடத்தப்படுகின்றது. வைரஸ்களைக் கொண்ட மின்னஞ்சல்கள் இலத்திரனியல் முகவரிக்கு வரும். அவற்றைத் திறந்து படிக்கும் வேளையில், அவர்களுக்கே தெரியாமல் அவை கணினியில் வேறு சில பொருட்களை தரவிறக்கம் செய்துவிடும். இதனைத் தொடர்ந்து சைபர் தாக்குதல் திருடர்கள் தமக்கு தேவையான தகவல்களை இலகுவாகத் திருடிக்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள் என்று கூறப்படுகின்றது.

நன்றி - ஈழமுரசு-96

http://www.tamilkath...ll_article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.