Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின்போது சிறிலங்கா அரசிற்கு சார்பாக மெளனம் காத்த சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மீதான இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் தங்கியிருந்த கத்தோலிக்க மதகுரு ஒருவர், பொதுமக்கள் யுத்தத்திற்குள் அகப்பட்டுக் கொண்டது தொடர்பாக சிறிலங்காவில் உள்ள திருச்சபையானது எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடாது அமைதி காத்ததைக் கண்டித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசாங்கப் படைகளின் யுத்த மூலோபாயம் தொடர்பாக சில மேற்குலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் தமது அதிருப்தியை வெளியிட்ட போதிலும் கூட சிறிலங்காவிலிருந்த திருச்சபையைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்கள் சிறிலங்கா அரசாங்கப் படைகளின் செயற்பாடுகளைக் கண்டித்து எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை என அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரால் அவ்வேளையில் போப்பாண்டவருக்கு அனுப்பப்பட்ட திறந்த மடல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கடந்த இரவில் 3318 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4000 வரையானவர்கள் காயமடைந்துள்ளனர்" என மே10,2009 அன்று ஜோசப் பிரான்சிஸ் அடிகளாரால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பி.பி.சி சிங்கள சேவையான சந்தேசியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சிறிலங்கா அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயங்கள் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் மீது ஆட்டிலறி, மோட்டார், பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள், கொத்துக் குண்டுகள், கனரக ஆயுதங்கள் எனப் பல்வேறுபட்ட தாக்குதல்களை நடாத்திவருகின்றது" என போப்பாண்டவருக்கு ஜோசப் அடிகளாரால் எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

365,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்து வருவதாகவும், யாழ்.புனித சம்பத்தரிசியார் கல்லூரியின் [st.Patricks College] முன்னாள் அதிபராகக் கடமையாற்றிய ஜோசப் அடிகளார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தம் தொடர்பாக சிறிலங்கா திருச்சபையானது தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விவேகம் மற்றும் துணிச்சல் என்பன இல்லாதுள்ளமை கவலையளிப்பதாகும். இக்கடிதத்தை நான் அனுப்புவதன் மூலம் சிறிலங்கா அரசாங்கமானது என்னைக் கொல்லலாம் அல்லது திருச்சபையானது எனக்கு தண்டனை வழங்கலாம்" எனவும் ஜோசப் அடிகளார் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரச படைகளால் ஜோசப் அடிகளார் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர் காணாமற்போயுள்ளதாகவும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஆயரான கிங்சிலி சுவாம்பிள்ளை சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் பின்னர் தெரிவித்துள்ளார்.

மே 2009 ல் போர் வலயத்திலிருந்து வெளியேறியவர்களில் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரும் உள்ளடங்கியிருந்ததாகவும், ஓமந்தை சோதனைச் சாவடியின் ஊடாக இவர் கடந்த போது இவரைப் படையினர் விசாரணைக்காகக் கொண்டு சென்றதாக இவருடன் பயணித்த பொதுமக்கள் சிலர் தெரிவித்ததாக ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.

"அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்ததென்பது தெரியவில்லை. அதன்பின்னர் யாருமே அவரைக் காணவில்லை" எனவும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என அமெரிக்காவை பேராயர் மல்கம் ரஞ்சித் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதர் பற்றீசியா புற்றேனிஸ் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக அண்மையில் வெளிவந்த விக்கிலீக்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கையானது சிறிலங்கா அரசாங்கம் கடினப் போக்கான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு வழிகோலும் என பேராயர் அமெரிக்கத் தூதரிடம் வலியுறுதிக் கூறியதாகவும் இக்கருத்தை அமெரிக்கத் தூதர் ஏற்றுக்கொண்டதாகவும் விக்கிலீக்சில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கொழும்பிலுள்ள பேராயரின் செயலகமானது விக்கிலீக்சால் வெளியிடப்பட்ட இத்தகவல் போலியனவை என்றும் ஆதராமற்றவை என்றும் கூறி அதனை நிராகரித்துள்ளது.

பேராயரின் பெயரானது தவறாகப் பயன்படுத்தப்படுவது இது முதற்தடவையல்ல எனவும், விக்கிலீக்சில் குறிப்பிடப்பட்டுள்ள பேராயர் தொடர்பான செய்தியைத் தாம் ஏற்க மறுப்பதாகவும் பேராயரின் செயலகப் பேச்சாளரான வணக்கத்திற்குரிய பெனடிக்ற் ஜோசப், சண்டேலீடரிடம் தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறிருப்பினும், ஜோசப் அடிகளாரால் 2009ம் ஆண்டில் போப்பாண்டவருக்கு அனுப்பப்பட்ட கடிதமானது, சிறிலங்கா திருச்சபை மற்றும் சிறிலங்கா அரசாங்கம் ஆகியவற்றின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

"தமது சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற தமிழ் மக்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உங்களது புனிதமான சேவையை எதிர்பார்த்திருக்கிறார்கள்" என ஜோசப் அடிகளார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா அரசாங்கமானது தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்து அதன் மூலம் இராணுவ வெற்றியை பிரகடனப்படுத்தி ஒரு வாரத்தின் பின்னர் போப்பாண்டவர் பதினாறாவது பெனடிக்ற் அவர்கள் யுத்த வலயத்திலிருந்து வெளியேறிய பொதுமக்களுக்கான வளங்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

யுத்த வலயத்திலிருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாக சிறிலங்கா அரசாங்மானது அறிவிப்புச் செய்ததை அடுத்து வத்திக்கானில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டமொன்றில் உரையாற்றிய போப்பாண்டவர், "ஒரு சில நாட்களுக்கு முன்னர் யுத்த வலயத்தில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக உத்தரவாதம் வழங்கியிருந்த" ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையுடன் தான் இணைந்து கொள்வதாக தெரிவித்திருந்தார்.

http://www.eeladhesam.com/index.php?option

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.