Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

50 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011 14:02 | pdf_button.png printButton.png emailButton.png

50 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தவர்களில் ஒரு தொகுதியினர் சற்று நேரத்துக்கு முன்னர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 50 இலங்கையர்களும் அடங்குவர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை பிரித்தானிய நேரடிப்படி நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாளை அதிகாலை கொழும்பை வந்தடையவுள்ளனர்.

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=9996:50---&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.

A forced removal of failed asylum-seekers to Sri Lanka has been put on hold by a judge after a day of frantic legal appeals. Foreign Affairs Correspondent Jonathan Miller reports.

http://www.channel4.com/news/last-minute-court-order-halts-sri-lankan-deportation

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

50 இலங்கையர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்

29 செப்டம்பர் 2011

நீதிமன்ற உத்தரவு இறுதி நேரத்தில் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் மீளாய்வு செய்யும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பீ.வீ.030 என்ற விமானத்தின் மூலம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் புதன்கிழமை 15.00 மணிக்கு நாடு கடத்தப்படவிருந்ததாக சர்ச்சைக்குரிய செனல்4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள், வெளிநாட்டு கைதிகள் மற்றும் ஏனைய குடிவரவு சட்டங்களை மீறியவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விமானத்தின் மூலம் நாடு கடத்தப்படவிருந்தனர்.

எனினும், இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இறுதி நேரத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களின் சட்டத்தரணிகளினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களில் பலர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மீளவும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாகவும் செனல்4 ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.

புதன்கிழமை மாலை இலங்கை பெண் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக் கூடாது என பிரி;த்தானிய மேன்முறையீட்டு நீதவான் ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிப்பட்ட நபர் ஒருவரின் தரவுகளை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் இது ஐரோப்பிய மற்றும் பிரித்தானிய சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டு விட்டதாக இலங்கை மற்றும் பிரித்தானிய ஊடகங்கள் நேற்று அறிவித்திருந்தன.

குறிப்பாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயமும், இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களமும் நாடு கடத்தல் தகவலை உறுதி செய்திருந்தன.

50 இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைவார்கள் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு நிலையத்தின் பிரதம அதிகாரி சூளானந்த பெரேரா அறிவித்திருந்தார்.

எனினும், இறுதி நேரத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் சட்டத்தரணிகள் பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனுக்களை கருத்திற் கொண்டு நாடு கடத்தும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் நாடு கடத்தப்படுவார்களா அல்லது புகலிடம் வழங்கப்படுமா என்பது பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

50 இலங்கையர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்

28-09-2011 -14:11

50 இலங்கையர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாளைய தினம் நாடு திரும்புவார்கள் என பிரித்தானியாவிற்கான இலங்கை கன்சோல் அதிகாரி சமிந்த குலரட்ன தெரிவித்துள்ளார்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் இதில் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் சுமூக நிலைமை ஏற்பட்டுள்ளதனால் தஞ்சம் வழங்கும் நடவடிக்கைகளை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக குறி;த்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது என பிரித்தானிய அரசாங்கத்திடம், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கையில் சித்திரவதைக்கு ஆளாகக் கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளன.

50 புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

நாடு கடத்தப்படும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்;பை பிரித்தானிய அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியாது என தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாடு திரும்பிய புகலிடக் கோரிக்கையாளர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று குறிப்பிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்ந்தும் சித்திரவதைகளுக்கு ஆளாவதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது குறித்து பிரித்தானிய அரசாங்கம் கவனமாக ஆராய வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு திரும்பும் இலங்கையர்கள் துன்புறுத்தப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையும் அறிவித்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67885/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.