Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தை அணுகுவதே பொருத்தம்!

Featured Replies

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தை அணுகுவதே பொருத்தம்! - சட்டநிபுணர் கருத்து!!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு வெளியில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவகாரமானது இது குறித்த சாதகமான சமிஞ்கையை வெளிப்படுத்துவதாக சர்வதேச குற்றவியல் சட்டநிபுணர் Goran Sluiter தெரிவித்துள்ளதாக நெதர்லாந்து வானொலியின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து இந்த இணையத் தளத்தில் செய்திக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள ஊடகவியலாளரான Richard Walker, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா படைத்தரப்பினருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்குகள் சர்வதேச அரங்கில் புதிய பரிணாமத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இச்செய்திக் கட்டுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதியாகப் பணிபுரியும் சிறிலங்கா படைத்தரப்பின் மேஜர் ஜெனரல் ஒருவருக்கு எதிராக நியூயோர்க்கில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு சிறிலங்கா படைத்தரப்பின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா வன்னிப் போரின் போது பாதுகாப்பு வலயங்கள் எனப் சிறிலங்கா அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளையும், , வைத்தியசாலைகளையும் இலக்கு வைத்து தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதின் ஊடாக பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று சுவிற்சர்லாந்துக்கான சிறிலங்காவின் துணைத் தூதுவராக பணிபுரிந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸூக்கு எதிராகவும் சுவிற்சர்லாந்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர் சுவிற்சர்லாந்திற்கு வருவாரானால், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை தீறல்கள் தொடர்பில் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன்னிறுத்த ஏற்பாடு செய்யப்படும் என சுவிற்சர்லாந்தின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து தமிழர்களுக்கு எதிராக நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.

நெதர்லாந்து குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் விடுதலைப் புலிகள் அமைப்பானது ஒரு தீவிரவாத அமைப்பாக உருவாகியமைக்கான காரணங்கள் குறித்துஇவ்வழக்கின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு நாட்டில் நடைமுறையிலுள்ள நீதிக்கட்டமைப்புக்கள் மிகவும் வலுவாக இருக்குமாயின், அது தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன்னிறுத்த முடியும் என சர்வதேச சட்டநிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால், இது குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு மீது சர்வதேச சமூகம் பாரியளவில் நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை. இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஒருபக்கச் சார்பாக அமைந்துள்ளதாக சர்வதேச சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இக்குற்றல் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை நீதியின் முன்னிறுத்த வேண்டும் என சர்வதேச ரீதியில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது இது குறித்த சாதகமான சமிஞ்சையை வெளிப்படுத்துவதாக சர்வதேச குற்றவியல் சட்டநிபுணரான Goran Sluiter தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்வேறு அதிகார மட்டங்களுக்கு இடையிலான நடைமுறைகளைக் கொண்டதாக இவ்வழக்குகள் அமைந்துள்ள நிலையில் நீண்ட காலத்தை எடுப்பதுடன், செலவு கூடியதாகவும் அமையும் என அவர் கூறியுள்ளார்.

ஆயினும், இவ்வழக்குகளை தேசிய மட்டத்தில் விவாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது வெற்றி பொறாது போவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அணுகுவதே பொருத்தமானதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற நீதிமன்றங்களே பொருத்தமான இடங்களாக அமைந்துள்ளன.

அத்துடன் இவ்வழக்குகள் குறித்த விசாரணைகளை தேசிய ரீதியில் நடத்தும் போது இக்குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் பெறக்கூடிய நன்மைகள் தவிர்க்கப்பட்டு நியாயமான விசாரணைகளை மேற்கொள்ளக்கூடிய இடமாக இவை அமைந்துள்ளன' என Richard Walker தனது செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={EA3507E6-2359-445A-A1BA-A9AB655BFCA7}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.