Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா தனது கடல்வளங்களை இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்காது - அமைச்சர் றாஜித சேனரட்ண

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

india-sri-lanka-flags.jpg

இந்திய மற்றும் சிறிலங்கா மீனவர்கள் தமக்குச் சொந்தமான கடல்களில் மற்றைய நாட்டு மீனவர்களை மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கேற்ற வகையில்முன்னர் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியவரும் தற்போது வோசிங்டனுக்கான இந்தியாவின் தூதருமாகிய நிரூபமா ராவ் பரிந்துரை ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இவ்விரு நாடுகளிற்கும் சொந்தமான கடலில் உள்ள மீன்பிடி வளங்களை பரஸ்பரம் இரு நாட்டு மீனவர்களும் பகிர்ந்து கொள்வதற்கேற்ற வகையில் இந்தியாவால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை சனிக்கிழமையன்று சிறிலங்கா ஏற்க மறுத்துள்ளது.

"சிறிலங்காவிற்குச் சொந்தமான கடலில் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான விட்டுக்கொடுப்புக்களை செய்ய முடியாது" என சிறிலங்காவின் மீன்பிடி அமைச்சர் றாஜித சேனரட்ண தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் மீன்பிடிப் பிரச்சனைகள் தொடர்பாக கொழும்பில் நடைபெறவுள்ள இந்திய – சிறிலங்கா பேச்சுக்களை முன்னிட்டே சிறிலங்காவின் மீன்பிடித்துறை அமைச்சர் இவ்வாறான கடும்போக்கை எடுத்துள்ளார்.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியவரும் தற்போது வோசிங்டனுக்கான இந்தியத் தூதராகக் கடமையாற்றுபவருமான நிரூபாமா ராவ், இரு நாட்டு மீனவர்களும் தமது நாடுகளின் கடல்களில் மற்றைய நாட்டு மீனவர்களை மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்குவதேற்கேற்ற வகையில் ஒழுங்குகளை முன்னர் மேற்கொண்டிருந்தார்.

சிறிலங்கா மீனவர்கள் இந்தியக் கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பதற்குச் செல்லமாட்டார்கள் என்பதை சிறிலங்கா உறுதிசெய்யும் அதேவேளையில், சிறிலங்காவிற்குச் சொந்தமான கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் உள்நுழையக்கூடாது எனவும் சேனரட்ண தெரிவித்துள்ளார்.

இந்தியாவையும், சிறிலங்காவையும் பிரிக்கின்ற கடல் எல்லையான பாக்குநீரிணையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதானது விவாதத்திற்குரிய விடமாக உள்ளது.

இரு நாட்டு கடற்படையினரும் கண்காணித்துப் பராமரிக்க வேண்டிய அனைத்துலக கடல் எல்லைக் கோட்டை அடிப்படையாகக் கொண்டே இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாட்டின் கடல் எல்லைகளும் பிரிக்கப்பட்டுள்ளன.

எதுஎவ்வாறிருப்பினும், இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களும் தமது கடல் எல்லையை மீறி மற்றைய நாட்டின் கடல் எல்லைக்குள் செல்வதால் சிலவேளைகளில் அவர்கள் கைது செய்யப்படுகின்ற, சட்ட நடவடிக்கையின் பொருட்டு தடுத்து வைக்கப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இப்பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக வெள்ளியன்று இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி அமைச்சுக்கள் கொழும்பில் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளனர்.

சிறிலங்கா தரப்பில் வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம, மீன்பிடி அமைச்சின் மேலதிக செயலாளர் சாந்த பண்டார ஆகியோர் இப்பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளனர். இதேவேளையில், இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் 76 இற்கும் மேற்பட்ட சிறிலங்கா மீனவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இரு நாட்டுப் பிரதிநிதிகளினதும் சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள 35 சிறிலங்கா மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விடுதலை செய்யப்பட்ட 10 சிறிலங்கா மீனவர்கள அடங்கிய குழுவொன்று கடந்த பிற்பகல் காங்கேசன்துறையை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்தி வழிமூலம்: South Asian News Agency

http://www.eeladhesa...ndex.php?option

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.