Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதநேயப் பணிகள் வன்னி மண்ணில் முன்னெடுக்கப்படாமல் இருப்பதேன்?

Featured Replies

மனிதநேயப் பணிகள் வன்னி மண்ணில் முன்னெடுக்கப்படாமல் இருப்பதேன்?

இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீதி விபத்தொன்றில் சிக்கி மயிழையில் உயர் தப்பியிருந்தார் ஒருவர். அவருக்கு ஏற்கெனவே ஒரு கால் இல்லை. விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படையினருக்குமிடையில் வன்னிப் பகுதியில் நடைபெற்ற மோதலின்போது அவருடைய கால் சிதைந்து போயிற்று.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக ஒரு காலத்தில் செயற்பட்ட அவர் தற்போது விறகு வெட்டியாகிச் சீவியம் நடத்துகிறார். சைக்கிளில் விறகை ஏற்றிச் செல்லும் போதே அவர் விபத்தில் சிக்கியிருக்கிறார்.

இதுபோல, போரிலும் போரின் காரணமாகவும் உடல் உறுப்புக்களை இழந்தோராகப் பல ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போதே கையை இழந்தவர், ஆறுமாதப் பருவத்தில் காலை இழந்த குழந்தை தொடக்கம் முதியவர்கள் வரை பல பருவத்தினரும் அங்கவீனர்களாகியிருக்கின்றனர். அது மட்டுமல்ல ஆண், பெண் என்ற பால் வேறுபாடுகளின்றிய நிலையில் சகலரையும் போர் பாதித்திருக்கிறது. அவர்களுடைய உடல் உறுப்புகளையும் அது தின்றிருக்கிறது. தின்றுவிட்டு அவர்களை அநாதரவான நிலையில் கைவிட்டுள்ளது. காலிழந்தவர்கள், கையிழந்தவர்கள், கண்ணிழந்தவர்கள், காது கேட்காத நிலைக்குத் தள்ளப்பட்டோர் என இந்தப்பட்டியல்கள் பல வகையில் உண்டு.

அதிலும் இரண்டு கால்களையும் இழந்தவர்கள், இரண்டு கைகளையும் இழந்தவர்கள், இடுப்புக்குக் கீழே இயங்க முடியாதவர்கள் என்றிருப்போரின் தொகையும் நூற்றுக்கணக்கில் உள்ளன.

இவர்கள் தங்களுடைய சுயகாயங்களையே பார்க்கடியாத நிலையில் சிரமப்படுகின்றனர். குளிப்பதற்கு ஒரு வாளி தண்ணீரை அள்ள முடியாத நிலையில் பலர் இருக்கின்றார்கள். சாப்பிடுவதற்குக் கூட மற்றவர்களுடைய உதவியை எதிர்பார்பவர்கள் பலர். உடைமாற்றுவதற்கு, மலசலம் கழிப்பதற்குக் கூட பிறரை எதிர்பார்த்திருத்தல். இது போல எல்லாவற்றுக்கும் ஏதோவொரு வகையில் யாரையாவது எதிர்பார்த்து வாழவேண்டிய ஒரு நிலையில் இவர்கள்.

இப்படியிருப்போரின் எதிர்காலம் எப்படியிருக்கும்? கடந்த காலத்தின் பலியிடல்கள் நிகழ்காலத்தில் இவர்களை அநாதரவான நிலைக்குத் தள்ளியுள்ளன.

இதனால் இவர்களுடைய நிகழ்காலம் மட்டுமல்ல, எதிர்காலம் கேள்விக்குறியின் முன்னேயே நிற்கிறது.

இலங்கையில் நடைபெற்ற போர் வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல நாட்டில் பெரும்பாலான இடங்களிலும் இந்தமாதியான அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

படையினர் தொடக்கம் விடுதலை இயக்கப் போராளிகள் வரை இந்தப் பாதிப்புக்கு உட்பட்டுள்ளனர்.

ஆனால், வடக்குக் கிழக்கில்தான் இதனுடைய பாதிப்பு அல்லது தாக்கம் கூடுதலாக இருக்கிறது. போரின் காரணமாக பொதுமக்களாக இருந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் தீவிரமடைந்தபோது அதன் விளைவை அதிகமாக அனுபவித்தவர்கள் பொது சனங்களே.

இப்பொழுது போர் ஓய்ந்து விட்டது. போருக்குப் பின்னரான மறுவாழ்வுப் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால், இந்தப் பணிகள் மிக மந்தகதியிலானவை.

அத்துடன் ஒழுங்கமைக்கப்படாதவை. ஏதோ பேரளவுக்கு என்ற அளவில் நடப்பவை. எனவேதான் இந்தமாதிரியான உச்சக்கட்ட பாதிப்புக்களுக்கான நிவாரணம் வழங்கப்படாதிருக்கிறது.

அதாவது, பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அங்கவீனர்களைப் பொறுத்து எத்தகைய முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் எந்தத் தரப்பினராலும் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

ஆனால், உடலுறுப்புகளை இழந்த படையினருக்கான நிவாரணமாக அல்லது அவர்களுடைய சேமநலனைக் கவனத்திற்கொண்டு அரசாங்கம் ஒரு சிறப்புத்திட்டத்தையும் மக்கள் மட்டத்திலான நிதிச் சேகரிப்பு நடவடிக்கையையும் அரச நிதி ஒதுக்கீட்டையும் செய்திருந்தது.

உடலுறுப்புக்களை இழந்த படையினருக்கான விசேட கொடுப்பனவுகள் முதல் பல விடயங்களிலும் முன்னுரிமைகள் விசேடமளிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கூடியதாகவுள்ளது.

ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் போரின் காரணமாக ஏற்பட்ட உடலுறுப்பு இழப்பிற்கு அவர்களுக்கு எத்தகைய உதவித்திட்டங்களும் இருப்பதாகத் தெயவில்லை.

பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளென்ற வகையில், எத்தகைய அரச உதவிகளும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.

அதைப்போல புலம்பெயர் தமிழ் மக்களின் ஒழுங்கமைக்கப்பட்ட நிதி, மற்றும் வாழ்வாதார உதவிகளோ உள்ளூர் அமைப்புகளின் உதவிகளோ சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவிகளோ குறிப்பிடக்கூடிய அளவில் கிடைப்பதாக இல்லை.

போரினால் அங்கவீனமடைந்தவர்களின் நிலமையைக் கருத்திற்கொண்டே 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் பல்வேறு உதவி அமைப்புகளும் உதவித்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டன.

ஏனெனில், போர் முடிந்ததற்குப் பின்னரும் போரின் விளைவான அனர்த்தங்களை அதிகளவில் அனுபவிப்பவர்கள் போர்க்காலத்தில் உடலுறுப்புகளை இழந்தோரே. ஆகவேதான் அவர்களுக்கான நிவாரணம் குறித்து கூடுதல் அக்கறை கொள்ளப்படுகிறது. போரினால் ஏற்படுகின்ற பிற அழிவுகளை ஓரளவிற்கு புனரமைக்கலாம் அல்லது மீளக் கட்டியெழுப்பலாம். ஆனால், உயிரிழப்புகளையும் உடல் உறுப்பு இழப்புகளையும் எதன் மூலமும் ஈடுசெய்ய முடியாது.

இந்த நிலையில் உடல் உறுப்பு இழப்பு என்பது அவர்கள் வாழும் காலம் வரை அவர்களைத் தொடர்ந்து பாதித்துக்கொண்டிருக்கும் ஒரு பெரிய பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காணவேண்டுமாக இருந்தால், நிலையான உதவித்திட்டங்கள் அவசியம்.

அதைப்போல பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கை மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு இவர்கள் சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கான பொருத்தமான பயிற்சித் திட்டங்கள், உதவித்திட்டங்கள், ஆதாரத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அதற்கு பாதிக்கப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு மிக அவசியம். அந்தக் கணக்கெடுப்பில் பாதிப்புகளின் முழு விபரங்களும் இனங்காணப்படும்.

குறிப்பாக குழந்தைப் பராயம் அல்லது சிறு பராயத்தில் உடலுறுப்புகளை இழந்தோர், உழைப்பாளிகளாக இருப்போரில் உடல் உறுப்புக்களை இழந்தோர், முதியோரில் உடல் உறுப்புக்களை இழந்தோர் போன்றவை ஒருவகையாகவும், கண்ணிழந்தோர், கையிழந்தோர், காலிழந்தோர், உடலியக்கம் இழந்தோர் என எந்த மாதியான பாதிப்புகளுக்கு உட்பட்டோர் என்ற வகை மாதிரிகளையும் அறியக் கூடியதாக இருக்கும்.

இத்தகைய ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டாலே அதற்குய வகையிலான திட்டத்தை வகுத்து அதற்கான நிதியை ஒதுக்க முடியும். ஆனால், இந்த ஆரம்பப் பணிகளைப் போல இதுவரையில் அதாவது, போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் எந்தத் தரப்பினாலும் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இது உண்மையில் கண்டனத்திற்குரியதும் கூட.

அரசாங்கம் இதனை பொறுப்புடன் செயற்படுத்தவில்லை என்றால் அரசுக்குச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், பொது அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும் உரியது. ஆனால், இவர்கள் கூட இந்த விடயத்தில் மந்தமாக இருந்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் உடல் உறுப்புக்களை இழந்தவர்களுக்கான பலவகையான தொழிற்பயிற்சித் திட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

இலத்திரனியல் கற்கை, கணனிக் கற்கை, இசை ஓவியம் நாடகம் ஊடகவியல் மற்றும் கலைத்துறைக் கற்கை, படகு கட்டுமானம், மின் இணைப்பு, நீர்வழங்கல், விவசாய மேம்பாடு, கட்டுமான கற்கைநெறி, இயந்திரவியல் எனப்பல தொழிற்கல்வி நடவடிக்கைகளும் மற்றும் உயர்கல்விக்கான சிறப்பு ஏற்பாடுகளும் அப்போது அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் மூலம் உடல் உறுப்புகளை இழந்தோர் தங்கள் பாதிப்பின் கனதியை உணராத வகையில் வாழ்வில் இணைந்து செயற்படக் கூடிய உளவுரனையும், செயற்றிறனையும் கொண்டிருந்தனர்.

கடுமையான பாதிப்புக்குள்ளாகி இயங்க முடியாதிருப்போருக்கும் நிச்சயமாக இன்னொருவன் உதவி தேவைப்படுவோருக்கும கூட அவர்கள் உரிய சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதனால், வாழ்வை சுமையெனக் கருதும் உளத்தாக்கத்திலிருந்து பாதிக்கப்பட்டோரை அவர்கள் பாதுகாத்தனர்.

அத்தகைய செயற்றிட்டங்கள் எதுவும் இன்றில்லை. ஆனால், அப்போதிருந்ததையும் விட இன்று பல திட்டங்கள் விசேடமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகின்றன. ஏனெனில், இறுதிப்போரின் போதே ஏராளமானோர் அதியுச்சப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.

பாதிப்புகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதால் மட்டும் பாதிப்புகளின் கனதி குறைந்துவிடுவதில்லை. மட்டுமல்ல பாதிக்கப்பட்டோருக்கு அந்தப் பேச்சுகள் எத்தகைய நன்மைகளையும் ஏற்படுத்தி விடுவதுமில்லை. ஆனால், இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அதாவது, வெறும் பேச்சு என்ற அளவில் பாதிக்கப்பட்டோரைப் பற்றி பேசும் சூழலே இன்று வலுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அந்தப் பாதிப்புக்களில் இருந்து மீள முடியாத நிலையில் மேலும் மேலும் பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

வன்னியில் எந்தத் தெருவிலே எந்த வேளையில் நீங்கள் சென்றாலும் அங்கே கையில்லாத, அல்லது காலில்லாத அல்லது கண்ணை இழந்த பலரை நீங்கள் சந்திக்காமல் செல்ல முடியாது.

அவர்கள் புழுதி நிரம்பிய தெருக்களிலும், இருள் நிரம்பிய வீடுகளிலும், காடும் புதருமாகவிருக்கும் ஊர்களிலும் தங்கள் ஒவ்வொரு நாள் பொழுதைக் கழிப்பதற்காகவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

பிரான்ஸைச் சேர்ந்த “கன்டிக்கேப்' போன்ற சில தொண்டர் அமைப்புகளைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க எந்த அமைப்பும் எத்தகைய உதவிகளையும் எத்தகைய நலத்திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை.

போரின் காரணமாக எதிர்பார்த்திராத ஒரு தருணத்தில் ஏற்பட்ட போர் அனர்த்தத்தினால் மிகச் சிறுவயதிலேயே (குழந்தைப் பராயத்திலேயே) உடல் உறுப்பை இழந்தோர் வாழ்க்கை ழுக்க துயர் தோய்ந்த நிலையில் வாழத்தான் வேண்டுமா?

இந்த நிலமை தொடர்பாக அண்மையில் சர்வதேசத் தொண்டு நிறுவனமொன்றின் அதிகாரிகளுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, தாங்கள் இத்தகைய பாதிப்புகள் குறித்து கவனமெடுக்க முடியுமென்றும் அதற்கு சரியான புள்ளிவிபரங்கள் தேவையென்றும் அதைச் செயற்படுத்துவதற்கு அரசியல் தரப்பு அல்லது அரச நிர்வாகமே பொறுப்பெடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்கள்.

தாம் தனித்து இத்தகைய புள்ளிவிபரங்களைத் திரட்டுவதற்கான பொறுப்புடையவர்கள் இல்லையென்றும் அது நிர்வாக ரீதியாகவும் பணிரீதியாகவும் பல சிக்கல்களை ஏற்படுத்துமென்றும் அவர்கள் மேலும் தெவித்தனர்.

எனினும், இந்த நிலமை தங்களுக்கு மிகுந்த துயரத்தைத் தருவதாகவும் இதைத் தாம் புரிந்து கொள்வதாகவும் அவர்கள் கூறினர். மனமிருந்தாலும் அவர்களால் சில விடயங்களைச் செய்ய முடியாத நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.

இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயக் கட்சி போன்ற பிரதான கட்சிகளுடன் ஏனைய தமிழ் அரசியலாளர்களும் இதுகுறித்து தீவிர கவனம் எடுக்கவேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசுவது மட்டும் தமிழ் அரசியல் கட்சிகளின் பணியாகாது. அதற்கப்பால் மக்களுக்கான மனிதநேயப் பணியாற்றுவதும் காலத்தின் கட்டாயமாகும்.

உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

இங்கே உடுக்கை மட்டுமல்ல கையையே இழந்தவர்களுக்கு கைகொடுங்கள்.

கால்களை இழந்தவர்கள் தங்கள் வாழ்வில் பலம் பெறுவதற்கு ஆதாரக் கால்களை வழங்குங்கள் என்று மாற்றுவலுவுடையோரின் நிகழ்வு ஒன்றில் இரண்டு கால்களையும் இழந்த பரந்தனைச் சேர்ந்த நாகராசா என்பவர் விடுத்த உருக்கமான கோரிக்கை எல்லோருக்கும் சமர்ப்பணம்.

ஆக்கம்: அரவிந்தன்

மூலம்: வீரகேசரி – ஐப்பசி 2, 2011

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.