Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ் நிகழ்வின் முக்கியத்துவம். (பொங்கு தமிழ் பற்றிய ஒரு பார்வை……)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

t-pongkutamil swiss (13).jpgt-pongkutamil swiss (10).jpg

தமிழரின் ஒவ்வெரு நிகழ்வுகளிற்கும் பல அர்த்தங்கள் இருக்கும் அந்த வகையில் இதற்கும் உண்டு. பொங்கு தமிழ் நிகழ்வானது 17.தை.2001ம் ஆண்டு யாழ்பல்கலைக் களகத்தில் முதல் முதலாக பெங்கு தமிழ் நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் வடக்குக்கிழக்கில் 08 மாவட்டங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் கருப்பொருள் „தமிழினத்தின் விடுதலையை வீறு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட மக்கள் எழுச்சி நாள்“ இதன் நோக்கம்-மக்கள் தமது உள்ளக்குமுறல்களை(உள்ளவுணர்வுகளை) எதிரிக்கும், வெளியுலகுக்கும் எடுத்தியம்பி, நீதிகேட் பதாகும். இதன் செயற்பாடு – ஒவ்வொருவரின் உள்ளத்திலிருந்தும் வெளியில் எடுத்தியம்ப வைப்ப தேயாகும். எனவே உணர்வு கொண்ட தமிழினத்தின் உணர்வுகளை தமிழ் நெஞ்சங்களில் நிறுத்தி உலகவாழ் இதயங்களிற்கும், எமது உணர்வுகளை புரியாத உறவுகளிற்கும், உலக வாழ் அரசியல் தலைவர்களிற்கும், வெளிப்படுத்துவதே! இனிவரும் பொங்கு தமிழ் நிகழ்வுகளின் வெளிப்பாடாகும்.

பொங்கு தமிழ் நிகழ்வு nஐனிவாவில் நடைபெறுவதன் நோக்கம் சகல நாடுகளிற்கும், எமது எதிரிக்கும் 2009இற்கு பின்னரும் தமிழினம் இன்னும் தோற்றுவிடவில்லை என்ற செய்தியை கூறி, உலக நாடுகள் மனிதவுரிமையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் வேளையில் எமது இனத்தை துடி,துடிக்க கொன்று குவித்ததையும், சிறுவர்களின் இறப்பு, ஓலமிட்டு செத்துமடிந்ததை சொல்வதா? கயப்பட்டு, ஊணமுற்றவர்களை கூறுவதா? தற்போதும் மக்கள் அச்சத்துடன் வாழ்வதை சொல்வதா? இவ்வாறு பல்வேறு துன்பத்தில் எமது இனம் வாழ்வதை வலியுறுத்தி உலக நாடுகளிற்கு பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடாக வெளிக்காட்டுவது தற்போது அவசியமாகின்றது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக nஐனிவா பொங்கு தமிழ் ஏற்பாட்டையும், அமெரிக்காவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வையும் சிறப்பாக குறிப்பிடலாம்.

தற்போது பொங்கு தமிழ் நிகழ்வு அவசியம் !

17.தை.2001 இல் தொடங்கப்பட்ட போது தமிழினத்திடம் பூகோளரீதியில் சமபலம் காணப்பட்டது. அதாவது இராணுவ,நிர்வாக, அரசியல் ரீதியில் சமபலம் இருந்தபோது தான் தலைவர் மூன்றாம் தர மத்தியில் பேச்சுவாத்தைக்கு சென்றமையும் குறிப்பிடத்தக்கது. ஆவாறான காலகட்டத்தில் மக்களை பொங்கி எழச்செய்தமைக்கு ஒரு காரணமுண்டு அதாவது எமது மக்களிற்கு தேவை என்ன என்பதை உலக நாடுகளிற்கும், எதிரிக்கும் உணர்வுபூர்வமாக எடுத்துக்கூறுவதாகும். இதனை மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு, வீட்டுக்கொருவர் மனவுனர்ந்து வரக்கூடிய சிந்தனையூட்டலை செய்தமை மிகவும் பாராட்டத்தக்கது. இதனால் எதிரிகூட அச்சமடைந்து இராணுவக்கட்டுப் பாட்டுப் பிரதேசங்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு பொங்குதமிழ் நிகழ்வு நடைபெற்ற போது இராணுவமும் பொலிசாரும் குவிக்கப்பட்டு, இராணுவ புலனாய்வு பிரிவு விடியோக்கள் இரகசியமாக எடுக்கப்பட்டு பின்னர் அதில் ஈடுபட்ட பலரை கடத்தியும், சுட்டமையும் இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு நடவடிக்கையும், மனிதவுரிமை மீறும் செயலுமாகும். எனவே அன்று எமது தலைவன் தீர்க்கதரிசனத்துடன் உருவாக்கிய பொங்குதமிழ் நிகழ்வு இன்று மிகவும் அவசியமாக தேவைப்படு வதும் காலத்தின் தேவையுமாக கருதி „உலக தமிழர்களின் கைகளில் பொங்கு தமிழ் நிகழ்வு ஒப்படைக்கப்பட்டுள்ளது“ எனவே தலைவன் வழியில் செல்ல வேண்டுமானால் தமிழராகிய நாம் பொங்கு தமிழ் நிகழ்வை சிறப்பாக எல்லாநாடுகளிலும் நடாத்தி பொங்கி எழவேண்டும். அப்போது தான் தமிழினத்தின் விடிவுகிட்டும். தற்போது உலக நாடுகள் பல எமக்காக குரல் கொடுத்து போராடி வருவதையும், பல தொண்டர் அமைப்புக்கள், சர்வதேச பத்திரிகை சங்கங்கள், ஒலிபரப்பு நிறுவனங்கள், உலகளாவிய அரசாங்க கவுன்சில்கள் எமது இனத்தின் விடுதலைக்காக குரல் கொடுத்து போராடி வரும் வேளையில் உலகத்தமிழர்கள் சிலர் உறங்கிக்கொண்டு இருப்பதுபோல் காணப்படுவது மிகுந்த வேதனையை தருகின்றது. இத்தருனமே தமிழினம் பொங்கி எழவேண்டும். உலகத்தமிழினம் வீட்டுக்கொருவர் பொங்கி எழுந்தால் உலக நாடுகள் மேலும் அழுத்தத்தை ஐநா சபைக்கு கொடுக்க வாய்ப்பாக அமையும். எடுத்துக்காட்டாக nஐனீவா, அமெரிக்கா போன்ற இடங்களில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளின் தாக்கத்தை குறிப்பிடலாம்.

nஐனிவாவில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வின் ஒரு கண்ணோட்டம்.

பொங்கு தமிழ் நிகழ்வு nஐனிவாவில் நடாத்தப்பட்டமை முக்கியமான இடத்தேர்வு எனக்கருத முடியும். காரணம் உலகத்தலைவர்கள் கூடுமிடம், உலக அரசாங்க பிரதிநிதிகள் தங்குமிடம், மனிதவுரிமைகள் பற்றி சர்வதேச நாடுகள் பேசிக்கொண்டிருந்த நேரம். இதனால் சரியான நேரத்தில் சரியான இடத்தில் தமிழினம் என்னும் ஒயவில்லை என்ற செய்தியை மீண்டும் ஒருமுறை ஐ.நா. சபைக்கும், சர்வதேசத்திற்கும் தெளிவாக காட்டியதுடன், ஆறு வகையான கோரிக்கைகளை முன் வைத்து அதற்கான பிரதிகளையும் ஐ.நா. சபையிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது. எமது மக்கள் பொங்கி எழுந்து ஊர்வலமாக பறைசாற்றி தமது உள்ளக்குமுறல்களையும் வீதி வழியாக கோசமிட்டனர் இதனை ஐ.நா. இரு கவலாளிகள் மேல்மாடியில் நின்று வீடியோ எடுத்தும் போட்டோ எடுத்தும் நிலமையை தொலைபேசியில் கூறியும் வந்தனர். இதன் மூலம் பொங்கு தமிழின் முக்கியத் துவம் தெளிவாகின்றது. இதில் முக்கியமாக மக்களின் மனங்களில் பொங்கி எழுந்தவை „எங்களுக்குத் தேவை சுதந்திர தமிழீழம்“ எங்கள் தலைவன் பிரபாகரன்“ என்ற மக்கள் முழக்கம் பொங்கியேழ! பறையடித்து, வான்வாத்தியத்துடன் எமது தேசியக்கொடி அணிவகுத்து சென்றமை ஐரோப்பிய வாழ்மக்களையும், செய்தியாளர்களையும் மனங்களை தட்டியெழுப்பியது.அதுமட்டுமல்ல ஐரோப்பிய கவுண்சில் உறுப்பினர்களின் உரைகள்(வெள்ளைகாரர்) எமது உரிமைக்கான போராட்டம் ஏற்றுக்கொள்ளத்தக்கது, அதற்கான காலம் மிகவிரைவில் வரும் அதனைஅடைய தாங்களும் போராடுவோம்; தமிழர்களும் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்தனர். எனவே பிரிவினையை மறந்து ஒற்றுமைப்படுவது காலத்தின் தேவையாகும்.

பொங்கு தமிழ் நிகழ்வுகளினால் எதிரியின் அச்சம் – சனாதிபதி மகிந்தா அவர்கள் நியோக்கில் தனது உரையை முன்கூட்டி தருமாறு ஐ.நா. சபையிடம் கோரியமையும், இதனால் சவேந்திர சில்வா – மகிந்தா முறுகல் ஏற்பட்டமையும். nஐனிவாவில் சிறிலங்கா பிரதிநிதிகள் வெளியில் வரத்தடை செய்யப்பட்டமையும், போன்ற பல அச்சநிலமையை வெளிக்காட்டியுள்ளது. இதேபோல் முசிலிம் காங்கிரசு தலைவர் ஹக்கிம் அவர்கள் அம்பாறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூட்டமைப்பு எங்களை புறக்கனிப்பதாகவும் கூட்டனியின் தந்தை செல்வா காலத்தில் முசிலிம் மக்களும் தமிழ் மக்களும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்தோம் என புலம்பியதன் கருத்து என்ன? தமிழினத்தின் விடுதலை சர்வதேச மட்டத்திற்கு சென்று விட்டது அதற்கான தீர்வு வரக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதால் புலம்பத்தொடங்கியுள்ளார் ஹக்கிம். இவர் ஒன்றை மறந்து விட்டார் தலைவர் பிராபாகரன் கிளிநொச்சியில் கூப்பிட்டு நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடாத்தி சில தீர்க்கதருசனமான முடிவுகளை கூறியிருந்தார் அதனை செய்திருந்தால் இன்று ஏன் இந்த அபலக்குரல்?

இறுதியாக மக்களிற்கு ஒர் வேண்டுகோள் !

தற்போதைய காலச்சூழ்நிலையை தமிழினம் கருத்தில் கொண்டு நடந்துகொள்வது மிக அவசியம். அதாவது சர்வதேச அரசியலில் எமது பிரச்சனை சென்று கொண்டிருக்கின்றது. சர்வதேச அரசியல் தலைவர்கள், அரசியலில் ஈடுபடுவோர், அந்தநாட்டு மக்கள், பத்திரிகைகள், ஒலிபரப்புச்சேவைகள் போன்ற பல்கோணத்தில் தமிழ் மக்களின் கொடுமைகள், பிரச்சனைகள் தெளிவாக புரிந்து சனநாயக வடிவிலும், இராஐதந்திர ரீதியிலும் போராட்டத்தை வெளிநாட்டவர்கள் எமக்காக குரல்கொடுக்க நாம் அமைதியாக சுயநலத்துடன் கருசனையின்றி இருப்பதை ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களும் உண்ணும் போதும், உறங்கும் போதும் சிந்தியுங்கள், விடிந்தால் நல்லமுடிவுவரும், அல்லது நல்ல சிந்தனை பிறக்கும். அப்போது தான் விடிவு விரைந்து எம்மை நோக்கி வரும்.இல்லையேன் எதிரி இதனை சாதகமாக்கி மீண்டும் எமது இனம் அடிமைகளாக வாழத்தலைப்படும்.

இதேபோல் நடைபெறும் கூட்டங்களில் தமிழ் மக்கள் பங்குபற்றுவது மிக குறைவாக காணப்படுவது ஏன்? பல்வேறு குறைபாடுகளை கூறி கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. சிலர் வேலை என்ற சாட்டை கூறுவது. ஆனால் 2009க்கு முன் இவ்வாறான குறையோ, சாட்டோ இருக்கவில்லை ஆனால் இப்பமட்டும் சாட்டை கூறி தமிழினத்திற்கு(எதிர்கால சந்ததிகளிற்கு) தூரோகம் செய்யாதீர்கள். ஒரு நிகழ்வு ஏன் நடாத்தப்படுகிறது? அதன் நோக்கம் என்ன? இதனால் எமது இனத்திற்கு நன்மையுண்டா? போன்ற பல வினாக்களை தொடுத்தால் ஒரு நிகழ்வின் எண்ணக்கரு தெளிவாகும். ஆதற்கு சமூகமளியுங்கள், யார் நடத்துவது என்பதைவிட அதன் பயனை சிந்தியுங்கள் ஒற்றுமை தனாக வரும் அதனை விடுத்து தேவையற்ற விமர்சனங்களை செய்வதால் தலைவனின் இலட்சியத்தை எப்படி அடையமுடியும். „யார் குத்தினாலும் அரிசியானால் சரி“ என்ற முடிவை மக்கள் மனதில் வளர்ப்பதன் மூலம் சர்வதேசங்களிற்கு நாம் ஒற்றுமையை தற்போது காட்டுவது மிகவும் அவசியம். ஆகவே எதிர்வரும் காலங்களில் உலகத்தமிழினம் தமது ஒற்றுமையை காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கட்டுரையை நிறைவுசெய்கின்றேன்.

நன்றி கதிரவனுக்காக வன்னி முழக்கம்.

http://mykathiravan.com/ta-news/?p=15918

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.